Wednesday, 3 August 2016

ஜோதிட பலாபலன் பாடம் -1

இதை முழுமையாக வாசிக்காமல் லைக் செய்வோர் ஜோதிடர் அல்ல....

ஜோதிடர் எனில் ஜோதிட ஆர்வலர் எனில் அதிலும் ஜோதிடம் பயிலும் மாணவர்கள் எனில் அவசியம் படிக்கவும் ..கற்போம் ஜோதிடம்
ஜோதிட ஆர்வலர்கள் மற்றும் ஜோதிட மாணவர்கள் அறிந்து கொள்ள உதாரண ஜாதகம் இது..

சில வாரங்களுக்கு முன் இந்த ஜாதகம் என்னிடம் பலாபலனை காண வந்தது..இன்று இவருக்கு 40 வயது பூர்த்தி அடைகிறது ..[ 28-07-76 காலை 6-02 நிமிடம் ..பிறந்த ஊர் கோவை ]
இன்னும் கூட திருமணம் அமையவில்லை என்ற காரணம் ஆகவே ஜோதிடம் பார்க்க வந்தார்கள் …

பல்வேறுபட்ட ஜோதிடரை சந்தித்த பின்னரே எம்மை அணுகி உள்ளார்கள்..
இத்தகைய அமைப்பில் பிறந்தால் அவர்கள் வாழ்வாதாரம் குடும்பம் குழந்தை எப்படி இருக்கும் எனும் ஆய்வை செய்வோம்..

ஆய்வுகளை தொடர்வோம் ..

கடக லக்னம் :- இதற்க்கு யோகர்கள் செவ்வாயும் குருவும் தான் ..
பாதகாதிபதி சுக்கிரன் [இயற்கையில் சுபர் ஆன சுக்கிரனும் கடகலக்னத்தில் ராசியில் பிறந்தவர்களுக்கு பாவரே] ஒரு மனிதனுக்கு தன் வம்ச விருத்திக்கு வாரிசு அமைய வேண்டும் எனில் முதல் மனைவி தேவை …

மனைவியால் கிடைக்கும் காமம் தேவை …சரி மனைவியை காமத்தை கொடுப்பது எது எனில் அது ஏழாம் பாவமே. அந்த ஏழாம் இடத்தின் அதிபர் சனி இருப்பது லக்னத்தில் [ஸ்புடம் 102-56 ல்] சனி தொலைதூரத்தில் இருந்து இந்த லக்னத்திற்க்கு தன் பலத்தை செலுத்தும் போது அதை வரும் வழியில் பலம் குன்ற வைத்தது உடன் இணைவு பெற்ற சூர்யன் [ ஸ்புடம் 101-38ல்] ஆக ஏழாம் இடத்து அதிபரால் கிடைக்கப்பெறும் பலன்கள் அனைத்தும் கிட்டாமல் போனது ..
அப்படி
இரண்டாம் (குடும்பம்)
அதிபர் சூர்யன் அம்சத்தில் நீசம்
ஏழாம் அதிபர் சனி அம்சத்தில் உச்சம் எனில் இவர் தாலி கட்டும்
மனைவிக்கு அது மறு திருமணம் ஆகவும் இருக்கும்..

ஜாதி மாறிய திருமணம் கூட அமையலாம் இது பொது ஜோதிட விதி....

விதி லக்னம் ] அற்று போனவர்க்கு மதியை [சந்திரன்] பார்த்து சொல்லு என்பார்கள் ..

ஆனால் மதி எனும் சந்திரன் நிலை?? லக்ன ராசிக்கு 3ம் மற்றும் 12ம் அதிபர் புதன் சேர்க்கை [ஸ்புடம் 114-48ல்] இயற்கை சுபர் ஆன சுக்கிரனும் இந்த ராசி லக்னத்திற்க்கு பாவர் [ சுக்கிரன் ஸ்புடம் 112-37ல்] ஆக ஸ்புடகலை ரீதியாக பார்க்க புதனுக்கும்[ 114-48] சுக்கிரனுக்கும் [112-37ல்] இடையை சிக்கிய சந்திரன் வளர்பிறை துவிதியை ஆனாலும் [ஸ்புடம் 113-51] தன் பலத்தை முழுமையாக இழக்கிறார்.. 

ஐந்தாம் அதிபர் செவ்வாய் இரண்டில் அமைந்தாலும் அவர் அமைந்த நட்சத்திரம் கடக லக்ன பாதகாதிபதி சுக்கிரனின் பூரம் நட்சத்திரம் 3ம் பாதம் [ கடக லக்னத்தை பொருத்தவரை அம்சத்தில் புத்திர ஸ்தான அதிபர் செவ்வாய் புதனின் வீட்டில் அமையும் எந்தவொரு ஜாதகருக்கும் கொள்ளி இட பிள்ளை இல்லை எனும் பொருளில் பிறக்கும் குழந்தைகள் எல்லாம் சிலருக்கு பெண் குழந்தைகள் ஆகவே இருக்கும் ]
அடுத்தபடியாக இவர் கடந்து வந்த கால கட்டம்
புதன் திசை 7 வயது 10 மாதம் வரை
கேது திசை 14 வயது 10 மாதம் வரை
சுக்கிரன் திசை 34 வயது 10 மாதம் வரை [ கடகத்தில் பிறந்தாலே சுக்கிரனால் எந்தவொரு நற்பலனும் இல்லை என்பதால் அந்த திசையில் நற்பலனும் இல்லை ]
பொதுவாக கால சர்ப்ப தோசத்தில் பிறந்தாலே 33 வயதுக்கு மேலே தான் நல்லதொரு முன்னேற்றம் ஜாதகருக்கு கிடைக்கும்
ஆக 34 வயது 10 மாதம் கழித்தும் பல இடங்களில் தேடியும் இன்னும் திருமணம் இல்லை என்பதாலும் யார் என்ன பரிகாரம் சொன்னாலும் தேடி சென்று செய்வது யார் நன்றாக ஜோதிடம் பார்க்கிறார்கள் என்றாலும் தேடி சென்று பார்ப்பதும் இவருடைய தலையாத வேலை ஆகவே அமைந்து விட்டது [ கடக சூர்யன் இரண்டாம் அதிபர் ஆக இருந்து சூர்யன் அம்சத்தில் நீசம் அடைந்தால் அந்த திசையில் அவர்கள் ஆலய பணிக்கு அதிகமான செலவுகளை செய்வார்கள் என்பதும் ஒரு காரணம் ஆகும்]
யாரோ பெருந்துறையில் Astro Senthil Kumar இடத்தில் ஒருமுறை சென்று ஜோதிடம் பார் என சொல்லி அனுப்பி உள்ளார்கள் ..

[ ஆஹா!!! நம்பளையுமா இந்த உலகம் நம்புது ??]சரி சரி
தற்போது இவருக்கு சூர்யதிசையில் சுக்கிர புக்தி நடப்பு 29-05-2016 வரை நானும் மற்ற ஜோதிடரை போல உடனே பரிகார முறைகளை சொல்லி எனக்கு தெரிந்த ஐய்யர் இருக்கிறார் என அழைக்கவில்லை ..

ஆடியில் வாடிக்கையாளர் வருகை சற்றே குறைவு என்பதால் சற்றே நேரம் இருப்பதால் இங்கு பதியப்படும் அனைத்து கருத்தும் அவர்கள் இடத்தில் பலாபலனாக சொல்லிய கருத்துக்களே தான்.. 

ஆயில்யத்தில் பிறந்தவர்களுக்கு நான்காம் திசை ஆன சூர்யதிசை யோகம் தர வேண்டும் ஆனால் சனி சேர்க்கை அம்சத்தில் நீசம் போன்ற காரணம் ஆக 40 வயது 10 மாதம் முடியும் வரை சூர்யதிசை சுக்கிர புக்தியால் இவருக்கு நற்பயனை தரும் வாய்ப்புகள் குறைவு தான் என்பதும் ..

அடுத்தபடியாக துவங்கும் ஐந்தாம் திசை ஆன சந்திர திசையில் சந்திர புக்தியில் குறிப்பாக ராகு அந்திரம் நடக்கும் போது [ 11-07-2017 முதல் 26-08-2017 வரை] அல்லது குரு அந்திரம் [ 26-08-2017 முதல் 5-10-2017 வரை ] இந்த இரு அந்திரத்தில் திருமணம் நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என ஆருடம் சொல்லி இருக்கிறேன் .. 

இதற்க்கு காரணம் ராகு யோகி என்பதும் கடக லக்னத்தின் யோகராக அமைந்த குரு தன் அந்திரத்தில் கூட விவாஹம் செய்ய வாய்ப்புகள் உள்ளது என்பதும் ஒரு காரணம் ஆகும்..

அதுவும் தவிர 3/11 ஆக இருக்கும் கிரகங்களின் பலாபலன் [ பஞ்சபூத தத்துவம் இதை தான் நான் முழுமையாக நம்புகிறேன் ] எப்போதும் நற்பலனையே தரும் ..
உடனடியாக ஜோதிடர்கள் மத்தியில் ஒரு கேள்வி எழலாம் அது ஏன் சுக்கிரனும் குருவும் 3/11 தானே சுக்கிர திசையில் குரு புக்தியில் ஏன் திருமணம் இல்லை என்ற கேள்வி எழலாம்..

இருக்கிறது விளக்கம் இயற்கையில் சுபர் ஆன சுக்கிரன் கடகத்தின் பாதகாதிபதி என்றாலும் சுக்கிரனுக்கும் குருவுக்கும் எப்போதும் பகைமை என்பதால் கடக லக்ன யோகர் ஆன குரு தன் புக்தியில் கொடுக்க நினைத்த சுபத்தை சுக்கிரன் புக்தியில் கொடுக்க முடியவில்லை [ மனைவியும் காமமும் கிடைக்காமல் போனாலும் வேறு சில நற்பயன் கிட்டி இருக்கிறது அதையும் தெளிவுபடுத்தி கொண்டேன் ]
ஆக சந்திரனும் குருவும் எப்போதும் நட்பு என்பதும் கடக யோகர் குரு என்பதும் திசா நாதன் புக்திநாதன் ஆகியோருக்கு 11ல் 3ல் அமைந்த கிரகம் நல்ல பலனையே தரும் என்பாதாலும் இதுபோன்ற ஜாதகம் காண நேரிட்டால் தில்லாக பலாபலனை சொல்லலாம்…

இது போன்ற ஜாதக அமைப்பில் பிறந்து எவருக்குமே திருமணம் இல்லை என சொல்லி விட முடியாது
மனைவி மற்றும் குழந்தை உடன் கூட ஜாதகர்கள் இருக்கலாம் [ மனைவி உடன் சதா சண்டை அல்லது பிரிவினை ..
பெண் குழந்தைகள் மட்டுமே அல்லது ஆண் வாரிசு இருந்தாலும் அவனால் பயனில்லை என வேதனை அடையும் நிலை என வாழலாம்]..
இந்த ஜாதகத்தில் யோகமே இல்லையா?? என வினா எழும்
சரி இந்த ஜாதகத்தில் இருக்கும் யோகங்கள் என்ன???
அதையும் ஆராய்ந்து தான் பார்ப்போமே???

1] அனபா யோகம் என ஒன்று இருக்கிறது..
கடக லக்னம் / கடக ராசிக்கு இரண்டில் செவ்வாய் இருப்பதால் இந்த அனபா யோகம் ஏற்படுகிறது.. இதன் பலன் செலவுகளை சமாளிக்கும் அளவுக்கு வருமானம் கிடைக்கும்…

2 ] தோச நிவர்த்தி யோகம் உள்ளது
லக்னத்தில் அல்லது கேந்திரத்தில் புதன் சுக்கிரன் இருப்பதால் இந்த யோகம் ஆனாலும் கடக லக்னத்தின் பாதகர் சுக்கிரன் 3/12 அதிபர் புதனும் லக்னத்தில் அமைந்தது தோச நிவர்த்தி என சொல்லி விடவும் இயலாது ..
இது தோச ஜாதகமே ஆகையால் தானே இன்னும் இல்லற சுகம் இல்லாத நிலையை கொடுத்து இருக்கிறார் [ லக்னாதிபதி சந்திரன் தன் திசையில் யோகம் தரட்டும் ] 

3 ] சர்ப்ப யோகம் உள்ளது
ராகு கேது கேந்திரத்தில் அமைந்தால் அது சர்ப்ப யோகம் ஊரில் பிரபலமான தன்மை கடக லக்னத்திற்க்கு எப்போதும் அரசியல் ஆசையால் எம்.எல்.ஏ. முதல் கவுன்சிலர் போன்ற தேர்தலில் போட்டி இடுவது இவரையும் விட்டு வைக்கவில்லை ..
கவுன்சிலர் தேர்தலில் சுக்கிர திசையில் தோல்வியை தழுவி உள்ளார்..சந்திர திசையில் அது கை கூடட்டும்..
[குறிப்பு:- தற்போதைய சில அமைச்சர்கள் கடக லக்னம் கடக ராசியை சேர்ந்தவர்கள் தான் ]

4 ] பர்வத யோகம் உள்ளது..
லக்னாதிபதி லக்னத்தின் கேந்திரம் 1-4-7-10ல் அமைந்தால் அது பர்வத யோகம் ஆகும் ..லக்னாதிபதி லக்னத்தில் இருப்பதால் அது நல்ல யோகம் தான் ..


5] சாமர யோகம் உள்ளது
இரு சுபர்கள் கேந்திர வலுவில் 1-4-7-10 அமைந்தால் சாமர யோகம் ஆகும்..

6] சங்க யோகம் உள்ளது
ஐந்தாம் அதிபர் செவ்வாய் க்கு கேந்திரத்தில் ஆறாம் அதிபர் குரு இருப்பதால் இந்த சங்க யோகம் ஆகும் …பொருளாதார தட்டுப்பாடு எப்போதும் அமைக்காமல் சமாளிக்க வைக்கும் ..

7] சதா சஞ்சார யோகம் உள்ளது
சரலக்னம் அல்லது லக்னாதிபதி சர ராசியில் இருப்பது போன்ற அமைப்புக்கு பெயரே சதா சஞ்சார யோகம் [ இது நல் யோகம் ஒரு இடத்தில் அமராமல் சும்மா சுற்றி கொண்டே இருக்கும் அமைப்பு ]
உதாரணம் :- இந்த ஜாதகர் ஒரு சொகுசு வாகன [ டிராவல்ஸ் டிரைவர் ] ஓட்டுநர் ..ஆக சதா சஞ்சார யோகம் நன்றாக வேலை செய்கிறது …

8] கவுள யோகம் உள்ளது
இது நல்ல யோகம் அல்ல.. லக்னத்தில் நான்கு கிரகங்களுக்கு மேலே இருப்பதன் பெயரே கவுள யோகம் ஆகும்..இதர திசா புக்தி கொடுப்பதையும் இதர கிரகங்கள் கொடுப்பதையும் கெடுப்பதே இந்த கவுள யோகம் தான்..

[குறிப்பு:-இதை உங்களுக்கு தெரிந்த ஜாதகத்தில் காணவும் ]
பொதுவாக 10 அதிபர் அமைந்த வீட்டின் [ சிம்மம் ] அதிபர் சூர்யன் [ பூசம் –சனி சாரம் சனி இணைவு இரும்பு சார்ந்த தொழில் ஆக அமையும்..
10 அதிபர் சுக்கிரன் சாரம் [ பூரம்]
10ம் இடத்தில் இருக்கும் கேது சாரம் [பரணி ] இரண்டும் சுக்கிரன் எனும் போது
டெக்ஸ்டைல்ஸ் மற்றும் நகைக்கடை அல்லது
பேன்சி கடை .. 

பொருள் வாடகைக்கு விடும் கல்யாண் ஸ்டோர்ஸ் அல்லது வாடகைக்கு வாகனங்களை விடும் டிராவல்ஸ் உரிமையாளர் ஓட்டுநர் அல்லது அதில் பணி புரியும் சூழ்நிலைகளை தான் தரும்…அது இந்த ஜாதகத்தில் நன்றாக பொருந்தி வந்தது ..

தோசத்தின் தீர்வுகளே இல்லையா ?????என கேள்வி வரலாம் இருக்கிறது ..
திருமணம் தடை சனி கொடுக்க நினைத்த [ மனைவி காமம் ] சூர்யன் கெடுக்கிறார் .அதுவும் போக அம்சத்தில் நீசம் அடைந்த சூர்ய திசை வேறு
[ ஆடுதுறை சூர்யானார் கோயிலுக்கு ஆதி வாரம் சென்று சூர்யனுக்கு ப்ரீதி கொடுப்பது ]பொதுவாக சூர்ய திசை நடப்போர் ஞாயிறு அன்று அசைவம் தவிர்ப்பது நல்லது ஆகும்..
நடப்பு சுக்கிர புக்தி [ஸ்ரீரங்கம் பெருமாளை வெள்ளிக்கிழமை அன்று காலை நடக்கும் விஸ்வரூப தரிசனம் நடக்கும் போது தரிசனம் செய்வது ..

திருமணம் எதற்காக செய்ய வேண்டும்????
ஒரு வாரிசு ஒன்று வேண்டும் என்பதற்காக வாரிசு தருவது ஆணுக்கு ஐந்தாம் பாவம் தான் [ பெண்ணுக்கு ஒன்பதாம் பாவம் மட்டுமே அதற்க்கான பதிவினை தனியே செய்யலாம் ] அந்த ஐந்தாம் அதிபர் செவ்வாய் லக்ன பாதகாதிபதி சுக்கிரன் சாரம் [ இது ஒரு தீமை தான் ]

சரி புத்திரகாரன் செவ்வாய்க்கு 10ல் குரு [ கொள்ளி இட பிள்ளை இருப்பதும் இல்லை ]
செவ்வாய் வேறு சுக்கிரன் சாரத்தில் இரண்டாம் பாதத்தில் ஆக எதிர்கால சந்திர திசையில் இரு பெண் மகவுகள் அமையும் வாய்ப்பு இருக்கிறது..

சரி ஐந்தாம் அதிபர் இப்படி தோசம் அடைவதும் இந்த ஐந்தாம் அதிபர் செவ்வாய்க்கு பத்தில் குரு இருப்பதும் தோசமே …

பரிகாரம் தான் என்ன ??
ஆடி அமாவாஸை அல்லது
புரட்டாசி அமாவாஸை அல்லது
ஐப்பசி அமாவாஸை அல்லது
தை அமாவாஸை நாளில்
நதிக்கரையில் நீராடி ஏதேனும் ஐந்து சன்னியாசிகளுக்கு [ காவி வேஷ்டி துண்டு என துணிவகை மற்றும் உணவு ]
வஸ்திர தானம் போஜன தானம் உடன் வெற்றிலை பாக்கு காணிக்கை
உடன் கொடுத்து அந்த ஐந்து சன்னியாசிகள் காலில் அஷ்டங்கமாக விழுந்து வணங்கி விட்டு வர குழந்தை கிடைக்க என்றாவது திருமணம் அமையும் என்பதை ஆலோசனை ஆக சொல்லி அனுப்பி உள்ளேன் ..

இதை பற்றிய பதிவு எதற்காக ????
பல்கலை கழகத்தில் பாடம் எடுக்கிறோம் என சிலர் கோமாளி டிரெஸ் போட்டு கொண்டு ஜோதிடத்தில் பரிகாரமே இல்லை என சாத்தான் வேதம் ஓதலாம் [ பரிகாரத்தால் கடந்த என் அனுபவத்தில் 10 ஆண்டுக்கும் மேலே பல்வேறுபட்ட புண்ணிய பலனை ஜாதகர் அடைந்து இருக்கிறார்கள் … ]
பரிகாரம் என்பதை சொல்லி அதன் மூலம் பிராமணர்களுக்கு கிடைப்பதை எப்போது ஒரு ஜோதிடர் கமிஷன் எனும் அடிப்படையில் பொறுக்கி தின்கிறார்களோ அங்கே பரிகாரம் வேலை செய்வது இல்லை என்பதே உண்மை ஆகும்..
ஆக ஜோதிட நண்பர்களே பிராமணர்கள் இடத்தில் கமிஷனும் பேசாமல் குறிப்பிட்ட கோயிலுக்கு மட்டும் வழி வகை சொல்லி அனுப்புங்கள் ..

யோகங்களை பழைய பாடல்களை தூக்கி குப்பையில் போடு சாத்தான் நான் ஓதுவதே உனக்கு வேதம் என பல்கலையில் ஜோதிட போதனை செய்யும் கோமாளியாலும்
பரிகாரத்தில் கமிஷன் வாங்கும் ஜோதிடராலும்
அந்த ஜோதிடரை அணுகி என்னிடம் பரிகாரம் செய்ய ஆட்களை அனுப்பி வை உங்களுக்கு தேவைப்படும் கமிஷனை நான் தருகிறேன் என ஆசை வார்த்தைகளை அள்ளி வீசும் பிராமண பரிகார புரோஹிதராலும் தான் இந்த ஜோதிடத்துறை பாழ்பட்டு போனது..

சிறந்த ஜோதிடர் ஆக வர வேண்டும் எனும் ஒரு நோக்கத்தை மட்டுமே வைத்து கொள்ளுங்கள் உங்கள் நாவில் சரஸ்வதி தேவி அருளால் உள்ளத்தில் [ஆன்மா ] தோன்றுவது உதட்டில் [ வாக்கு ]
அதை செவியில் கேட்டு சொல்லும் வாடிக்கையாளர் உங்களை முழுமையாக சொன்னது நடக்கும் என சென்றால் அது நிச்சயம் நடந்தே தீரும் ..அங்கே நீங்கள் வாய் திறந்து சொல்வதே ஜாதகருக்கு நடக்கும்…..

அடியேனும் கமிஷனுக்கு ஆசைப்பட்ட பரிகாரம் சொல்லவில்லை
[ ஹ்ஹ்ஹ்ஹ் சன்னியாசி இடத்தில் கமிஷன் திருவோடு தான் கிடைக்கும் ]
சரி இவ்வளவு நேரம் டைப்பிங் செவ்வன செய்து இதை உங்கள் இடத்தில் பகிர காரணம்???

பழமையும் பாரம்பரியமும் ஜோதிடமும் காக்கப்படணும்… என் சொந்த ஜோதிட அனுபவம் ஜோதிட அறிவை வளர்க்க பழமையான ஜோதிட நூல்களே எனக்கு வழி காட்டி ஆகும்..

இதை வாசிக்கும் நீங்கள் 50 ஆண்டு கால ஜோதிடரோ அல்லது
ஆரம்ப நிலை ஜோதிடரோ எம் பதிவில் ஜோதிட நுட்பம் இருப்பதாக கருதினால் இதை ஷெர் செய்து அனைத்து ஜோதிட குழுவிலும் கொண்டு செல்லுங்கள்..
அதே நேரம் உங்கள் கருத்தை அல்லது ஆலோசனையை இதில் பின்னோட்டம் [கமெண்ட்ஸ் ] மூலமாக கொடுக்கவும்..
நன்றி வணக்கம் அடுத்த பதிவில் இன்னொரு ஜோதிட ஆய்வினை தொடருவோம்..
என்றும் ஜோதிட பணியில் ..
Astro Senthil Kumar
எம்மை நேரடியாக அணுக !!
தொடர்புகொள்ள
ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம்,
புதுபஸ் நிலையம் பின்புறம்
பெருந்துறை -638 052
ஜோதிடர்A .செந்தில் குமார்
செல்: +91 98427 69404
+91 98434 69404


5 comments:

 1. ஜாதகத்தை நுணுக்கமாக ஆய்வு செய்து இருக்கிறீர்கள். சரஸ்வதி கடாஷமும் குலதெய்வ அருளும் உங்களுக்கு அமோகமா இருக்கு. ஒரு ஜோதிடர், மக்கள் சேவையை மட்டும் மனதில் வைத்தால் போதும். மீதியை இறையருள் பார்த்து கொள்ளும். முகநூல் அரசியலில் உங்களை இழந்து விட வேண்டாம்.

  ReplyDelete
 2. சர்வாஷ்டக வர்க்கத்தில் இந்த ஜாதகருக்கு 2,7 ஸ்தானங்களுக்கு , மிக குறைவான பரல்களே உள்ளன. லாப ஸ்தானத்துக்கு , அதீதமாக 48 பரல்கள்!! ஆக, கல்யாணம் ஆனாலும் மனைவி, குடும்பம் இவை இருந்தும் மிக மிக சுமாராகவே இருக்கும்.

  ReplyDelete
 3. Mr.Elango........Age 34........DOB:-22Nov1982, TOB:7.30AM, POB: Vellore.
  He is still searching bride for his marriage..... kindly inform what has to do for him getting marriage.

  ReplyDelete
 4. அருமையான பதிவு ஜி சொல்லாடல் அருமை

  ReplyDelete