Monday 7 September 2015

ஆயுள் முடியும் நிலையில் இருப்போர் எப்படி இருப்பார்கள் ???

காலத்தை முடித்து கைலாயம் செல்ல இருப்போர் எப்படி இருப்பார்களோ என்று கொஞ்சம் யோசித்தேன் ...


ஜோதிடத்தால் எல்லாம் கணிக்கிட இயலும் என்பதை எடுத்துரைக்கும் "குமாரசாமியம் "தன்னுடைய 50வது படலத்தில் சொல்லி இருக்கும் பாடல்களை கொஞ்சம் கவனிப்போமே ...


"கால்கரந்தெப் புண்ணனையா தொருதரநீர் குளிக்கில் கண்ணாடி யில்சிரகா ணாதுநுதல் கவித்து மேலெதிர் பார்த்திடன் மணிக்கை பருக்குமொடு விரலில் விளக்கடங்கா தொளிரு நடு விரல் மடக்க மிகுந்த நால்விரலில் அணிவிரல் மேல் எழும்புமித ழெயிறு நாக்கறுக்கும் கண் செவி நாசிகை குளிர் பஞ்சணைதல் போல் வெளிரி நொய்தூறும் வாய் புகையுமலம் கழியும் போது புலால் வெடிநாறும் திதித்தினம் பொன்றுதற்கே """----குமாரசாமியம் பாடல் எண் ;-409


"ஒருதரம் நீரில் குளித்து எழுதிருக்கில் உள்ளங்கை ,கால் ,தொப்புள் நனையாது இருக்கிலும் ..(ஆற்றில் குளிப்பதை சொல்லி இருக்கிறது என்பதே பொருள் )கண்ணாடி பார்க்கில் தன் சிரசு தனக்கு காணாமல் இருக்கிலும் ..(முகத்தை பார்க்க கையில் கண்ணாடி கொண்டு பார்ப்பதில் சொல்லி இருக்கிறது என்றே பொருள் )புருவ மத்தியில் மணிக்கையை வைத்து தன் கண்ணால் மேலாக பார்க்கில் அடிக்கை சிறுத்து மணிக்கை பெரியதாக இருக்கும்போதும் ஒருவிரலில் விளக்கு அடங்காது ஒளிரிலும் நடுவிரல் பூமியில் மடக்க நின்ற நான்கு விரலில் அணிவிரல் மேல் எழுப்பினாலும் இதழ் வயிறு நாக்கு கறுத்தாலும் கண் செவி நாசி இவை குளிர்ந்து பஞ்சணைந்து மிருதுவாய் வெளிரினும் வாய் புகையினும் மலம் கழியும் போது புலால் வெடி நாறுகினும் ஒரு பட்சத்தில் மரணம் என்று பொருள் ...(முடியாத நிலையில் வயோதிகர் சில இல்லங்களில் இருப்பார்களே அவர்களை கவனித்து பராமரித்து வரும் குடும்பத்தினர் இதை நிச்சயமாக உணரலாம் )


அடுத்தப்படியாக இன்னும் இரு பாடல்கள் இதே "காலம் அறிதல் படலம் "சொல்லி இருக்கிறது அடுத்த பாடலில் சொல்லப்பட்ட சூட்சுமம் 


"நற்குணம்பே தித்தல் பருத் தல்விளைத்த லிதுவ தாதல்பெறு நாட்கடந்தப் பாற்றனையர் காண இற்பெறுதல் வெகுகாலம் பாழடைந்த இடத்தில் இளமையிழந் தவறைமண மேற்றன் மனம் இசையாள் கற்புடைமை அழித்தலுப காரமறந் தவர்கட் காகுலம்செய் திடலான்ம வதைக்காதல் பெரியோர் சொற்குரமேற் றல்புலால் மறுத்து வெகுநாட்பின் தூய்த்தலவ்வாண் டலதிரண்டில் பொன்றுதல் சொல்லுகவே "--------குமாரசாமியம் 50வது படலத்தில் பாடல் எண் 410..


பொருள் ;-


தன்னுடைய சுயநினைவு பேதிக்கும் போதும் ..குண்டாக இருந்தவர் திடீரென்று இளைத்து போவதும் ..இளைத்து இருப்பவர் திடீரென்று உடல் பெருத்து போவதும் ...பேறுகாலம் கடந்து வயோதிகத்தில் குழந்தை பெறுவதும் ....வெகுநாட்களாக பாழடைந்த இடத்தில் மனை எடுத்தலும் ...இளைமை தப்பின வயோதிக பெண்ணை மணப்பதும் ...மனநிலை சரியில்லாத பெண்ணை கற்பழிப்பு செய்வதும் ..ஒருவர் செய்த உபகாரம் மறந்து அவருக்கே எதிராக அபகாரம் செய்வதிலும் ...ஆன்ம வதம் செய்வதிலும் ...பெரியோர்களை மனம் நோக செய்து அவர்களின் குரூர வசனத்தில் சாபத்தை பெறுவதும் ....வெகுநாட்களாக புலால் (மாமிசம் )உண்ணாமல் வாழ்ந்து மேம்போக்காக வாழ்ந்து பின்னர் திடீரென்று புலால் (மாமிசம் )உண்பதும் செய்தால்இதுபோன்ற இழிச்செயல் செய்தோர்களை அந்த ஆண்டும் அல்லது அதற்கு அடுத்த ஆண்டிலும் மரணம் தப்பாமல் நடக்கும் என்பர் ....இந்த பாடல்களில் சொல்லியபடி உணர்ந்து எழுதி இருக்கிறார்கள் ...மேற்சொன்ன விஷயங்களில் எல்லா தவறையும் யாரும் செய்யமாட்டார்கள் ....ஆனால் சிலர் மாமிசம் புசிக்காமல் இடையில் கை விட்டவர்கள் மீண்டும் பல ஆண்டுகள் கழித்து புசித்தால் அவர்களை விரைவாக காலதேவன் அழைக்கிறார் என்றே பொருள் ....

இந்த "காலம் அறிதல் படலம் "இன்னொரு பாடலையும் சொல்லி இருக்கிறது..அந்த பாடல் படியுங்கள் ..


"பொன்றுதலோர் புறத்தொரு நாள் காண்டயனம் உபய போதெனின் முத்தினம் தினமாய்ப் புகல்வர் சரமாகி நின்றவன் மெய் அசையாமல் நிழலசையில் திதியாம் நீருமிழ்வான் வின்மறைந்தே திரோடினி லத்தில் ஒன்றிய கால் சுவட்டுருவம் பாதியுறில் செவிக்கு ஓசையறில் ருசிபிறழின் நயனவிழிப் பொளிக்கில் தென்திசை யுற்றிடற் குளநாள் தெசமாகும் இதன்மேல் திரிமல்லி வினோத வியல் குள்ளதும் செப்புதலே """"

குமாரசாமியம் 50வது படலத்தில் பாடல் எண் 411

(காலம் அறிதல் படலம் )பொருள் ;-


ஒருநாள் முழுவதும் ஒரு பக்கமாக சரம் (மூக்கின் மூச்சுக்காற்று )ஓடில் ஒரு ஆண்டில் அச்சாதகர் மரணத்தை அடைவார் ..இருநாள் தொடர்ந்து ஒருபுறம் சரம் ஓடில் ஒரு அயனத்தில் மரணம் ....(உத்தராயணம்/ தட்சிணாயனம் ) ஆறுமாதம் ...மூன்று நாட்கள் சுவாசம் ஒரு சரமாக ஓடில் சந்திரன் ஒரு சுற்று (27 நாட்களில் )வருமுன் மரணமே ....சரீரம் அசையாமல் இருக்கும்போது நிழல் மட்டுமே அசையும் பட்சத்தில் பதினைந்து நாட்களில் மரணம் நிச்சயமாக ஏற்படும் ...வாய் நீர் உமிழும் போது வானவில் போலும் பஞ்ச நிறமும் வளைதல் இல்லாமல் நேர் ஓடுவதும் ,நிலத்தில் காணிலும் ,செவிக்குள் ஓசை வரும் அறிகுறிகள் ஏற்படுவதும் ருசி பேதிக்கிலும் நயன விழிப்பு ஒளிக்கிலும் பத்துநாளில் மரணம் ......


சிறுகுறிப்பு ;- எனக்கு நேரில் முன் வாழ்ந்த சில ஜோதிடர்களாக வாழ்ந்த சில ஆசான்கள் தனக்கு இந்த மாதத்திற்கு மேலே இருக்க மாட்டான் இறைவன் அழைக்கிறார் என்று சொல்லி அதுபடியே சரியாக மரணத்தை அடைந்து இருக்கிறார்கள் ...நானும் கொஞ்சம் வியந்து இருக்கிறேன் ..(நீங்களும் கூட இதுபோன்ற ஆசான்களே சொல்லக்கேட்டு அதுபோலவே நடந்து இருப்பதை அறிந்து இருப்பீர்கள் என்றே நம்புகிறேன் )
எப்படி சாத்தியம் ஜோதிடத்தால் முடியுமான்னு யோசித்தால் 
"நிச்சயமாக எல்லாம் சாத்தியம் தான் "


என்பதற்கு இந்த மூன்று செய்யுள்களை மூன்று பாடலையும் வாசித்து இப்போது அறிந்து இருப்பீர்கள் என்றே நம்புகிறேன் ..


இனி அடுத்தபடியாக வேறு ஒரு படலத்தை ஆய்வுகள் செய்வோமே ...நன்றி வணக்கம் ..என்றும் ஜோதிடப்பணியில் !!தொடர்புகொள்ளஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம், புதுபஸ் நிலையம் பின்புறம் பெருந்துறை   -638 052ஜோதிடர்A .செந்தில் குமார் செல்: +91 98427 69404             +91 98434 69404    
astrosenthilkumar@gmail.com 

3 comments:

  1. ஐயா

    கால சக்கர தசை என்ன ஆயிற்று?

    எம்.திருமால்
    பவளத்தானூர்

    ReplyDelete
  2. அரு மை அற்புதம் இப்ப யாருக்கும்
    இதன் அரு மைதெரியாது.எப்பவாவது னைப்பாங்க.நம்ம பதி வை.நன்றி.வணக்கம்

    ReplyDelete
  3. அருமை .
    தொடருங்கள் அண்ணா

    ReplyDelete