Friday 9 May 2014

ராசிசக்ரத்தில் சனிபகவானின் பலமும் பலஹீனமும் [பலநிர்ணயம்]

சனிபகவானின் பலத்தை பலவாறாக பலமூலநூல்கள் சொல்லி இருந்தாலும் சில குறிப்பை சனிபகவானை பற்றி அடியேனுக்கு தெரிந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..நுட்பமாக ஆராய்ந்து பலன் சொல்ல ஜோதிடம் தப்பாமல் பலிக்கும் என்பதே உண்மை,


சனிபகவான் கிருஷ்ணபட்சத்தில் பலவான்.


சனிபகவான்ராத்திரிவேளையில்  பலவான்.


சனிபகவான் வக்கிரத்தில் பலவான்.


சனிபகவான் சுயவீட்டில் பலவான்.


சனிபகவான் துலாராசியில்பலவான்.


சனிபகவான்  தட்சிணாயனத்தில் பலவான்.


சனிபகவான் லக்னத்தில்பலவான்.


சனிபகவான்  மந்தகதியில் பலவான்.


சனிபகவான் கிரஹயுத்தத்தில்பலவான்.


சனிபகவான் ராசியின் ஆரம்பத்தில் பலஹீனன்.


சனிபகவான் ராசியின் மத்தியில் பலவான்.


சனிபகவான்  ராசியின் கடைசியில் நல்லபலவான்.


சிலர் ராசி முழுவதும் ஒரேபலன் என்பர் அது சரியான கருத்து அல்ல.  


துலாம்- கும்பம்- இவைகளில் ஒன்று லக்னமாக அமைந்து அல்லது நான்காம் இடமாக அமைந்து அதில் சனிபகவான் இருக்க  பலவான்.


சிம்மம் பத்தாம் வீடு ஆகி அங்கே சனிபகவான் இருக்க  பலவான்.

சனிபகவான் பிரஷ்டோதய ராசிகள் அல்லாத மற்ற ராசிகளில் மிதுனம்-சிம்மம்-கன்னி- துலாம்- விருட்சிகம்-கும்பம்- மீனம் இவைகள் ஏழாம் இடமாகி அதில் சனிபகவான் இருக்க பலவான்.

செவ்வாய் உடன் சனி பகவான் பத்தாம் வீட்டில் அமர “திக்பலம்” உடையவர் ஆகிறார்.ஏழில் அமரும் சனிபகவான் “திக்பலம்” உடையவர்`

எந்தகிரஹம் ஆகினும் அபோக்கிலீபத்தில் இருப்பின் “பலஹீனர்கள்”

எந்த கிரஹமும் பணபரத்தில் இருக்க மத்திம பலனை தருபவர்கள்.

எந்த கிரஹமும் கேந்திரபலம் இருக்க அதிகபலம் உடையவர்கள்.

பூமி கோளத்தில் அதிக உச்சஸ்தானத்தில் இருப்பதினால் அனைத்து கிரஹமும் எந்த கிரஹத்தின் முன்னால் ஒருகிரஹம் ஒருவருக்கு ஒருவர் முன்னதாக அவர்களுக்கு கிழக்காக இருக்கிறார்களோ அவர்கள் அதிகபலத்துடன் ஜாதகருக்கு பலாபலனை தருவார்கள்.


இன்னமும் ராகு/ கேதுவை பற்றிய அடியேனின் அடுத்த பதிவு இருக்கிறது..



இவ்வாறாக ராசியின் ஆரம்ப பலனும் மத்தியபலனும் அந்திமபலனும்  “கிரஹங்களுக்கு கிரஹம் மாறுபாடு” வருவதை சற்று உன்னிப்புடன் கவனிக்க தப்பாது பலாபலன் பலிதம் ஆகும்.இதை சற்று உன்னிப்பாக கவனிக்க பல தப்பாது என்பதே உண்மை..



இது போன்ற எண்ணற்ற ஜோதிட சூட்சுமங்கள் பழமையான மூல நூல்களில் பொதிந்து கிடக்கிறது!!!எமது அடுத்த பதிவில் வரிசை கிரமமாக அனைத்து நவநாயகர்களின்பல நிர்ணயம் குறித்து வரிசையாக தரவுள்ளேன்.இங்கே படிக்கும் நண்பர்கள் சற்று கருத்தை பதிவு செய்து சென்றால் சற்று ஆறுதலாக இருக்கும், 15,000 நபர்கள் பார்வையிட்டும் 150 கருத்துக்கள் கூட நண்பர்கள் பதியவில்லையே?? ஊக்கம் தருவதே எம்மை அதிகமாக எழுத வைக்கும்.நன்றி!!

என்றும் ஜோதிட பணியில்!!
ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம்.பெருந்துறை.
செல்:- +91 98427 69404
செல்;- +91 98434 69404


9 comments:

  1. நல்ல பதிவு பாராட்டுக்கள்

    ReplyDelete
  2. நிறைய விசயங்கள் தெரிந்துகொள்ள வாய்ப்பாக இருந்தது.

    ReplyDelete
  3. Thodarnthu eluthungal sir.thanks

    ReplyDelete
  4. super g unghal sevai thodra valthugal

    ReplyDelete
  5. Clear and short explanation..thank you.

    ReplyDelete
  6. சனியின் பலன் பற்றிய பதிவு அருமை நவகிரக அருள் உண்டு

    ReplyDelete
  7. Useful information. Let your service continue. Thanls

    ReplyDelete
  8. நிறைய விசயங்கள் தெரிந்துகொள்ள வாய்ப்பாக இருந்தது.

    ReplyDelete
  9. ஒரு கிரகம் இன்னொரு கிரகத்திற்கு கிழக்கில் /மேற்கில்/தெற்கில்/வடக்கில் இருக்கிரது என்பதை எப்படி தெரிந்து கொள்வது நீண்ட நாட்களாக இது எனக்கு புரிய வில்லை ச்ற்று விளக்கமாக உதரணத்துடன் கூறவும்

    ReplyDelete