Sunday 16 October 2016

திசா சந்தி என்பது என்ன??????????

திசா சந்தி என்றால் என்ன???
திருமண பொருத்தத்தில் இன்று மிகப்பெரிய குழப்பம் தரும் சங்கதி இது ..
இன்றைய ஜோதிடர்கள் இடையே மிகப்பெரிய “சர்ச்சை”
காரணம் ஏக திசை நடப்பதில்
ஒரு ஜோதிடர் செய்யலாம் என்கிறார்..[சரியான பதில்]
இன்னொரு ஜோதிடர் ஏக திசையில் செய்யக்கூடாது என்கிறார்..[ இது தவறான பதில் ]
மக்களுக்கு இதில் மிகப்பெரிய குழப்பம்
“ஜோதிடத்தை “
நம்புவதா???
நம்பக்கூடாதா???
என்பது குழப்பம்..
உண்மையில் ஏகதிசை நடக்கும் இருவருக்கு திருமணம் செய்யலாம் …
அதில் தவறில்லை …
ஆனால் வெவ்வேறு திசை நடந்தாலும் திசா சந்தி நடந்தாலும் திசா சந்தி வரும்..
அது எப்படி ???
அது தான் இன்றைய நம் உரையாடலில் பேசப்பட வேண்டிய விஷயம்..
முக்கியமாக படித்து விட்டு “ஜோதிடம்” வளர கொஞ்சம் இதை ஷேர் செய்யுங்கள்..
உதாரணமாக ஒரு பெண்
ராகு திசை : 12-08-2018 தொடங்கி 12-08-2026 வரை நடக்கும்
ஒரு ஆண் திசை 19—10-2005 வரை 19-10-2023 வரை நடக்கும்
ஆனால் இதில் ஒரே திசை திசை இருவருக்கும் நடக்கும் “ஏக திசை “ என அர்த்தம் என அர்த்தம் கொள்ளலாம்..
எப்படி எனில் இருக்கும் ஒரே ராகு திசை 1ஆண்டு 9மாதம் 23 நாளும் ஒரே திசை ஆனாலும் அங்கே திசா சந்தி என்பது இல்லை..
ஆனால் ஒரு பெண்ணுக்கு
சனி திசை 12.-08-2020 அன்று முடிகிறது எனில்
அதே கால கட்டத்தில் 12-08-2019 முதல் 12-08-2021 வரை
பெண்ணின் திசை தொடங்கும் [12-08-2020 ]
ஒரு ஆண்டு முன்போ [12-08-2019]
அல்லது
ஒரு ஆண்டு பின்போ [ 12-08-2020 ]
திசை மாற்றம் எந்த திசையில் இருந்து எந்த திசைக்கு வந்தாலும் அது திசா சந்தி என பொருள் கொள்ள வேண்டும்..
ஆனால் இன்று போதித்த ஆசானின் தவறா ??
அல்லது போதனையை புரிந்து கொண்டோர் தவறா??
என தெரியவில்லை ..
ஒரே திசை நடந்தால் உடனே
“திசா சந்தி” வருகிறது என வேறு சில “ஜோதிடர்” சொல்வதை அடிக்கடி என் வாடிக்கையாளர்கள்
என்னிடத்தில் சொல்லி விளக்கம் கேட்கும் போது எல்லாம்
நான் அவர்களுக்கு “மிகப்பெரிய ஜோதிட வகுப்பை “ எடுக்க வேண்டிய கட்டாயத்திற்க்கு உள்ளாகிறேன் ..
“இது ஒரு ஜோதிடரின்” அறியாமையால் செய்யப்படும் “தவறுதல்” என்பதை பகிரங்கமாக சொல்கிறேன்..
என் அன்பிற்கினிய ஜோதிட நண்பர்கள்
“ஏக திசை “ என்பது வேறு
“திசா சந்தி” என்பது வேறு
என்பதை கொஞ்சம் புரிந்து கொண்டு உங்கள் இடத்தில் வரும்
வாடிக்கையாளர்களுக்கு “வழிகாட்டுதல்” செய்ய கோருகிறேன் ..
மேலும்
இந்த சம்பவம் எம் பெருந்துறை நகரை சார்ந்த இடத்திலும்
எம் ஈரோடு மாவட்டம் சார்ந்த பகுதியிலும்
“சில ஜோதிடரின்” [அறியாமையால் ]
தவறான வழிகாட்டுதல் ஆக “ஒரே திசைக்கு”
திசை சந்தி என “தன் கைப்பட” எழுதி கொடுத்த
“பொருத்த அட்டவணை” எம் கையில் உள்ளது..
[ தேவைபடும் பட்சத்தில் தன் பாணியை ஒருவர் திருத்தி கொள்ளவில்லை எனில் யார் யார் என பகிரங்கமாக வெளியிடப்படும் ]
இந்த தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்வது கூட
“பொது மக்களுக்கு “ திசா சந்தி என்றால் “என்ன?’ என ஒரு விழிப்புணர்வு கொடுக்க செய்யப்பட்ட பதிவு தான்..
உங்களுக்கு என ”பொருத்தம்” பார்க்க செல்லும்போது
ஒரு ஜோதிடர் “ஒரே திசையை”
“திசா சந்தி “ என ஒருவர் சொன்னால் “ அவரிடம்”
நீங்கள் இதை “குறித்து” சரியான விபரங்களை கேட்கவும்..
“இதைப்பற்றி”
சரியான விழிப்புணர்வு “அனைவரிடமும்” வர வேண்டும்
என்பதால் இதை அனைவரும் கொஞ்சம் ஷேர் செய்து
“ஜோதிட விழிப்புணர்வு” செய்ய வேண்டுகிறேன்…
இதைப்பற்றிய விவாதங்கள் என் இன்பாக்ஸ் மூலமாக அல்லது ஒரு குழ்வின் மூலமாகவும் நேரடியாக விவாதம் செய்யவும் தயாராக உள்ளேன்.....
பெருந்துறையில் இருந்து
Astro Senthil Kumar
Wats App:- 9843469404
EMAIL:- astrosenthilkumar@gmail.com

No comments:

Post a Comment