Friday 13 April 2018

திசா புக்தியை கணிக்கும் விதம்

இது ஒரு ஜோதிட பதிவு ஆகும்..
இதை காலம் சென்ற நாமக்கல் மாவட்ட  சிங்களாந்த புரத்தில் வாழ்ந்த அமரர் கும்பகோணத்தார் என அழைக்கப்பட்ட அருணாசலம் அவர்கள் அவர் உயிருடன் வாழ்ந்த போது 14-03-2000 அன்று எழுதிய ஒரு கட்டுரை
இதை யாரும் காப்பி பேஸ்ட் செய்யாமல் அப்படியே ஷேர் செய்வது தான் ஒரு ஜோதிட மேதைக்கு ஜோதிடர்கள் ஆகிய நீங்கள் செய்யும் குரு வணக்கம் ஆகும்..
கட்டுரையின் சாராம்சம் இது:-
நமது மூதாதையர்களான மெய்ஞானிகள் தங்கள் தபோ பலத்தினால் தெய்வ அனுக்கிரகம் பெற்று தங்களது ஞானத்தின் மகிமையால் எழுத்தப்பட்ட நூல்களே வேதங்கள் ஆகும்..
வேதங்களை ஒரு மனிதனால் உருவாக்கப்படுவதினால் அவனுடைய கண்களே “ஜோதிட சாஸ்திரம்” ஆகும்..
வேத்த்தின் ஆறு அங்கங்களில் ஒன்றாக ஜோதிட சாஸ்திரம் திகழ்கிறது ..
கண்கள் இல்லாத மனிதனால் ஒன்றுமே செய்ய இயலாது
உலகம் செழித்து மக்கள் சுபிட்சம் அடைந்து நல்வாழ்க்கை அமைய வேண்டுமானால் நல்ல மழை பொழிய வேண்டும்..
நல்ல தெய்வ நம்பிக்கையோடு மக்கள் வாழ வேண்டும்..
இவைகள் நிலைத்து இருக்கவே “யாகங்களையும்” நல்ல தெய்வஸ்துதிகளையும் போதிக்கவே “வேதங்கள்” ஏற்ப்பட்டது ..
இப்பவும் யாகங்களை தெய்வ வழிபாடுகளை நிர்ணயிக்கவே
“ அயனங்களும்” “ருதுவும்” “மாதங்களையும்” “ஞாயிறு முதலான நாட்களையும்”
வளர்பிறை மற்றும் தேய்பிறையும் பிரதமை முதலான “திதிகளையும்”
“அசுவினி” முதலாக 27 நட்சத்திரங்களையும் நல்ல முகூர்த்த லக்கினங்களையும் வைத்தே ஒரு செயல் நிர்ணயிக்கப்படுகிறது..
\யாகங்களை பிற தெய்வ அற செயல்களையும் செய்வதற்க்காக நல்ல காலத்தை ஜோதிட சாஸ்திரம் ஒன்றே அறிவிக்கக்கூடியதாகும் ..
இதனால் தான் ஜோதிடம் வேத அங்கம் என கூறப்பட்டது ..
ஜோதிட சாஸ்திரம் சூர்யன் முதலாக ஒன்பது நவகோள்களின் அடிப்படையில் அமைந்துள்ளது ..
இந்த ஜோதிடம் “வைதீக” கார்யங்கள் மட்டுமே இன்றி மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை எல்லா நிலைகளிலும் தொடர்பு உடையதாக இருக்கிறது..
எல்லா ஜீவராகளும்  தோன்றி வளர்ந்து பின்னர் மறைகின்றன..
இந்த நியதிகள் யாவுமே கால புருஷனின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளனவாகும்..
சூர்யனின் சக்தியும் பிற கோள்களின் இடைவிடா சுழற்சியும் அவற்றின் அளவு கடந்த சக்தியும் தான் “கால புருஷனின் பிரதான ஆயுதம் ஆகும்..
மனிதன் பிறக்கும் போதும் இறக்கும் போதும் “எதையும் கொண்டு வருவதும் இல்லை” எதையும் “கொண்டு செல்வதும் இல்லை””
எடுத்து செல்வதும் இல்லை ஆனால் அவன் அவன் செய்த நல்வினை தீய்வினை பாவம் புண்ணியம் இவற்றை மட்டுமே தம்மோடு எடுத்து செல்கிறான் ..
அதற்க்கு தகுந்தவாறு தான் அவனின் மறு பிறவியை பெறுகிறான் ..
பிறப்பு இறப்பு எல்லாம் “டார்வின்” தத்துவம் போல ஒரு வட்டத்தின் சுழற்சியாகவே இருக்கின்றன ..
ஒருவன் ஜெனனம் ஆகும்போது அமைந்துள்ள கிரகங்கள் தான் அவனை
“நல்லவனா??” “கெட்டவனா??” “ஞானியா?” “அஞ்ஞானியா?” “நோயாளியா?”
“ திடகாத்திரனா??” “ அறிஞனா??”  “மூடனா?” நீண்ட ஆயுள் உள்ளவனா??? அல்லது அற்பாயுள் உள்ளவனா?? ஏழையா?? செல்வந்தனா?? என்பற்றை தெளிவாக அறிந்து கொள்ளவதற்க்கு தான் “ஜோதிட கலையே” சிறந்த கருவி ஆகும்..
பூர்வ ஜென்மத்தில் ஏற்ப்பட்ட நன்மை தீமைகளுக்கு ஏற்ப இந்த ஜென்மத்தில் அநத ஜாதகன் அனுபவிக்கும் சுக துக்க காலங்களை விளக்குவதே “திசா புக்தி” ஆகும்..
மனிதனுக்கு “பால்ய திசை” [ குழந்தை பருவம்]
“யெவன திசை [ இளைமை பருவம்]  
விருத்த திசை [ முதுமை பருவம்]
இதை வயதை குறிப்பிடுவது போல குறிப்பிடுகிறோம்..
தசை என நூல் வழக்கிலும் திசை என உலக வழக்கிலும் கூறுகிறோம்..
யவனர் 12 வகை எனவும் ,
மணித்தர் முதலாகினர் 10 வகை எனவும்
பாதராயணர் 8 வகை எனவும்
சித்த சேனர் 6 வகை எனவும்
தேவலர் முதலாயினர் 4 வகை எனவும்
விஷ்ணு குப்தர் 3 வகை எனவும்
சத்தியாச்சாரியார் 2 வகை எனவும் கூறியுள்ளார்கள் ..
மேலும் விம்சோத்திரி திசை , அஷ்டோத்திரி திசை , யோகினி திசை எனவும் வடநாட்டிலும்  மும்பை போன்ற பகுதிகளில் வழங்கி வருகின்றன...
குஜராத் , பாஞ்சாலம்,செளராஷ்ட்டிரம் மற்றும் சிந்து போன்ற பகுதிகளில் ”அஷ்டோத்திரி திசையே அறியப்படுகிறது ..
பராசர முனிவர் “மஹா திசை” என வழங்கப்படும் “விம்சோத்திரி திசையே” முக்கியம் என “பிருஹத் பராசர ஹோரா சாஸ்திராவில்” அருளி செய்து உள்ளார் ..
நம் தமிழ்நாட்டில் அன்று முதல் இன்று வரை சந்திர பகவான் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறாரோ அந்த நட்சத்திரத்தை ஆதியாக கொண்டு பராசரர் கூறிய மகாதிசையை வைத்தே ஜோதிடம் பார்த்து வருகிறோம்.
மக்களுடைய வாழ்நாளில் இன்ன இன்ன காலத்தில்  இன்பம் உண்டு என்றும்
இன்ன இன்ன காலத்தில் துன்பம் உண்டு என்றும் திட்டமாய் அறிவதற்க்கு  இந்த மகாதிசை தவிர ஜோதிட சாஸ்திரத்தில் வேறு ஆதாரங்கள் கிடையாது என திண்ணமாக சொல்லலாம்..
திசைகள் பல வகைப்படும்..அவை
1] மகா திசை
2] உர்பண்ண திசை
3] மிருத்தியு திசை
4] பிராண திசை
5] ஆதான திசை
6] வாம திசை
7] உடு திசை
8] நிராயண திசை
9] மகா பிராண திசை
10] குளிக நிராயண திசை
11] கால சக்ர திசை
12] வருஷ மகா திசை [ தஜக நீலகண்டீயம் ]
13] மாத திசை
14] நித்ய மகா திசை
15] யோகினி திசை
16] நைசர்சிக திசை
என்று பல வகையான திசைகள் இருப்பினும் நாம் எடுத்து கொள்ளும் மஹா திசையை மையமாக வைத்து தான் எல்லா காரண கார்யங்களையும் ஆராய்ச்சிக்கு எடுத்து கொள்கிறோம்..
இராசி மண்டலத்தில் சூர்யன் சந்திரனை தவிர ஏனைய கிரகங்களுக்கு இரு இரு ஆதிபத்தியமாகி இருக்கின்றன ..
அவற்றுள் ஒரு கிரகத்தின் திசா புக்தி காலத்தில் எந்த வீட்டின் ஆதிபத்தியம் முன்னும் எந்த வீட்டின் ஆதிபத்தியம் பின்னும் நடக்கும் என ஜோதிடர்கள் ஆகிய நாம் ஆராய்ச்சிக்கு எடுத்து கொள்ள வேண்டும்..
ஒற்றை ராசிகள் ஆகிய ஆண் ராசியில் மேஷம் மிதுனம் சிம்மம் துலாம் தனுசு கும்பம் இவைகளில் இருந்த கிரகங்கள் தன் திசாபுக்தி காலத்தில் முதலில் மூல திரிகோண ஆதிபத்திய பலனும்  பின்னர் ஆட்சி ஆதிபத்திய பலனும் உண்டாக்கும்..
மேலும் இரட்டித்த ராசிகள் ஆகிய பெண் ராசிகள் ஆகிய ரிஷபம் கடகம் கன்னி விருட்சிகம் மகரம் மீனம் ஆகிய ராசிகளில் நின்ற கிரகங்கள் முதலில் ஆட்சி ஆதிபத்திய பலனும் பின்னர் மூலத்திரிகோண ஆதிபத்திய பலனும் உண்டாக்கும்..
இவைகள் அனுபவத்தில் சரியாக பொருந்தி போகிறது ..
சூர்யனுக்கு மூலத்திரிகோணம் ஆட்சி இரண்டும் ஒரே வீடாக உள்ளது ..
ஆக சூர்யனுக்கு முன் பின் ஆதிபத்திய பலன் கிடையாது..
சந்திரனுக்கு கடகம் ஆட்சி வீடும் ரிஷபம் மூலத்திரிகோணமும் ஆவதால் சந்திரனுக்கு காலவிபாகம் [ இரு ஆதிபத்தியம்] உண்டு ..
செவ்வாய்க்கு மேஷம் + விருட்சிகம்
புதனுக்கு கன்னி + மிதுனம்
குருவுக்கு தனுசு+ மீனமும்
சுக்கிரனுக்கு துலாம் + ரிஷபம்
சனிக்கு கும்பம் + மகரம் முறையே முதல் வீடுகள் மூலதிரிகோணமும் அடுத்தது ஆட்சி வீடுகளும் ஆகும் ..
உதாரணதிற்க்கு
கடக லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு குரு இரட்டை ராசி ஆகிய பெண் ராசியில் இருந்தால் முதலில் 9ம் இடம் ஆகிய மீனத்திற்க்கு உரிய ஆட்சி பலனையும் பின்னர் மூலதிரிகோண இடம் ஆகிய ஆறாம் இடத்து பலனையும் நகர்த்தும் ..
மேலும் செல்வம் ஆனது ஒரிடத்தில் நிலையெடுத்து செல்லும் தன்மையை உடையது எனவும் தரித்திரமும் அதேபோல ஓரிடத்தில் நிலையாக தரிக்கிறோம் நிலையாக நில்லாமல் செல்லும் தன்மையுடைது எனவும் பொருள் படும்.. ஒரு திசைக்குள் நன்மையும் தீமையும் மாறி மாறி வந்து கொண்டிருக்கும்..
ஷட் பலத்துடன் கூடியோ அல்லது தனது பரம உச்ச பாகையில் இருக்கும் கிரகத்தின் திசையை ”சம்பூர்ண திசை” என கூறப்படும்....
ஷட் பலம் எனப்படுவது :-
1] ஸ்தான பலன்
2] திருக் பலம்
3] திக் பலம்
4] நைசிர்க பலம்
5] சேஷ்டா பலம்
6], கால பலம் என ஆறு வகைப்படும்..
1 ] கிரகங்கள் தன் உச்ச வீடு மூலத்திரிகோண வீடு ஆட்சி வீடு நட்பு வீடு போன்ற இடங்களில் நிற்க்கும்  போது ஸ்தான பலம் பெருகின்றன..
2 ] புதன் குரு ஜனன லக்னமான கிழக்கு திசையிலும் ஏழாம் இடம் ஆகிய மேற்கு திசையில் சனி -ராகு -கேது வும் தெற்கு திசை ஆகிய லக்னத்திற்க்கு பதாம் இடத்தில் சூர்யனும் செவ்வாயும் வடக்கு திசை ஆகிய நான்காம் இடத்தில் சந்திரனும் சுக்கிரனும் நிற்க்கும் போது அவைகள் “திக் பலம்” பெருகின்றன ..
3] கிரக பார்வைகளினால் ஏற்படும் நன்மை தீமைகள் “திருக் பலம்” ஆகும்.
4] நைசர்சிக பலம் [ இயற்கை வலிமை] புதனை விட செவ்வாயும் செவ்வாயை விட சனியும் சனியைவிட குருவும் குருவை விட சுக்கிரனும் சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூர்யனும் சூர்யனை விட ராகு கேதுக்களும் வலிமை பெற்றவர்கள் ஆவர் ..
5] சேஷ்டா பலம் [ சஞ்சாரம்] சூர்ய சந்திரகள் மகரம் முதல் மிதுனம் வரை உள்ள ராசிகளில் வலிமையை கூடுதலாக பெறுவார்கள்.. செவ்வாய்- புதன் -குரு-சுக்கிரன்  ”வக்ர கதியில்” கூடுதலாக பலம் பெறுவார்கள் ..புதன் வீடான மிதுனம் கன்னியில் செவ்வாய் புதன் குரு சுக்கிரன் சனி ஆகிய ஐவரும் சஞ்சார பலம் பெறுவார்கள் ..
6] ”கால பலம்” சூரியன் குரு சுக்கிரன் பாவருடன் சேராத புதன் ஆகியவைகள் பகலில் பிறந்த ஜாதகத்திலும்
சந்திரன் - செவ்வாய்- சனி பாவருடன் சேராத புதன் “இரவில்” பிறந்த ஜாதகத்திலும்
சூர்யன் -குரு -சுக்கிரன் பாவருடன் சேராத புதன் “வளர்பிறையில்” பிறந்த ஜாதகத்திலும் “கால பலம்” பெறுவார்கள்..
சூர்யன் செவ்வாய் சனி தேய்பிறை சந்திரன் பாவருடன் சேராத புதன் ராகு கேது ஆகியவர்கள் “தேய்பிறையில்” பிறந்த ஜாதகத்திலும் “கால பலம்” பெறுவார்கள் ..
மேலே கூறப்பட்ட ஆறு வகை பலத்துடன் கூடியோ அல்லது தனது “பரமோச்ச பாகையில்” இருக்கும் கிரக திசையே “சம்பூர்ண திசை” ஆகும்..
பரமோச்ச பாகையில் உள்ள கிரக ஆனது “ஆறு வகையில்” பலம் இல்லாமல் இருந்தாலும் “ சம்பூர்ண திசை” என கூறலாம்..
உச்ச பாகையில் இல்லாமல் உச்ச ராசியில் இருந்து “கொஞ்சம்” ஆவது “ஷட்பலத்துடன்” கூடிய திசையை “பூரண திசை” என சொல்லலாம்..
ஷட் பலம் இல்லாத திசையை “இருத்தை திசை” என அழைக்கப்படும்..
நீசாம்சத்திலும் சத்ரு நவாம்சத்திலும் இருந்த கிரகத்தின் திசையை “அரிஷ்ட திசை” என அழைக்கலாம்..
“சம்பூர்ண திசை” புக்தி காலங்களில் சரீர ஆரோக்கியம் தன விருத்தி முதலியனகளால் “மக்கள்” அனேக நற்பலன்களை அடைவார்கள் ..
“பூர்ண திசை” புக்திகளில் சற்றே குறைவான பலன்களை அடைவார்கள்..
“இருத்தை திசையில்”அல்லது புக்திகளில்  “தன நாசம்” முதலியன துன்பங்களை அடைவார்கள்..
”அரிஷ்ட திசையில்” அல்லது புக்திகளில் வியாதி தன நாசம் மரணத்திற்க்கு ஒப்பான கண்டம் பீடைகளை அடைவார்கள்..
மேலும் தனது பரமோச்ச பாகையை விட்டு நீசாபி முகமாக தனது நீச பாகை வீட்டுக்குள் இருக்கும் கிரகம் ஆறு வீடுகளில் ஏதேனும் ஒரு ராசிகளில் இருக்கும் கிரகத்தின் திசையை “அவரோகண திசை” என அழைக்கப்படும்..
இந்த அவரோகண திசை என்பது எப்போழுதும் ஜாதகருக்கு  அதம பலனையே தரும்..
ஆனால் இந்த அவரோகண திசை அல்லது புக்தி நாதன் எந்த ராசியிலேனும் ஆட்சி அல்லது உச்சம் நட்பு ஆகிய நவாம்சங்களில் இருப்பினும் தனது அதம பலனை நீக்கி மத்திம பலனை தருவார்கள் ..
மேலும் தனது பரமோச்ச பாகையை விட்டு விலகி உச்சாபி முகமாக பரமோச்ச பாகையை வீட்டுக்குள் இருக்கும் ஆறு ராசிகளில் ஏதேனும் ஒரு இடத்தில் இருந்தால் அந்த திசையை அரோகணி திசை என அழைக்கப்படும் ..இந்த திசை அல்லது புக்தி நற்பலனையே தரும் ..
இந்த ஆரோகணி திசை நாதன் நட்பு -ஆட்சி-உச்ச நவாம்சத்தில் இருந்தால் அதை “சம்பூர்ண திசை” பலனை கொடுப்பார்கள்..
இந்த திசை நாதன் பகை- நீச நவாம்சத்தில் இருந்தால் மத்திம பலனை கொடுப்பார்கள் ..
அதாவது “நற்பலனை” கொஞ்சமாக கிள்ளி கொடுப்பார்கள்என கூறப்படுகிறது..
ஒரு திசையை
1] சம்பூரண திசை
2] பூரண திசை
3] இருத்தை திசை
4] அரிஷ்ட திசை
5] ஆரோகண திசை
6] அவரோகண திசை என பல வகையாக இந்த “விம்சோத்திரி” திசையை பெயர் வழங்கப்படுகின்றன..
----------------------------------------------------------------------------------------------------------------------------------------இவ்வாறாக இந்த “ஜோதிட கட்டுரையை”
காலம் சென்ற நாமக்கல் மாவட்ட  சிங்களாந்த புரத்தில் வாழ்ந்த அமரர் கும்பகோணத்தார் என அழைக்கப்பட்ட அருணாசலம் அவர்கள் அவர் உயிருடன் வாழ்ந்த போது 14-03-2000 அன்று எழுதிய ஒரு ஜோதிட கட்டுரை ஆகும்..
அனைவரும் அமரர் கும்பகோணத்தாரின் இந்த கட்டுரையை அப்படியே ஷேர் செய்யுங்கள் “காப்பி பேஸ்ட்” செய்வது குருத்துரோகம் ஆகும்..
என்றும் ஜோதிட பணியில்
பெருந்துறையில்
இருந்து
Astro Senthil Kumar
ஸ்ரீவீரபத்ர ஜோதிட மையம்
பெருந்துறை
Wats App:- 9843469404







 

No comments:

Post a Comment