Friday 27 June 2014

சூர்யதிசையின் பலமும் பலன்களும்

ஜோதிடர்களும் ஆர்வலரும் கவனத்துடன் படிக்கவும்


 சூர்யதிசை இதை கேட்டாலே பல குடும்பங்களில் அலறுகிறார்கள்.
சூர்யன் ஒரு ஜாதகத்தில் தந்தையை குறிக்கும் சொல் என்பதால் அந்த திசை எங்கே தன் குடும்பத்தில் தகப்பனுக்கு இடைஞ்சல் தருமோ என்று ஜாதகரும் எங்கே தன் மாங்கல்யம் பாதிக்குமோ என்று ஜாதகரின் தாயாரும் பயப்படுவது உண்டு 


சூர்யனை குறிக்கும் தந்தையே அக்குடும்பத்தின் ஜீவநாடி என்பதும் ஒரு காரணம் தான்.. அந்தளவுக்கு சூர்யனால் பாதிப்பை தருமா?? என்பதை கொஞ்சம் கவனிப்போம்..


சூர்யதிசை ஆனது அந்த ஜாதகரின் மேஷத்தில் பரமஉச்சத்தில் அல்லது லக்னத்தின் சுபர்களின் வீட்டிலோ அல்லது சுபர்களின் பாதக்காலிலோ அல்லது சுபர்களின் சேர்க்கையும் பார்வையும் அமையப்பெற்ற சூர்ய திசை ஆனது ஜாதகனுக்கு நடக்கும் பட்சத்தில் சூர்யதிசை நற்கல்வி - விவாஹம் -புத்ர உற்பத்தி- பதவி-தைர்யமான செயல்களில் ஈடுபடல்- தெய்வ அனுகூலம்- ஆலய வேலைகளை எடுத்து செய்வது-பிதுர் சொத்துக்களை மீட்டு சந்தோஷம் அடைதல்  போன்ற நற்பலன்களே அமையும் 


அதே சூர்யதிசை ஆனது லக்னத்தின் பாதக ஸ்தனங்களில் அமையப்பெற்றால் பலவிதமான இன்னல்களில் வதைபடுவதும்-அரசபதவி இழப்பும் - எதிர்களால் பல இடைஞ்சல்கள்- வழக்கில் தண்டனை -அரச மற்றும் தெய்வ குற்றத்திற்க்கு ஆட்படல் போன்ற இன்னல்களை ஏற்படுத்தும் 
மேஷத்திற்க்கும் ரிஷபத்திற்க்கும் நடுவில் ராசிசந்தியில் சிக்கிய சூர்யனின் திசை நடந்தால் தீரா வயிற்றுவலியும்- நாற்கால் ஜீவனராசிகளால் அந்த ஜாதகனுக்கு மரணத்துக்கு ஒப்பான கண்டத்தை தரும்.
மேஷத்தில் சூர்யன் இருந்து கன்னி - விருட்சிகம் லக்னமாய் அமைந்த ஜாதகருக்கு சூர்யனின் திசையில் ஆற்றமுடியாத உடற்புண் உண்டாவதும் பெற்றோரால் நஷ்டமான சூழல்களை அமைப்பது போன்ற பலன்களை ஏற்படுத்தும் 

ரிஷப சூர்யனின் திசை நடந்தால் நேத்ர ரோகம் (கண்நோய்) புத்ரனுக்கு தீங்கும் சொந்தங்களால் துன்பங்களை அடைதல் போன்றது ஏற்படுத்தும்..சுயமரியாதை காக்கபடும் ..ஆனாலும் சற்றே அல்லல்களை கொடுக்கும் ரிஷப சூர்யன் 

மிதுன சூர்ய திசை நடந்தால் ஜாதகனுக்கு நல்ல சுறுசுறுப்பு -கால்நடை விருத்தி- செலவநிலையை உயர்த்தும் எண்ணம்- தாய்வழி (மாத்ரு மூலதனம்) அடைதல் ஆகிய நற்பலன்களையே ஏற்படுத்தும் ..லக்னத்தையும் கவனத்தில் எடுத்து கொண்டே பலாபலன்களை அறிய வேண்டும் 


கடகத்தில் இருக்கும் சூர்யனின் திசையில் அரச ஆதாயங்கள்-மனைவியின் சொல்லில் கட்டுப்பட்டு செல்லும் சூழல்- பெற்றோர்களை - மனைவியை- குழந்தைகளை பிரிந்து தேசாந்திரம் சுற்றும் சூழல்களை ஏற்படுத்தி கொடுக்கும்..ஒரு  ஜாதகரின் நாவில் எப்போதும் இல்லாத அளவுக்கு கடும்சொல் வந்து விழுந்தால் அந்த ஜாதகனுக்கு கடக சூர்யனின் திசை என்று ஜாதகத்தை ஆராயமலே சொல்லி விடலாம்..

சிம்மத்தில் ஆட்சி சூர்யனின் திசை நடந்தால் சகல ஆடம்பரம்-அரசனுக்கு சமமான வாழ்வு- விவசாயத்தொழில் முன்னேற்றம்- மனைவி மக்களுடன் இணைந்து வாழ்தல் போன்ற பலன்கள் அடைவார்.. மகர லக்னமாயின் சிம்ம சூர்யனின் திசை ஜாதகரின் தந்தைக்கு தப்பாது உயிருக்கு கேடு உயிருக்கு ஒப்பான கண்டத்தை தரும்..


கன்னியில் நின்ற சூர்யனின் திசை நடந்தால் கால்நடை ஜீவனத்தால் ஆதாயங்கள் --ஜனங்களிடம் நல்ல மதிப்பு-- பிராமணர்களின் ஆதாயங்கள்- தெய்வகார்யங்களில் ஈடுபட்டு அதில் ஆதாயங்கள் அடைவதும் - தாய்-மனைவி- மகள் என்று பெண் வர்க்கத்தால் ஆதாயங்களை அடைவது போன்ற நற்பலனை தரும்..


துலாத்தில் நீச்சம் அடைந்த சூர்யனின் திசை நடந்தால் விளைபொருள் நஷ்டம்- மனைவி-மக்கள்- சினேகிதம்-சொந்தம் ஆகியவைகள் இழப்பும் மற்றும் திருடர்களால் சொத்துக்கள் நாசம் அடைவதும் --பிற தேசாந்திரம் செல்லுதல் போன்ற  துன்பபலன்களே அதிகமாக்கும்..மீனலக்னமாக அமைந்து சூரியன் செவ்வாயின் சாரத்தில் குரு சாரத்தில் அமைந்து இருந்தால் நற்பலன்களை தரும் என்பதும் கவனத்தில் கொள்ளவும் 


விருட்சிக சூர்யனின் அரச ஆதாயங்கள்-ஸ்திரிகளை வசியமாக்கி தனம் சேர்த்தல்-- மற்றவர்களை ஏமாற்றியே பணம் சேர்க்கும் என்ன அலைகளை ஏற்படுத்தும் `சிலருக்கு இதனால் ஏற்படும் பகையால் ஆயுதத்தால் பாதிப்பும் ஏற்படுத்தும்

தனுசு சூர்யனின் திசை நடந்தால் எப்போதும் சொந்தங்கள் சூழ வாழ்வதும் -அதிக செல்வாக்கான வாழ்வும்- பிராமணர்கள் - அரசர்கள்(இக்காலகட்டத்தில் மந்திரிகள்) ஆகியோரால் புகழப்படுவது போன்ற நற்பலனகளையே தரும் தனுசு சூர்ய திசை


மகர சூர்யனின் திசையில் ஊருக்கு வெட்டியாக உழைக்கும் சூழல்களை ஏற்படுத்தும் -மனைவி தாய் வீடு சீராடி செல்வது- எப்போதும் பாக்கெட்டில் பணம் இல்லாத நிலையை தருவது-காமாலை போன்ற ஆற்ற முடியாத சில நோய்களை தருவது போன்றவைகளை ஏற்படுத்தும் சிம்மம் சூர்யனின் வீடாகி அதற்க்கு ஆறில் இருக்கும் சூர்யனுக்கு இது ரோகஸ்தானம் (நோய் நொடி கடன் ) அதற்க்கேற்ப்ப வேலை செய்யும் .லக்னமும் சூர்யனின் பாதசாரமும் அந்த சாரம் கொடுத்த நட்சத்திர நாதனின் நிலை கண்டே பலாபலனை அறிய வேண்டும்..


கும்ப சூர்யனின் திசை நடந்தால் இருதய நோயை ஏற்படுத்தும்- புத்ர சோகத்தை ஏற்படுத்தும்- கோள் மூட்டி பிழைக்கும் சூழலை ஏற்படுத்தும்-மனைவி மக்களை சிலர் வெறுத்து கோயிலில் அன்னதானம் உண்டு அங்கே கிடக்கும் சூழல்களை அடிக்கடி கண்ணில் பார்க்கிறோம் அதை ஏற்படுத்துவதே இந்த கும்ப சூர்யனின் திசை 


மீன சூர்ய திசை நடந்தால் தாய்வழி -மனைவி வழி  மூலம் ஆதாயங்களை அடைவது அதனால் சந்தோஷம் அடைவது- குழந்தைகள் பேரில் அக்கறை எடுத்து செயல்படுவது போன்ற நற்பலனும் ஏற்பட்டு அரசனுக்கு சமமான நிலையை தரும்.அதே நேரத்தில் இந்த ஜாதகருக்கு அடிக்கடி ஜுரபீடையை ஏற்படுத்தும்..


பொதுவாக பிறக்கும் குழந்தைக்கு முதல் திசையாக சூர்யதிசை அமைந்தால் தவறாமல் நற்பலனை தரும்.. அதே நேரம் அக்குழந்தை செவ்வாய்கிழமையும் உத்திராடமும் இணைய பெற்ற நாளில் பிறந்தால் அக்குழந்தைக்கு சூர்ய திசை முடியும் வரை பாலரிஷ்ட தோஷத்தை கொடுக்கிறது..


பொதுவாக ஜாதகனுக்கு வந்த லக்னத்தை கொண்டு தாய்-தந்தை ஸ்தான பாவங்களை கொண்டுயோகத்தை  பலாபலனை அறியணும்.திசைபுக்தியின் பலனை சொல்லும் முன்னர் யோகத்தை அறிவது மிகமிக முக்கியம்..பிறந்த போது தாய்-தந்தை பாவங்கள் பாதிக்கப்பட்டால் தாய் தந்தைக்கும் லக்னம் பாதிக்கப்பட்டால் ஜாதகனுக்கும் தீங்கு என்று அறியவும்..


எந்த ராசி கட்டத்திலும் எந்த நட்சத்திர சாரத்திலும் எந்த பாதகஸ்தானங்களிலும் சூர்யன் பாதிக்கப்பட்டாலும் “சூர்யதிசை நடப்பவர்கள்”  அனுதினமும் சூர்ய நமஸ்காரம் செய்வதுடன்  ஞாயிறு அசைவம் தவிர்த்து துக்கவீடு செல்வதை தவிர்த்து வாராவாரம் ஞாயிறு அன்று சிவாலயம் சென்று ஈஸ்வரனுக்கு “செந்தாமரை” மலரை புஸ்பதானம் செய்து அல்லது உச்சிகால பூஜையில் வில்வ அர்ச்சனை செய்து வர தீமைகள் குறைந்து நற்பலன்கள் ஏற்படும்..பாதிக்கபடாத சூர்யதிசை ஆக இருந்து திசை யோகமாக இருந்தால் இன்னமும் நல்ல யோகத்தையே தரும் இச்சூர்யதிசை


இன்றைய படிப்பறிவு மிகுந்த கால கட்டத்தில் அனைவருமே அடுத்து வரும் “சுக்கிர திசையின் நற்பலாபலனை மட்டுமே சிந்தித்து கொண்டே ஜோதிடம் பார்க்க வருகிறார்கள் .. நீண்ட நேரம் ஒரு ஜாதகத்தை உற்று நோக்கி கிரஹங்களின் வலிமை அறிந்து பலாபலன்களை அறிய ஜோதிடர்கள் முற்பட்டால் ஊரார்கள் அந்த ஜோதிடருக்கு தரும் பட்டம் “அந்த ஜோதிடனுக்கு ஜோதிடம் தெரியாமால் ரொம்ப நேரம் ஜாதகத்தை ஆராய்கிறார்’’என்று ஒன்னும் தெரியாதவர் என்ற புகழை கொடுத்து விடுகிறது.. அந்த காரணத்தாலேயே சில ஜோதிடர்கள் உடனுக்குடனே ஜாதகத்தை கவனித்து அனுப்பி விடுகிறார்கள் 


மொத்தத்தில் 
சூர்யன் நவகிரஹ குடும்பத்தின் தலைவன் .அவர் கெட்டால்  ஜாதகனின் குடும்பமே கெடும் 


சொன்னால் புரியாது ஜோதிட வித்தைகள்
என்றும் ஜோதிட பணியில்!!
ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம்.பெருந்துறை.
செல்:- +91 98427 69404
செல்;- +91 98434 69404

3 comments:

  1. அருமையான பதிவு

    ReplyDelete
  2. நன்றி சாரதி அன்பரே வந்து படித்தால் யாரும் கருத்தை சொல்வதில்லையே என்று இருந்தேன் உங்கள் ஊக்கமே எழுத வைக்கும் எழுத்தாணி

    ReplyDelete
  3. சூப்பர் சார்

    ReplyDelete