ஜோதிட குறிப்புகள்
Tuesday, 28 March 2017
Saturday, 25 March 2017
அரசுஉதவி நாடி செல்லஉகந்த நாள்
அரசு அதிகாரிகளை அணுக உகந்தநாட்கள்..
ஒரு V.A.O.
ஒரு தாசில்தார்
ஒரு கலெக்டர்
ஒரு M.L.A
ஒரு அமைச்சர் போன்ற ஆசாமிகளை
நமது கார்யம் காரணமாக செல்லும்போது அவர்களை எந்தநாளில்
சென்று பார்த்தால் நமக்கு நம் பணியில் வெற்றி கிடைக்கும் என
குழப்பத்தில் இருப்போர்களுக்கு ஆகவே இந்த பதிவு.....
சுந்தரானந்தர் சோதிட காவியம் என்ற மூலநூலில்
சுந்தரானந்தரின் 300முகூர்த்தம் என்ற தலைப்பில் சொல்லிய விஷயத்தில் இன்று ஒரு செய்யுளை வாசிப்போம்....
மிகுத்ததோர் மன்னர்தெரி சனங்கள் செய்ய மிக்கமுள்ள திங்கள் புதன் வியாழன் வெள்ளி பகுத்ததோர் துவாதசியுந் திரயோதசி பஞ்சமித் தமி தசமி திருதிகையும் தொகுத்ததோ ருத்திரட்டாதியோணம் தூய் சதயம் ரேவதிரோ கணியும் பூசம் வகுத்ததோ ரிடப துலாந் தனுர் மீனத்தில் மகாராஜ தெரிசனங்கள் செய்யுநாளே..
என்கிற பாடல் எண்29
ஆகும்
இதில் சொல்லப்படும் கருத்து ஆனது
அரசு சார்பில் நமக்கு தேவைப்படும் வேலையை
திங்கள்
புதன்
வியாழன்
வெள்ளிக்கிழமை அன்று
திருதியை
பஞ்சமி
தசமி
திரயோதசி
துவாதசி
ஆகிய திதிகள் கூடும் நாளில்
ரோஹிணி
பூசம்
திருவோணம்
சதயம்
உத்திரட்டாதி
ரேவதி
ஆகிய நட்சத்திரம் அமையும் நாட்களில்
#மன்னர்
தரிசனம் செய்ய கார்ய வெற்றி அடையும்
என்கிறது
இப்பாடல்...
இன்னும் வேறு ஒரு பழைமையான ஜோதிட பாடலை அடுத்த பதிவில் காண்போம்...
என்றும் ஜோதிடப்பணியில்
பெருந்துறையில் இருந்து
Astro Senthil Kumar
Wats App 9843469404
ஜோதிட ஆலோசனைகளை பெற கட்டண அடிப்படையில் அணுகவும்.
Sunday, 5 March 2017
திடீர் திருமண யோக பெண்
திடீரென திருமணம் கை கூடும் ஆணுக்கோ /பெண்ணுக்கோ உறுதிபடுத்தப்பட்டு நடக்கும் அது போன்ற சம்பவங்களை நாமும் கேட்டும் இருப்போம் ....
இந்த பெண் கடந்த 05-04-1994 அன்று 6.55 காலை சேலத்தில் பிறந்த இவருக்கு கடந்த 22 வயது 5வது மாதத்தில் இவருக்கு திடீரென திருமணம் ஏற்பாடு ஆகி நடந்தது ... இவரை மணந்த ஆணுக்கு ஏற்கனவே வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமண தேதி உறுதி செய்து பத்திரிக்கை அழைப்பும் சென்று திருமணம் நடக்க ஒரு வாரம் இருக்கும் போது அந்த பெண் அவள் காதலன் உடன் ஓடி விட்டார்...
உடனடியாக அதே தேதியில் தன் திருமணம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் உறவினர்கள் மூலமாக இந்த பெண்ணை திருமணம் செய்ய முடிவு ஆனது ..
இந்த ஜாதகியின் “ராகு திசை புதன் புக்தி”க்கு அன்றே “புலிப்பாணி சித்தர்” எழுதிய பாடல் இது
சேதமில்லா ராகு திசையில் புதனார் புக்தி செப்பு நாள் மாதமது முப்பதாகும் பாதமில்லா நாளதுதான் பதினெட்டாகும் பகுத்தறியும் அதன்பலனை பகரக்கேளு ... வாதமில்லா வாணிபம் செட் ஆகும் பாரு.. வகையான சகோதரமுடன் வாழலாகும்.. பேதமுடன் பொருள் உண்டாம் பூமிலாபம் பொங்குமாங் புத்திரனில் புகழ்மிகப்பாரே!!!!!”””””’---------இவ்வாறான புலிப்பாணி பாடல்
பொதுவாக சில திடீர் திருமணங்கள் மூலமாக வாழ்க்கையில் நினைத்து பார்க்க உயரத்தில் வாழ்க்கையை அமைத்து கொடுத்த கிரகங்கள் மீது இந்த ஜாதகிக்கும் பெற்றோருக்கும் ஜோதிடத்தின் பால் நம்பிக்கை பல மடங்கு உயர்ந்து உள்ளது,.......
Wednesday, 26 October 2016
பிரசன்ன ஜோதிட குறிப்புகள் குறித்த பதிவு ..
அசுவினி முதலாக நட்சத்திரங்களை எண்ணி பிரசன்னம் கேட்கப்படும் அந்த நாளில் சந்திரன் நின்ற நட்சத்திரம் வரை எண்ணி கொண்டு அத்துடன் நிறுத்தி கொண்டு எட்டு கட்டம் வரும்படி கட்டம் அமைத்து ஒவ்வொன்றிலும் மூன்று நட்சத்திரம் வீதமாஅக் அசுவினி முதலாக எண்ணி அமைத்து வரும் போது எந்த திக்கில் நிற்கிறதோ அந்த திக்கில் கைவிட்டு போன பொருள் இருக்கும் என அர்த்தம் கொள்ள வேண்டும்..[ எட்டு கட்டமும் எட்டு திக்கு ஆக பாவிக்கப்பட வேண்டும் நடு கீழ் மத்தியில் இருந்து “கிழக்கு” திசையில் இருந்து தட்சிண வலமாக கணிக்கில் எடுத்து கொண்டு கவனிக்க வேண்டும் ]
திதி
வாரம்
நட்சத்திரம்
லக்னம்
ஜாமம்திக்கு
நட்சத்திரங்களை
கொண்டு எந்த திக்கில் நஷ்டம் ஆன பொருள் இருக்கும் என்பதை கணிக்கும் முறை :-
கிருத்திகை
ரோஹிணி
மிருகசீரிடம்
திருவாதிரை
புனர்பூசம்பூசம்
ஆயில்யம் ஆகிய
நட்சத்திர நாளில் நஷ்டம் ஆகினில்
நிச்சயமாக இந்த
நஷ்ட சொத்து “கிழக்கு” திசையில் இருக்கும்..
மகம்
பூரம்
உத்திரம்ஹஸ்தம்சித்திரை
சுவாதி
விசாகம் ஆகிய நட்சத்திர
நாளில் நஷ்டம் ஆகின் இழந்த பொருள் நிச்சயமாக “ தெற்கு” திசையில் இருக்கும்
அனுஷம்
கேட்டைமூலம்
பூராடம்
உத்திராடம்திருவோணம் ஆகிய
நட்சத்திர நாளில் எனில் “மேற்கு” திசையில் இருக்கும்..
அவிட்டம்சதயம்
பூரட்டாதிஉத்திரட்டாதிரேவதி ஆகிய நட்சத்திர
நாளில் எனில் “வடக்கு” திசையில் நஷ்ட பொருள் இருக்கும் என கணிதம் ஆகும்..
“கைவிட்டு போன
பொருளோ நபரோ உள்ளூரிலா??? வெளியூரிலா?? வெகுதூரத்திலா?? என கேள்வி எழும்போது அதை பற்றிய
ஆருடம் கணிக்கும் போது
மகம்
பூரம்
உத்திரம்
ஆகிய மூன்று நட்சத்திர
நாளில் பிரசன்னம் எனும் போது அந்த நஷ்ட பொருள் மிகமிக சமீபத்திலேயே உள்ளது என பொருள்
ஆகும் விரைவில் கைக்கு வந்தும் சேரும்..
அஸ்தம்
சித்திரைசுவாதிவிசாகம்அனுஷம்
கேட்டை
மூலம்
பூராடம் ஆகிய நாளில்
ப்ரசன்னம் கேட்பின் நஷ்டம் ஆன பொருள் அந்த ஊருக்குள்ளே தான் உள்ளது நஷ்ட சொத்து விரைவில்
காணப்படும் ..
உத்திராடம்திருவோணம்
அவிட்டம்சதயம்
பூரட்டாதி
உத்திரட்டாதி
ரேவதிஅசுவினிபரணி ஆகிய நாளில்
ப்ரசன்னம் கேட்பின் உள்ளூரில் இல்லாமல் அருகிலுள்ள வெளியூருக்கு சென்று இருக்கும் பிற
ஊரில் கிடைக்கும் எனலாம்.
கிருத்திகை
ரோஹிணிமிருகசீரிடம்திருவாதிரை
புனர்பூசம்
பூசம்
ஆயில்யம் ஆகிய
நாளில் ப்ரசன்னம் கேட்பின் அந்த “நஷ்ட சொத்து” வெகுதூரத்திற்க்கு சென்று விட்டது என
பொருள் ஆகும்..
“ஒரு களவாடிய பொருள் ஆனது யாரால் களவாடப்பட்டு இருக்கும் எனும் ப்ரசன்னம் காணும் விதம் ஆனது :- ப்ரசன்னம் கேட்கும் காலத்தில் ஏற்படும் “லக்னம்” கொண்டு இதை கணிக்கலாம்.. “மேஷலக்னம்” எனில் அந்த நஷ்ட சொத்தை களவு செய்தது “பிராமாணர்” என பொருள்..“ரிஷப லக்னம்” ப்ரசன்ன லக்னம் எனில் சொத்தை களவாடிய ஷத்திரியர் இனத்தால் எனவும் சொல்லலாம்.“மிதுன லக்னம்” ப்ரசன்ன காலத்தில் அது வைசியர் தான் அதை களவாடியது என அறியலாம்..
“கடக லக்னம்” ப்ரசன்ன காலத்தில் லக்னம் “சூத்திரரால்” களவாடப்பட்டது..“சிம்மம்” லக்னம் ப்ரசன்ன லக்னம் ஆகின் “சோரர்” தன் உறவுகளே “திருடி” இருக்கலாம் என அறியலாம்..“கன்னி” லக்னம் ஆகின் அவரோ அல்லது அவரது மனைவியோ கூட இருக்கலாம்…
“துலாம் “ லக்னம் நஷ்ட ப்ரசன்ன நேர்ந்தால் அவரது
தன் புத்திரர் அல்லது தாய் அல்லது தன் சகோதரர் இவர்களால் சோரம் ஆனது ..
“விருட்சிகம்” லக்னத்தில் “நஷ்ட ப்ரசன்ன” நேர்ந்தால்
“தன்னை” பற்றி சாராதவர் அன்னியர் திருட்டை செய்தவர்கள்..
“தனுசு” லக்னம்
ப்ரசன்ன காலத்தில் லக்னம் ஆகில் நஷ்ட ஆன பொருள் “சொந்த எஜமானனே “ “கள்வர்” அதாவது தானே
“அபகரித்தவர் எனலாம்..”மகரம்” லக்னம்
ப்ரசன்ன நஷ்ட பிரச்சனை ஏற்பட்டால் “ பெருச்சாளி” பொருள் நஷ்டம் ஆனது என சொல்லலாம்..”கும்பம்” லக்னம்
“நஷ்ட ப்ரசன்ன” செய்யப்பட்ட லக்னம் ஆகினில் “தாய் மாமன்” சொத்து களவாடப்பட்டது ….
கர்ப்ப துவார பாஹிய
பிரச்சனை குறித்துமேஷம்கடகம்துலாம்மகரம்ஆகிய நான்கு ராசிகளும்
துவார ராசிகள் எனும் சர ராசிகள் என நினைவில் கொள்ளவும்
ரிஷபம்
சிம்மம்
விருட்சிகம்கும்பம்
ஆகிய நான்கு ராசிகள்
பாஹிய ராசி எனும் ஸ்திர ராசிகள் என நினைவில் கொள்ளவும்
மிதுனம்
கன்னிதனுசுமீனம்
ஆகிய நான்கு ராசிகளும்
கர்ப்ப ராசி உபய ராசிகள் என நினைவில் கொள்ள வேண்டும்..
இந்த விதிப்படி
அதாவது
துவார ராசி என்பது
சரராசி
பாஹிய ராசி என்பது
ஸ்திர ராசி
கர்ப்ப ராசி என்பது
உபய ராசிஇதை எல்லாம் ஒரு
ஆருட ராசியாக கொண்டு யோசிக்கும் போது முதலில்
சொல்லி இருக்கிற கர்ப்ப ராசி [ உபய ராசி ] எனும் எந்த ராசியில் நேர்ந்தாலும் பிரசன்னம்
கவனிக்கப்படும் விஷயம் “ஜீவன்” சிந்தனையை கொண்டதாக இருக்கும்..
பாஹிய ராசி [ ஸ்திர ராசி ] எனும் ரிஷபம் , சிம்மம், விருட்சிகம், கும்பம் இவைகளில் பிரசன்னம் கேட்கப்படும் போது “ மூலசிந்தனை” பற்றியதாக இருக்கும்..இரண்டு , நான்கு, பால கால்களை சம்பந்தமான இருகால் நான்கு கால் அல்லது பலகால் ராசி இவைகளை உடையவை “ஜீவசிந்தனை” ஆக இருக்கும்..
வெள்ளி, வெண்கலம், தங்கம், துக்கநாகம், ஈயம், இரும்பு, நவரத்னம் இவைகளை “தாது” சிந்தனையில் அடங்கும் …வாணிபம் யுத்தம் ,தானியம், விருட்ஷம், வீடு, பாக்கு, கந்தம்,கற்பூரம், கஸ்தூரி , புதுவிதைகளை நடுதல் ஆகியவை “மூலசிந்தனை”யில் அடங்கும்..
மேஷம் மீனம் தனுசு, இவைகளை நடப்பு ராசிகள் ஆகும்..மிதுனம், துலாம், கும்பம் ஆஸீன ராசிகள் ..கடகம் சிம்மம். விருட்சிகம், இவைகளை இருப்பு ராசிகள்..ரிஷபம் கன்னி மகர ராசிகள் சயன ராசிகள் ..இவைகளில் நடப்பு ராசிகள் பிரசன்னம் கேட்கப்பட்டால் “ கோர சம்பவம்” ”கோர கலகம்” குறித்த ”ஆருடமாக” இருக்கலாம்..
நோயாளி சம்பந்தமாக
பிரச்னைகளை கேட்கும் போது கர்ப்ப ராசிகளில் பிரசன்னம் கேட்கும் போது வியாதி அல்ல என்றும்
துவார ராசிகளில்
பிரசன்னம் செய்தால் நோய் அதிகம் உடைய நோயாளி மிருத்யவை அடைவான் என்றும்
பாஹிய ராசிகளில்
பிரசன்னம் நேர்ந்தால் நோயாளி சுகத்தை அடைவான்
என்றும் ஆருடம் சொல்லவும்..
[1] சம்யுக்தம்
[2] அஸமயுக்தம்
[3] அபிஹிதம்
[4] அநபிஹிதம்
[5] அபிகாதிகம்
[6] ஆலிங்கிதம்
[7] அபிதூமிதம்
[8] தக்தம்
ஆக எட்டு விதங்களிலும்
பிரசன்னக் கேட்கும் போது கேட்பவர் பக்தி சிரத்தையுடன் தன் கையினால் வேறு எதையும் தொடாமலும்
ஒரு விதமான சேஷ்டைகளும் செய்யாமல் இருந்து கேட்கும் பிரசன்னத்திற்கு ஸமயுக்தம் என்று
பெயர் ..இப்படி கேட்கும் பிரச்சனை மிக்க உத்தமமான பலனை தரும். லாபமும் உண்டாகும்..பிரசன்னம் கேட்கும்
போதுமார்க்கங்களில்
இருந்து கொண்டும் படுத்து கொண்டும் வாகனங்களிள் அமந்து கொண்டும் சரியான ஜோதிடம் கேட்கும்
எண்ணம் இன்றியும் பழம் தாம்பூலம் தட்சிணை இவையின்றியும் கேட்கும் பிரசன்னத்திற்கு அஸமயுக்தம்
என பெயர் ஆகும். இதன் பலன் இவர்களின் கேள்விக்கு வெகு நாட்கள் கழித்தே பிரசன்னன் கேட்டதிற்கு
பலன் சித்தி ஆகும்..
பிரசன்னம் கேட்கும்
போது மங்களகரமான பொருட்களை வைத்து கொண்டே
கொண்டே அல்லது
எடுத்து கொண்டே அல்லது தொட்டு கொண்டே ஒருவர் பிரசன்னம் கேட்கிறார் எனில் அது அபிஹிதம்
என்று பெயர் ஆகும்..இதன் அர்த்தம்
ஆனது பிரசன்னம் கேட்ட விஷயம் மிக நல்ல லாபகரமான ஆதாயம் தரும் .சித்திக்கும் என பொருள்
ஆகும்..பிரசன்னம் கேட்ட
போது அவர்கள் தன் கையினால் அடுத்தவர்கள் சரீரத்தை தொட்டு கொண்டே கேட்டால் அது அநபிதம்
என பொருள் ஆகும்..இது போன்ற பிரசன்னம் கேட்கும் போது வினவப்படும் கேள்வியில் எந்தவொரு
பலனும் அவர்களுக்கு கிட்டாது .. மேலும் அதில் அவர்களுக்கு நஷ்டமே ஏற்படுத்தும் என பொருள்
எடுத்து கொள்ளலாம்..
பிரசன்னம் கேட்கும் போது தன் சகாயத்தினால் பிறருக்குக்காக கேட்கப்படும் போது தலையை தடவிக்கொண்டே கேட்டாலும் அல்லது இதயப்பகுதி ஆகிய இடத்தில் அடித்து கொண்டே கேட்டாலும் கைகளால் காலை தடவி கொண்டே கேட்டாலும் அடித்து கொண்டே கேட்டாலும் அல்லது கை கால்களை ஆட்டி கொண்டே கேட்டாலும் அதன் பெயர் “அபிகாதிகம்” என பொருள் ஆகும்.. இதன் பலனாக அவர்கள் சோகமும் பாதகமும் அடைவார்கள் என்பதே இதன் பொருள் ஆகும்..பிரசன்னம் கேட்பவர் தான் கேட்கும்போது கேட்பவர் தன்னுடைய வலது கையினால் தன் சரீரத்தை தொட்டு கொண்டே கேட்டால் அது ஆலிங்கம் என பெயர் ஆகும். இதன் பலன் சுகமும் சற்றே துக்கமும் உண்டாகும் என பொருள்..துக்கத்தை சில வியாகூலம் எனவும் கூறுகிறார்கள்..பிரசன்னம் கேட்கும் போது ஒருவர் தன்னுடைய இரு கைகளாலும் தன்னுடைய சர்வ அங்கங்களை தொட்டுக்கொண்டே கேட்டால் அந்த பிரசன்னம் ஆனது “அபிதூமிதம்” என பெயர் ஆகும்..இதன் பலன் அற்ப லாபமும் மித்திரர் வருகையும் அந்த மித்திரரால் இவருக்கு அற்ப லாபமும் என்கிற வெளிப்பாடு தான் இந்த பிரசன்னம் என கருத்தில் கொள்ளலாம்..
பிரசன்னம் கேட்கும் போது அழுது கொண்டோ அல்லது அலட்சியமாகவோ அல்லது ஜலத்தில் கால் வைத்து கொண்டோ அல்லது குளித்து கொண்டோ தகாத இடங்களில் இருக்கும் போதோ தகாத செய்கை செய்து கொண்டோ பக்தி ஹீனமாக இருந்து கொண்டோ அங்கும் இங்கும் அலைந்து கொண்டோ நல்ல எண்ணமின்றியோ , இன்னொருவருடன் வீண் வாய் சண்டை இட்டு கொண்டோ துன்பப்பட்டு கொண்டோ கேட்கும் போது இதன் பெயர் “தக்தம்” என சொல்லப்படுகிறது..இதன் பலன் “நிஷ்டபலன்” இவர்களின் பிரசன்ன கேள்வியால் எந்தவொரு பலனும் ஏற்ப்பட போவதில்லை என பொருள் ஆகும்..
இவர்கள் பிரசன்னம்
கேட்கவும் தகுதி இல்லாதவர்கள் ..இவர்கள் கேடபதற்க்கு
சமாதானம் ஆக இவர்களுக்கு இக்கலியுகத்தில் ஜோதிடரால் எதையும் சொல்லி விட முடியாது
..மேலும்
அனர்தகர்களுக்கு
விசுவாசம் அற்றவர்களுக்கு பெரிய சந்தேககாரர்களுக்கு பரிகாசம் பேசுவோருக்கும் பிரசன்னம்
சொல்லவே கூடாது என்பதே இதன் பொருள் ஆகும்…
மேஷராசி பிரசன்ன
ராசி ஆனால் இருகால் உள்ளவைகளை பற்றியதும்ரிஷபராசி ஆனால்
நாற்கால் ஜந்துவைப்பற்றியதும்..மிதுனம் இரட்டைப்
படை ராசி ஆகினில் கேட்கும் பிரசன்னம் “கர்ப்பிணி” குறித்ததும்
கடகராசியில் பிரசன்னம்
கேட்கும் போது வியாபார விவகாரங்களை பற்றியதும்சிம்ம ராசியில்
பிரசன்னம் கேட்கப்படும் போது அரசாங்க உத்தியோகம் குறித்தும்
கன்னி ராசியில்
பிரசன்னம் கேட்கப்படும் போது கன்னி அல்லது விவாஹ சம்பந்தமான கேள்வி எனவும்துலாராசியில் பிரசன்னம்
கேட்கப்படும் போது அது “தாது” சம்பந்தமான விஷயங்கள் எனவும்
விருட்சிக ராசியில்
பிரசன்னம் கேட்கப்படும் போது அது “நோய்” சமப்ந்தப்பட்ட விஷயம் எனவும்தனுசு ராசியில்
பிரசன்னம் ஆகில் அது “தன லாபம் “ குறித்த விஷயம் எனவும்மகர ராசியில் பிரசன்னம்
கேட்பின் அது “ சத்ரு உபாதை” குறித்த பிரசன்னம் எனவும்கும்ப ராசியில்
பிரசன்னம் ஆனால் அது “ ரகசியமான வியாபார ஆதாயம்” குறித்து எனவும்
மீனராசியில் பிரசன்னம்
ஆனால் அது “ ஸ்தானத்தின் அசைவு பற்றியும் விரயம் செய்வது பற்றியும்” என பொருள் கொள்ளலாம்..
பிரசன்னத்தில் ஏற்படும் கால நிர்ணயம் ஆனது எப்படி கணிப்பது எனில்ஆலிங்கிதம் எனப்படும் பிரசன்னத்தில் அன்றைய தினத்திலேயே பிரசன்னம் பலிக்கும் என கருதலாம்.அபிதூமிதம் எனும் பிரசன்னத்தில் கேட்கப்படும் கேள்விக்கு பத்து தினங்களில் பலனுண்டாம்..வேறு பட்ஷத்தில் கேட்கப்படும் கேள்விக்கு பிரசன்னம் கேட்ட தினத்தில் இருந்து ஒரு மாதத்தில் மேற்படி பிரசன்னம் பலிதம் ஆகும் எனலாம்..
Sunday, 16 October 2016
திசா சந்தி என்பது என்ன??????????
காரணம் ஏக திசை நடப்பதில்
ஒரு ஜோதிடர் செய்யலாம் என்கிறார்..[சரியான பதில்]
“ஜோதிடத்தை “
நம்புவதா???
நம்பக்கூடாதா???
என்பது குழப்பம்..
ராகு திசை : 12-08-2018 தொடங்கி 12-08-2026 வரை நடக்கும்
சனி திசை 12.-08-2020 அன்று முடிகிறது எனில்
அதே கால கட்டத்தில் 12-08-2019 முதல் 12-08-2021 வரை
அல்லது
அல்லது போதனையை புரிந்து கொண்டோர் தவறா??
என தெரியவில்லை ..
“திசா சந்தி” வருகிறது என வேறு சில “ஜோதிடர்” சொல்வதை அடிக்கடி என் வாடிக்கையாளர்கள்
என்னிடத்தில் சொல்லி விளக்கம் கேட்கும் போது எல்லாம்
நான் அவர்களுக்கு “மிகப்பெரிய ஜோதிட வகுப்பை “ எடுக்க வேண்டிய கட்டாயத்திற்க்கு உள்ளாகிறேன் ..
“ஏக திசை “ என்பது வேறு
வாடிக்கையாளர்களுக்கு “வழிகாட்டுதல்” செய்ய கோருகிறேன் ..
இந்த சம்பவம் எம் பெருந்துறை நகரை சார்ந்த இடத்திலும்
எம் ஈரோடு மாவட்டம் சார்ந்த பகுதியிலும்
தவறான வழிகாட்டுதல் ஆக “ஒரே திசைக்கு”
திசை சந்தி என “தன் கைப்பட” எழுதி கொடுத்த
“பொருத்த அட்டவணை” எம் கையில் உள்ளது..
“பொது மக்களுக்கு “ திசா சந்தி என்றால் “என்ன?’ என ஒரு விழிப்புணர்வு கொடுக்க செய்யப்பட்ட பதிவு தான்..
ஒரு ஜோதிடர் “ஒரே திசையை”
நீங்கள் இதை “குறித்து” சரியான விபரங்களை கேட்கவும்..
“இதைப்பற்றி”
சரியான விழிப்புணர்வு “அனைவரிடமும்” வர வேண்டும்
என்பதால் இதை அனைவரும் கொஞ்சம் ஷேர் செய்து
“ஜோதிட விழிப்புணர்வு” செய்ய வேண்டுகிறேன்…
இதைப்பற்றிய விவாதங்கள் என் இன்பாக்ஸ் மூலமாக அல்லது ஒரு குழ்வின் மூலமாகவும் நேரடியாக விவாதம் செய்யவும் தயாராக உள்ளேன்.....
Astro Senthil Kumar
Wats App:- 9843469404
EMAIL:- astrosenthilkumar@gmail.com

