Thursday 1 May 2014

ராசிசக்ரத்தில் சுக்கிரன் பலமும் பலஹீனமும் [ பலநிர்ணயம்]

ராசி சக்ரத்தில் சுக்கிரனை பற்றிய பால்த்தை பலரும் சொல்லி இருந்தாலும் மிக நுட்பமாக ஆராய்ந்து கவனித்து பலன் உரைப்பதே ஜோதிடத்துக்கும் ஜோதிடர்களுக்கும் நல்லது!!அவசியத்தை உணர்ந்து எம்மால் ஆன சிறு முயற்சி இது!!!


சுக்கிரன் தன் ராசியில் பலவான் ஆகிறார்.


சுக்கிரன் அம்சத்தில் பலவான் ஆகிறார்.


சுக்கிரன் திரேகாணத்தில் பலவான் ஆகிறார்.


சுக்கிரன்  மூன்று & எட்டாம் மற்றும் பன்னிரண்டாம் வீட்டில் பலவான் ஆகிறார்.


சுக்கிரன் வக்கிர சமயத்தில் பலவான் ஆகிறார்.


சுக்கிரன் சூரியன் இருக்கும் ராசிக்கு முன் ராசியில் இருக்க பலவான் ஆகிறார்.
சுக்கிரன் பிற்பகலில்  பலவான் ஆகிறார்.



சுக்கிரன் உச்சத்தில் இருக்க பலவான் ஆகிறார். [அதிலும் மேஷலக்ன ராசிக்கு நற்பலன் அதிகம் தருபவர் ஆகிறார்.]


சுக்கிரன் கிரஹங்களுக்கு வடக்கில் இருக்க  “அதிகபலம்” கொண்ட பலவான் ஆகிறார்.

பாவகத்தில் மத்தியில் இருக்கும் சுக்கிரனால் மட்டுமே நற்பலன் .


சுக்கிரன் குரு மற்றும் சந்திரன் உடன் கூடனாலும்  யுத்தத்தில் ஜெயம் பெற நற்ப்பலன் தரும் நிலை அடைகிறார்.

சுக்கிரன் மேஷம்- ரிஷபம்- விருட்சிகம்- கும்பம்- இவைகள் லகனாமாகி அதிலேயே சுக்கிரன் அமர பலவான் ஆகிறார்.


சுக்கிரன் விருட்சிகம்- தனுசு பிற்பாதி இவைகள் ஏழாம் இடமாகி அதில் சுக்கிரன் இருக்க  பலவான் ஆகிறார்.


சுக்கிரன் சிம்மம்-விருட்சிகம்- தனுசு முற்பாதி- மீனம் இவைகள் பத்தாம் இடமாகி அதில் சுக்கிரன் இருக்க பலவான் ஆகிறார்.


சுக்கிரன்  மகரத்தின் பிற்பாதி நான்காம் இடம் ஆகி அதில் சுக்கிரன் இருக்க பலவான் ஆகிறார்.


சுக்கிரன் சுய வீட்டிலும் யுத்தத்தில் ஜெயம் பெறவும் பூர்ண பலவான் ஆகிறார்.


சுக்கிரன் ஒருராசியின் ஆரம்பத்தில் 10 டிகிரிக்குள் இருக்க பலஹீனம் அடைந்து விடுகிறார்.

சுக்கிரன் ஒருராசியின் மத்தியில் 10 முதல் 20 டிகிரிவரை இருக்க பூர்ண பலத்துடன் பலன் தரும் பலவான்  ஆகிறார்.

சுக்கிரன் ஒருராசியின் 20 முதல் 30 டிகிரி வரை கடைசியில் இருக்க அற்ப பலம் தரும் பலவான் ஆகிறார்.


இவ்வாறாக ராசியின் ஆரம்ப பலனும் மத்தியபலனும் அந்திமபலனும்  “கிரஹங்களுக்கு கிரஹம் மாறுபாடு” வருவதை சற்று உன்னிப்புடன் கவனிக்க தப்பாது பலாபலன் பலிதம் ஆகும்.இதை சற்று உன்னிப்பாக கவனிக்க பல தப்பாது என்பதே உண்மை..


இது போன்ற எண்ணற்ற ஜோதிட சூட்சுமங்கள் பழமையான மூல நூல்களில் பொதிந்து கிடக்கிறது!!!எமது அடுத்த பதிவில் வரிசை கிரமமாக அனைத்து நவநாயகர்களின்பல நிர்ணயம் குறித்து வரிசையாக தரவுள்ளேன்.இங்கே படிக்கும் நண்பர்கள் சற்று கருத்தை பதிவு செய்து சென்றால் சற்று ஆறுதலாக இருக்கும், 15,000 நபர்கள் பார்வையிட்டும் 150 கருத்துக்கள் கூட நண்பர்கள் பதியவில்லையே?? ஊக்கம் தருவதே எம்மை அதிகமாக எழுத வைக்கும்.நன்றி!!

என்றும் ஜோதிட பணியில்!!
ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம்.பெருந்துறை.
செல்:- +91 98427 69404
செல்;- +91 98434 69404



4 comments:

  1. sukkiran guru placed at 12 th house. its good or not?

    ReplyDelete
  2. very good points first time seeing u r blog sir. Nice work

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. ரிச இலக்னம் 11ல் உத்திரா ட்டதி சுசுக்ர நற் பலன்கள் தருவது இல்லை ஏன் என்று காரணம் விளக்க வேண்டும் ஐயா

    ReplyDelete