veerapathram.com
Thursday, 15 January 2026
Monday, 24 May 2021
ஜோதிட பயிற்சி தளம்-12
கேது என்னும் கிரகம்
சுக்கிரனுக்கு நட்பு கிரகமாக இருந்தாலும் சுக்கிரனின் கார்கத்துவத்துடன் சற்று நேர்
எதிரிடையான எண்ணங்களை கொண்டவர் கொடுப்பவர்..
ஒரு ஜாதகத்தில்
பலம் பொருந்திய சுக்கிரன் எல்லா விதமான சுகங்களை ஏற்ப்படுத்தி அதனால் ஆன்மீகத்தில்
இருந்து தனி மனிதனை விலகி செல்லும்படியான மன சஞ்சலத்தை ஏற்ப்படுத்த கூடியவர் கேது பகவான்..
கேது உலக சுகங்களில்
இருந்து தனி மனிதனை ஆன்மீக பாதையில் திருப்பி மோட்ச மார்க்கம் எனும் பாதையில் கொண்டு
செல்பவர் கேது ..
அதனாலே தான் கேது
ஞானகாரகன் மோட்சகாரகன் என்று கூறுகிறோம்..
பாம்பின் வால்
பகுதி போன்று தொங்கி கிடக்கும் அனைத்து பொருட்களும் கேது காரகன் ஆகிறார்.. வால் போன்ற
தோற்றங்களுடையது.. அதில் சிக்கல் ஏற்பட்டால் நீக்குவது கடினம் ஆகும்.. ஆக கயிறு என்பது
கட்டுவற்கு பயன்படுத்துவதற்க்கு ஆகும். அவ்வாறு மனிதனை இயக்கவிடாமல் கட்டி போடுவார்
...
கேது தந்தை விப்பசித்தியாவார்..
தாய் ஹிம்ஹிகை ஆவார்.. கேது கஸ்யப முனிவரின் பேரன் ஆவார் .. இராகு இவருக்கு அண்ணன்
ஆவார்.. தவம் செய்து செம்பாம்பு உருவமுடைவர் ஆனார்.. சூர்யனுக்கு 13.000 விஸ்திர யோசனையுள்ள
மண்டலத்தில் இருப்பவர் கேது..
இவருக்கு ஆறு குதிரைகள்
பூட்டிய ரதமும் உண்டு என்பர்..
இவர் ஒரு முறை
சூரியனை எதிர்மறை சுற்றில் [ அப்பிரதஷிணமாக] சுற்றி வர 18 ஆண்டுகள் 6 மாதம் ஆகும்.
இவர் அக்னிக்கு விகேசியிடம் பிறந்தவர் என்பதும் சிலருடைய கருத்து ஆகும்..
கேதுக்கு வழங்கும்
மாற்று பெயர்கள் :- பாம்பு , செம்பாம்பு, கதிர்பகை, சிகி, மற்றும் ஞானி..
ஜோதிடவியலில் கேதுவின்
தன்மை பற்றி கவனிப்போம்:-
குணம் :- கொடூரன்
மலர்:- செவ்வல்லி
இரத்தினம்:- வைடூரியம்
நட்புகோள்கள்:-சனி
-சுக்கிரன்
பகை கோள்கள்:-
சூர்யன், சந்திரன், செவ்வாய்
சமமான கோள்கள்:-
புதன், குரு
கோளின் காரகம்:-
மாதாமஹன், ஞானம், மோட்சம்,
கோளின் ஆட்சி வீடு
:- இல்லை [ இருக்கும் இடமே அதன் வீடு ஆகும்]
கோளின் மூலத்திரிகோண
வீடு:- மீனம்
கோளின் உச்ச வீடு:-
விருட்சிகம் [ உச்ச வீடு இல்லை என்பது சிலர் கருத்து ஆகும்]
கோளின் நீச்ச வீடு:-
ரிஷபம் [ சிலர் இல்லை என்பர்]
கோளின் நட்சத்திரங்கள்:-
அசுவினி, மகம், மூலம்
கோளின் திசை ஆண்டுகள்
- ஏழு ஆண்டுகள் ஆகும்
கோள் ஒரு ராசியில்
இருக்கும் காலம்:- ஒன்றரை ஆண்டுகள்
ஷேத்திரம் :- காளஹஸ்தி
கேதுவின் குணங்கள்
/ காரகத்துவம் / தொழில்
குணங்கள்:-
மெளனம் வைராக்கியம்
திடசித்தம் மன வெறுப்பு சன்யாசௌணர்வுகள் வாழ்க்கையில் விரக்தி அடைதல் எதிலும் பிடிப்பு
இல்லாமை இயங்க விடாமல் முடக்குதல் எதிகால சிந்தனை இல்லாமை ஆன்மீக உணர்வுகள்
காரகத்துவம்
:-
நரம்புகள் முடிகள்
மர்ம உறுப்புகள் ஆசான வாயில் வீட்டின் பின் வாசல் குளியல் அறை ஜோதிஷம் மாந்திரீகம் ஆன்மீகம் சட்டம் கயிறு நூல் மாங்கனி
மரத்தின் வேர் பகுதி மரவிழுது வலை பாம்பின் வால் சங்கிலி சாக்கடை உலர்ந்த் புல் மூலிகை
யானையின் தும்பிக்கை வாழ்க்கையில் ஏற்படும் தடைகள் மிருகத்தின் வால் கருத்து வேறுபாடுகள்
வழக்கு பிரிவினைகள் சண்டை சச்ச்சரவுகள் தத்துவங்கள் இரகசியங்கள் மன வெறுப்பு கொடிய
தண்டனை மன மயக்கம் பரதேச வாழ்க்கை சிறைவாசம் தேச சஞ்சாரம் சூழ்ச்சி எண்ணங்ககள் தற்கொலை
எண்ணம் விரோதத்தால் கொலை செய்ய முயற்ச்சி செய்தல் தலைமுடி விபச்சார தொழில் கலகங்கள்
இரத்த குழாயில் அடைப்பு ஏற்படுத்துதல் தாய்வழி சாபம் ஞானம் தியானம் தவம்
தொழில்:-
சித்த மருத்துவம்
ஜோதிஷம் ஆன்மீகத்துறை அடிமட்ட தொழில் சட்டத்துறை தையற்கடை கயிறு வியாபாரம் மின்கம்பி
சம்பந்தமான தொழில் நூற்பாலையில் பணி புரிதல் மதபோதனை செய்தல் துறவறம் மேற்கொள்ளுதல்
மந்திர சக்தி மூலம் சிகிச்சை செய்தல் மீன் பிடித்தல் முத்து எடுத்தல் மூலிகை வியாபாரம்
செங்கல்,மண் தொழில்; ஞான உபதேசம் செய்தல் செருப்பு வியாபாரம்
கேதுவும் பாவத்தொடர்பு
:-
1ம்- பாவதொடர்பு
:-
குற்றவியல் சிந்தனை
குறுக்கு புக்தி பொய்யான செயல் வீண் விவாதங்கள் வதந்தியை பரப்புவது சூழ்நிலைத்தன்மை
சூது மற்றும் வஞ்சக குணங்கள் தடைகளுடன் கூடிய செயல்கள் மறைமுக சிந்தனை மேலோங்கி இருத்தல்
மனநிலை பாதிப்படைவது ஆன்மீக தொடர்பு வருதல்
2ம்- பாவ தொடர்பு:-
குடும்ப வாழ்க்கையில்
ஆசையின்மை குடும்ப பொறுப்புகலற்ற பேச்சும் செயலும் தத்துவத்துடன் கூடிய செயல்கள் பரதேச
வாழ்க்கை ஒன்றை பலவாக பிரித்து பேசுதல் பிரிவினையுடன் இருத்தல் ஆன்மீக சாஸ்திர ஈடுபாடு
கல்வியில் தடைகள் வருதல் தத்துவ கல்வி காப்பாற்ற இயலாத செல்வாக்கு பண வரவு தடைகள் பொய்யை
நம்பும் விதமாக பேசுதல்
3ம்- பாவ தொடர்பு:-
பொய்யாக குற்றஞ்சாட்டுதல்
வதந்திகளை பரப்புதல் போலியான கடிதங்கள் ஆவணங்கள் உருவாக்குதல் குறிக்கோள் இல்லாமல்
இருப்பது செயல்கலை தடை செய்தல் உழைப்பின்மீது நாட்டமில்லாமை தத்துவார்த்தமான எண்ணங்கள்
ஆன்மீக ஆழத்தினை வெளிபடுத்துதல் சன்னியாச பயணம் செய்தல் உறவுகளுடன் பிரிவினையோடு வாழ்தல்
4-ம் பாவம் தொடர்பு:-
சாஸ்திர சம்பிரதாயங்களில்
ஆழமான ஞானம் வாகனங்களை பயன்படுத்த விரும்பான்மை ஒதுங்கி இருக்கக்கூடிய மனோபாவம் வீடு மனை போன்ற சொத்து சேர்க்க எண்ணம் இல்லாமை
பொறுப்புகள் இல்லாத நாடோடி வாழ்க்கை பழைய வீடுகளில் குடி இருத்தல் பழைய பொருட்களை சேகரித்தல்
தத்துவ உயர் கல்வி பயிலுதல் சித்த மருத்துவ கல்வி பயிலுதல் சுகபோகங்களை வெறுத்ததல்
தாயாருடன் கருத்து வேறுபாடு மூலமாக பகை தாய் அடைதல் தொடர்பு இல்லாத தனிமையை விரும்புதல்
5ம்- பாவ தொடபு:-
ஞானம் மிகுந்த
சிந்தனைகள் குறுக்கு வழியில் செயல்படும் எண்ணங்கள்
குழந்தைகளுடன்
கருத்து வேறுபாடுகள் பிரிவினைகள் ஆன்மீக உணர்வுகளில் அதீத ஈடுபாடுகள் ஆழ்நிலை சன்னியாசம்
துறவிகள் ரிஷிகள் போன்றவர்களை பற்றிய சிந்தனைகள் பூர்வீக சொத்துகளில் வில்லங்கம் மற்றும்
பிரச்சனைகள் பூவீக சொத்துக்கள் குறித்து நீதிமனறம் செல்லுதல் அறிவாற்றலில் குழப்பம்
மிகுந்த சிந்தனை சமூக சடங்களில் குற்றம் காணும் ஞானம் எதையும் குற்றத்துடன் விமர்சித்தல்
விபசார பெண்களுடன் தொடர்பு பாரம்பரிய புகழை பயன்படுத்துவதில் தடைகள் பிரம்மச்சாரியம் தெய்வீக வழிபாடுகள் விநாயகர் ஆஞ்சநேயர் ஐயப்பன்
6ம்*- பாவ தொடர்பு :-
ஆன்மீக நாட்டம்
இல்லாமை ஆலயம் குல தெய்வம் செல்வதில் தடைகள் ஏற்படுதல் கருத்து வேறுபாடுகள் தகராறுகள்,
பிரிவினைகள் வாழ்க்கையில் விரக்தி அடைதல் மனவெறுப்புடன் செயல்படுதல் தேவையற்ற வைராக்கியங்கள்
இயக்கம் இன்றி முடங்கி கிடத்தல் சிதிர்கால சிந்தனை இல்லாமை தேவையற்ற குழப்பங்கள் உருவாக்குதல்
குற்றம் செய்யும் சிந்தனைகளை மேம்படுத்த திட்டம் தீட்டுதல் விபசார தொடர்பில் ஈடுபடுதல்
சூதாட்ட குணங்களுடன் இருத்தல்
7ம்- பாவ தொடர்பு:-
திருமண உறவுகளில் பிரிவினை மற்றும் பிரச்சனைகளை ஏற்படுத்துதல்
கருத்து வேறுபாடுகள்
விவாகரத்து செய்ய முயற்சி செய்தல் வழக்கு குடும்ப உறவில் விரிசல்கள் களத்திர ஒற்றுமை
இல்லாமை களத்திர மாமன் நண்பர்களுடன் விலகி இருப்பது திருமண வாழ்வில் இல்லறத்தில் ஈடுபாடு
பிடிப்பின்மை குடும்ப உறவில் பிடிப்பின்மை தேசாந்திரம் செல்லும் நிலைக்கு தள்ளப்படுதல்
8ம்- பாவ தொடர்பு
நிரந்தர குடியிருப்பில்லாமல்
வாழுதல் போலி ஆன்மிகவாதியாக வேடம் தரித்தல் வாழ்க்கையில் பிடிப்பின்மை மன வெறுப்புடன்
வாழ்தல் தற்கொலை எண்ணம் ஏற்படுதல் பொய் பேசுதல் எதிர்கால சிந்தனை இல்லாமை குடும்பத்திற்க்கு
அவமானம் தேடி தருதல் வழ்க்குகளை சந்தித்தல் மாங்கல்ய தோஷத்தால் வாழ்க்கையை இழத்தல்
போலி ஆவணம் தயாரித்தல் போலி கையெழுத்து போடுதல் பொய் சாட்சி சொல்லுதல் தீராத பிரிவினைகள்
கருத்து வேறுபாடுகள் சண்டை சச்சரவுகள் உடலில் வெப்பம் காரணமாக கட்டி ஏற்படுதல் உஷ்ண
ரீதியான நோய் நொடிகள் அடைதல்
9ம்- பாவ தொடர்பு:-
பிறர்க்கு அறிவுரை
சொல்வதில் அவர்களை ஏளனம் செய்தல் உபதேஷம் செய்தல் தெவீக ஆன்மீக கொள்கைகளுடன் கலவர ஈடுபாடுகள்
இரக்கமற்ற கொடூர
மனதுடன் இருத்தல் கொலைக்குற்ற உணர்வுடன் செய்ல்படுத்தக்கூடிய கொடூரத்தனம் பொய் வதந்திகளை
பரப்புதல் தகப்பனார் வழியில் கருத்து வேறுபாடுகள் பிரச்சனைகள் களத்திரம் மற்றும் இளைய
சகோதரனுடன் கருத்து வேறுபாடுகள்
10ம்- பாவ தொடர்ப்பு:-
சித்த மருத்துவம்
மற்றும் அலோபதி மருத்துவம் மேலும் ஜோதிட மாந்திரீக தொழிலில் ஈடுபடுதல் ஆன்மீக துறையில்
அடிமட்டதொழில் ஆன்மீக சுற்றுலா வழிகாட்டியாக வாழுதல் கயிறு தொடர்பான வியாபாரங்கள் மதபோதனைகளில்
ஈடுபடுதல் நூற்பாலைகளில் பணிபுரிதல் செங்கல் உற்பத்தி மற்றும் மண்பாண்டம் செய்தல் அல்லது
அதனை விற்பனை செய்தல் மின்கம்பிகள் சம்பந்தமான பணி செய்தல்
11ம்- பாவ தொடர்பு:-
சகோதர உறவு கருத்து
வேறுபாடுகளால் வழக்கு நடத்துதல்
தொழில் கூடத்தில்
பிரச்சனைகள் ஏற்பட்டு தொழில் முடங்குதல்
பயனில்லாத பாரம்பரிய
சொத்துக்கள் சித்த மருத்துவம் மாந்திரீக வழி ஆதாயங்கள் ஆன்மீக அடிமட்ட செயல்கள் பணி
வழியால் ஆதாயம் பெறுதல்
12ம்- பாவ தொடர்பு :-
மறுபிறவி இல்லை
எனும் நம்பிக்கை படுக்கை சுகங்களை ஆய்வ்ய் நோக்கில் உணர்த்துவது பரதேச வாழ்க்கை நாடோடி
வாழ்க்கை எதையும் ஒதுக்கக்கூடிய மனோபாவம் வீடு வாகனம் பயன்பாட்டு அனுபவ தடைகள் போன்றவை
என்றும் ஜோதிடப்பணியில்
பெருந்துறையில் இருந்து
ஸ்ரீவீரபத்ர ஜோதிட மையம்
ask எனும்
Astro Senthil Kumar
கட்டண அடிப்படையில்
ஜோதிட ஆலோசனைகள் பெற
Whats App :- 9843469404
Sunday, 31 January 2021
மரணத்தை தள்ளி வைத்த ஜோதிடம்
மரணத்தை தள்ளி வைத்த ஜோதிடம்
நான் பெருந்துறையில்,இருந்து ask எனும் Astro Senthil Kumar எழுதுகிறேன்
எம் ஜோதிட வாழ்க்கை 20 வருடங்களில் இது போன்ற அனுபவம் வந்தது இல்லை
..சாருமதியின் கணவர் சென்னையில் 16-01-2021ல்
03-36 மாலை போன் செய்தார் ., சாருமதி சென்னையில் ஒரு மருத்துவமனையில் வெண்டிலேட்டர் வைக்கப்பட்டு இருப்பதாகவும் மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய் அடைப்பின் காரணமாக கோமா ஸ்டேஜ் அடைந்து இருப்பதாகவும் சர்க்கரை அளவும் அதிகம் எனவும் கிட்னியும் பாதிப்பு அடைந்து இருப்பதாலும் தன் மனைவியை உயிர் காப்பாற்ற இயலாது என “மருத்துவர்” சொல்லி விட்டார் , வெண்டிலேட்டர் எடுத்தால் உயிர் போய் விடும் என மருத்துவர் சொல்லி விட்டார் , எப்பொழுது எடுக்கலாம் என சொல்லுங்கள் என மருத்துவமனை நிர்வாகம் சொல்லி விட்டது.,
எப்பொழுது வெண்டிலேட்டர் எடுக்கலாம் என நேரம் பார்க்க சொன்னார் , எமக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது
இது வரை மரணத்திற்க்கு நானும் நாள் கணித்ததும் இல்லை , 20 ஆண்டு ஜோதிட வாழ்க்கையில் எமக்கு ஒரு புது அனுபவம் என்பதால் உங்கள் உடன் பகிர்ந்து கொள்கிறேன்.,
இது போன்ற அனுபவம் எம் வாழ்க்கையில் வரவில்லை ...
தைமாதம் 1ம் தேதி வியாழன் அதிகாலை 05-05 முதல் [14-01-2021]
தை 7ம் தேதி [ 20-01-21] புதன் மதியம் 12-36 வரை
அடைப்பு நட்சத்திரங்கள் ஆகிய
அவிட்டம்
பூரட்டாதி
சதயம்
உத்திரட்டாதி
ரேவதி
ஆகிய நட்சத்திர நாளில் இறந்தால் அடைப்பு 6 மாதம் நீங்கள் போன் செய்த நாளில்
”பூரட்டாதி”
என்பதால் எதிர் வரும் 20-01-2021 அன்று மதியம் 12-36 நிமிடங்கள் வரை
ரேவதி நட்சத்திரம்
நீடிப்பதால் புதன் [ 20-01-2021] அன்று மதியம் 1-30 மணி வரை ராகுகாலம் பின்னிட்டு வெண்டிலேட்டார் நீக்கி விடுங்கள் என பதில் செய்தேன்..
சரிஅப்படியே செய்வோம் என சொன்ன மருத்துவ நிர்வாகம் கடைசி நேரத்தில்
”கருணை கொலை”
என்பது இந்திய மருத்துவத்துறைக்கு எதிரான ஒன்று ஆகையால்
தானே உயிர் போகட்டும் என சொல்லி விட்டது மருத்துவமனை நிர்வாகம் .....
பின்னர் 20-01-2021 அன்று இரவு 09-15 நிமிடங்களுக்கு இந்த உலகை விட்டு சாருமதி [ புனைப்பெயர்] விண் உலகம் போனது ...
எதற்க்காக பதிகிறேன்...???? இவ்வுலகில் பிறப்பும் இறப்பும் ஒரு ஜோதிடனால் தீர்மானம் செய்ய முடியாது என்பதை அறியவும்...
ஏற்கனவே ஒரு ஜோதிடர் ரஜினிகாந்த் அரசியலில் வரவில்லை எனில் நான் ஜோதிடமே பார்க்க மாட்டேன் என சொன்னார்
அப்படி ஒரு அப்பாட்டக்கர் ஜோதிடர் நான் இல்லைங்க
நான் இன்னமும் ஜோதிடம் படித்து கொண்டே தான் இருக்கிறேன்
பெருந்துறையில் இருந்து
ஸ்ரீவீரபத்ர ஜோதிட மையம்
ஸ்ரீஆண்டாள் திருமண தகவல் மையம்
ask எனும்
Astro Senthil Kumar
Whats App:- 9843469404
Saturday, 5 September 2020
ஜோதிட பயிற்சி தளம் -11 [ராகுவின் தன்மைகள்]
ஜோதிட பயிற்சி
தளம் -11
ராகு கிரகங்களில் மிகவும் வலிமை கொண்டவர். ஏனெனில் ஒளி கிரகங்கள் ஆகிய சூர்ய சந்திரன் இருவரையும் தன் பிடியில் சிக்க வைத்து செயல் இழக்க செய்யும் திறமை கொண்டது..
ராகுவை போககாரகன், யோககாரகன், மாயக்காரகன், அனுபவ காரகன் போன்று பல்வேறு விதமாக அழைக்கப்படுகிறது,,
மனித தலையும் பாம்பு
உடலும் கொண்டவர். ஒரு ஜாதகத்தில் பெரும் யோகம் மற்றும் தோஷங்களை தருவதில் ராகுவே முதன்மையானவர்.. பாவகிரகம் ஆகிய
ராகு எந்த பாவத்தில் அமர்கிறாரோ அந்த பாவத்தின் வலிமையும் தன்னை பார்க்கும் கிரகங்களின்
வலிமையும் தன்னுடன் சேரும் கிரகங்களின் வலிமையும் கவர்ந்து கொண்டு திசை மற்றும் தன்
புக்தி வரும் காலங்களில் அதற்குறிய பலாபலனை வழங்குவார்..
இராகுவின் தந்தை
விப்பரசித்து ஆவார், தாயார் ஹிம்ஹிகை ஆவார். ராகு கஸ்யப முனிவரின் பேரனும் ஆவார், கேது
இவருக்கு தம்பி ஆகும், தவம் செய்து கரும்பாம்பு நிறத்தை அடைந்தவர் ஆவார்,, இவர் எட்டு
குதிரை பூட்டிய ரத்தை உடையவர், சூர்யனை ஒருமுறை சுற்றி வர 18 வருடம் 6 மாதம் எடுத்து
கொள்வார்
ராகுவின் மாற்று பெயர்கள் :-
1] பாம்பு
2] கரும்பாம்பு
3] நஞ்சு
4] மதிப்பகை
5] போக காரககன்
6] தமம்
7] இந்திரி
8] யோக காரககன்
9] பிதாமகன் காரககன்
10] கருங்கோள்
11] அகி ஆகிய மாற்று
பெயர்களிலும் அழைக்கப்பவர் ....
எதிலும் பிரமாண்டமான
சிந்தனை கொண்டவர்கள் எண்ண்ம செயல் அதீத வளர்ச்சி சுவாச சம்பந்தப்பட்ட உபாதைகள் மது
மற்றும் மாது போன்ற் நாட்டங்கள்
மேதாவித்தனமாக
பேசும் பேச்சுக்கள் அன்னிய நாட்டில் பணம் ஈட்டுதல் வெளிநாட்டு பணம் சேர்த்தல் அந்நிய
நாட்டோரை வழி நடத்துதல்
இறை நம்பிக்கை
இல்லாமை,
சட்டவிரோத செயல்களில்
ஈடுபாடு
ஏவல் வேலை
பதுக்கல் வியாபாரம்
மது அருந்தும்
நாட்டம்
மாமிச ஈடுபாடு
திருட்டு செயலுக்கு
துணை போகுதல்
நம்பிக்கை துரோகம்
செய்வித்தல்
சூதாட்ட ஈடுபாடு
பொய் பேசுதல்
பெண்களை இழிவாக
நடத்துதல்
உளவு வேலை நாட்டம்
அலட்சிய தன்மை
வஞ்சம் வைத்து
வஞ்சகம் செய்தல்
தூதுரக எழுத்த்தர்கள்
மத்தியஸ்தம் செய்வோர்
வெளிநாட்டு ஒப்பந்தம்
தகவல் தொடர்பு
வஸ்துக்கள்
வெளிநாட்டு குறிப்புகள்
வெளிநாட்டு கல்வி
அரசு வாகனம்
அரசுக்கு சொந்தமான
அரண்மனைகள்
தூதுரகம்
அரசு ஊழியர்கள்
சிறைச்சாலை கல்வறை
போன்ற வஸ்துக்கள்
தயாரிப்பு
கலப்பட்ட பொருள்
தயாரித்த்தல் போலி பொருள் தயாரித்தல்
அந்நிய ஜாதி [
இன காதல்;] காம இச்சைக்கு அந்நிய ஜாதி தேடல்
நிர்வாண நடன வேடிக்கை
விபச்சார தொழில்
சூதாட்டம்
மது அருந்துதல்
திறந்த வெளியில்
உணர்ச்சி வசம் அடைதல்
நீச்சல் வீரர்கள்
ஓட்டப்பந்தய வீரர்கள்
சுவாச சம்பந்தமான
கோளாறுகள் அதிகமனான போஜனப்பிரியர் போன்ற மருந்துக்கள் தயாரிக்கும் இடத்தில் வேலை போதை தரும்
உணவுப் பொருள்
பட்டை கிரம்பு ஜாதிக்காய்
முந்திரி பருப்பு
பாதாம் பருப்பு
ஏலம்
மது
கஞ்சா
அபின்
சுகர்
ஆப்ரேஷேன் தியேட்டேரில்
வேலை
மயக்க மருந்து
தயாரித்தல் சுவாச கருவி தயாரிப்பவர்
சிறை தண்டனை சித்ரவதை
போக இச்சை மது மாது போதை வஸ்துக்களில் மூழ்கி விடுதல் வெளிநாட்டு தண்டனை அடைதல்
ஜப்தி அடைதல் வெளிநாட்டு
குற்றச்சாட்டு அசுத்த இரத்த்த குழாயில் பாதிப்பு கார்பன் -டை ஆக்சைடு கோளாறு பாசத்து
பிரச்சனை
மது மாது போதை
வஸ்து சம்பந்தமான ஆராச்சியாளர்கள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் உறுப்புகளை
மாற்றம் செய்தல் செயற்கை உறுப்புகளை தயாரித்தல் மது ஆய்வு மையங்களில் பணி புரிதல்
வெளிநாட்டு கலாச்சார
மையங்களில் வேலை புரிதல்
தானிய கிடங்கில் [குடோனில் அந்நிய நாட்டு தொடர்பு
]
அந்நிய மொழி நபர்கள் தொடர்ப்பு
சிறைச்சாலை வேலை
உளவுத்துறை அதிகாரிகள்
மொழி பெயர்ப்பாளர்கள்
அந்நிய நாட்டு
பண வரவு செலவு மையங்கள்
தூதுரகப்பணி வெளிநாட்டு
வேலை வாய்ப்பு மையங்கள்
வார்டன் பன்னாட்டு
சந்தை பங்கு வர்த்தகங்கள்
மேஜிக் செய்வோர்
மந்திர வித்தை செய்வோர்
செருப்பு தொழிலாளி
கணிப்பொறியை திருடுவோர்கள்
[ சாப்ட்வேர் திருடர்கள்]
இவைகள் பொது பலன்
பாவ ரீதியாக இனி கவனிப்போம் ,,,,
.
கிரகங்களின் மிகவும்
வலிமை அடைந்த கிரகம் என்பது ராகு ஆகும்
ஒளி கிரகங்கள்
ஆகிய சூர்யன் -சந்திரன் ஆகிய இருவரை தனது பிடியில் சிக்க வைப்பவர் செயல் இழக்க செய்ய
வைப்பது ராகு ஆகும்
ராகுவை போக காரகன்
[ மனைவை உடன் கொஞ்சி வாழ்வது]
யோக காரகன் [ மனைவியை பிரிந்து போய் வெளிநாட்டில்
பணம் சேர்க்கும் யோகம்]
மாயகாரகன் [ காதலில்
சிக்கி பெற்றோரை பிரிவது ]
அனுபவ காரன் [
40 வயதுக்கு மேல் உலகை அறிய வைப்பவர்]
போன்ற பலவகையான
வித்தில் சொன்னாலும் மனதில் தோன்றும் பேராசை விகாரமான எண்ணம் போன்ற குணங்களை கொண்டவர்
தான் ராகு ஆவார்..
மனித தலையுடன்
பாம்பு உடலுடன் காட்சி தரும் ராகுவே ஜாதகத்தில் பெருன் தோஷங்க்களை தீர்ர்பானிப்பவர்
ஆகிறார்..
பாவ கிர்கம் ஆகிய
ராகு எந்த பாவத்தில் அமர்கிறார்கள் என்பது குறித்தே அவர் அந்த பாவ ஆதிபத்தியம் சார்ந்த
பலனை தருவார் ...
பாம்பு புற்றுக்குள்
வசித்தாலும் பொந்துள் வசித்தாலும் அந்த பாம்பு புற்றுகளும்
பொந்துக்களும்
பாம்ப்பினால் உருவாக்கப்பட்டத்தல்ல ..
கரையான் பொந்துக்களை
உருவாக்கி அங்கே
கருநாகம் குடி
கொண்ட பொழுது அதை பாத்த்த மக்கள் வழிபட்ட பின்னர் தான் “ புற்று வழிபாடு வந்ததது
..
ஜோதிடத்தில் ராகுவின்
தன்மைகள் :-
குணம் : குரூரன்
மலர்: மந்தாரை
இரத்தினம் : கோமேதகம்
நட்புக்கோள் :
சனி மற்றும் சுக்கிரன்
பகைக்கோள்: சூர்யன்,
சந்திரன், செவ்வாய் ஆகும்
சமக்கோள்; : புதன்
குரு
கோளின் காரகம்:-
பிதாமகன்
கோளின் ஆட்சி வீடு
: சொந்தமாக இல்லை இருக்கும் இடத்தை ஆக்கிரமித்துக்கொள்வார்
கோளின் மூலத்திரிகோண வீடு:- கும்பம்
கோளின் உச்சவீடு
:- விருட்சிகம்
கோளின் நீச்சவீடு
:- ரிஷபம்
கோளின் நட்சத்திரங்கள்:-
திருவாதிரை, சுவாதி, சதயம்
கோளின் திசை ஆண்டுகள்:- 18 ஆண்டுகள்
கோளின் ஷேத்திரம்:
திருநாகேஸ்வரம் மற்றும் காளஹஸ்தி
ராகு+ பாவத்தின்
தொடர்புகளை இனி காண்போம் :
1-பாவத்தின் தொடர்பு
:
மூர்க்கமான கொடூர
குணங்கள், கூடுதல் போகநிலை, பேராசையுடன் கூடிய சுயநலம், அயல்நாட்டின் தொடர்புகள், முரட்டுதனமான
மனோ தைரியம், முறைகேடான உறவுகளை வைத்தல், கலாச்சார சீரழிவை செய்யும் குணம் அமைதல்,
பிறரின் பொருட்கள் மேல் நாட்டம் கொண்டு அபகரித்தல், குற்றத்தில் இருந்து குறுக்கு வழியில் தப்பித்தல்,
2-ம் பாவத்தின்
தொடர்பு:-
அவமானத்திற்குறிய
குடும்ப வாழ்க்கை, சீர்கேடான குடும்ப வாழ்க்கை ,கட்டுக்கடங்காத போர் குணம் , பிறரை
எடுத்து எரிந்து பேசுதல், சாஸ்திரங்களுக்கு எதிரான வாதங்கள், வார்த்தைகளை காப்பாற்றாத
பேச்சாற்றல்,, பொய்யாக பேசி நடித்து ஏமாற்றுதல், உரிமையில்லாத பொருட்களை அடைய நினைத்தல்,
போராசை குணங்கள், சமூகத்தினரால் இழிவாகப் பார்க்கப்படுதல்,
3-ம் பாவத்தின்
தொடர்பு:-
அலட்சிய போக்கு,
பேராசையுடன் வாழ்தல் , சகோதர உறவை வெறுத்தல்/ பகைத்தல் / அல்லது சகோதர உறவுக்கு பயன்
இல்லாமல் இருத்தல், தர்க்க வாதம் செய்தல், குருட்டு தையரியத்தில் இருத்தல், திருட்டுத்தனம்,
பிறர் பொருட்களை அபகரித்தல், சோம்பல் தனத்தினால் உழைப்பில் நாட்டம் இல்லாமல் வாழ்தல்,
நுட்பமான அறிவாற்றலை தவறான செயல்களுக்கு பயன்படுத்துதல், கலாச்சார சீரழிவைதரும் வார்த்தைகளை
பேசுதல், கொலை பழி உணர்ச்சி , மலையேற்றத்தில் ஈடுபாடு, அயல்நாட்டு தொடர்பு பயணங்கள்
, பாலியலில் வழக்கத்திற்க்கு மாறான செயல்களில் ஈடுபடுதல் [ [ ஓரின சேர்க்கை நாட்டம்/மிருக கூட்டு புணர்ச்சி
நாட்டங்கள் ] போலி கையெழுத்து போடுதல், பொய் சாட்சி சொல்லுதல் போன்றவையில் அதீத நாட்டங்கள்
4-ம் பாவத்தின்
தொடர்பு:-
தாயின் அரவணைப்பு
இல்லாமை, பூர்வீகத்தில் குடி இருக்க இயலாமை, வசதி இல்லாமையால் வறுமையில் வாடுதல், பழைய
அல்லது இரவல் வாகன வசதி, களவுப்பொருட்களை பயன்படுத்துதல், இராசயன கல்வி பயிலுதல், கணிப்பொறி
கலவி பயிலுதல், நாத்தீக நெறி முறையுடன் வாழ்தல், அபகரிக்கப்பட்ட வீடுகளில் குடியிருத்தல்,
எப்பொழுதும் வாடகை வீட்டில் வாழுதல், ஒழுக்க நெறி பாழ்படுதல்,,
5-ம் பாவத்தின்
தொடர்பு:-
புத்திர பேறு தடைபடுதல்,
கர்ப்பம் அடிக்கடி கலைதல் , குழந்தைகள் கொடூர எண்ணத்துடன் இருத்தல், குழந்தைகள் மூலமாக
அவப்பெயரை அடைதல், பாரம்பரிய சொத்துக்கள் இல்லாமை, தகாத பெண்கள் உறவு , பேராசைமிக்க
அறிவாற்றல், ஆன்மீகத்திற்க்கு எதிராக பரப்புரை செய்தல், சமூக சடங்குகளை எதிர்த்தல்,
மதக்கோட்பாடுகளில் நம்பிக்கை இல்லாமல் வாழுதல், உக்கிர கடவுளின் வழிபாடு, பத்திரகாளி,
துர்க்கை, மாகாளி அம்மன், வனதேவதை
6-ம் பாவத்தின்
தொடர்பு :-
எதிரிகளை வெல்லும்
பராக்கிரமம், எப்பொழுதும் தன்னை விட உயர்ந்த அந்தஸ்தில் இருப்போரை எதிர்த்து வெற்றி
கொள்வது, பண பரிவர்த்தனைகளில் மாட்டு கொள்ளுதல், கெட்ட பழக்க வழக்கத்திற்க்கு அடிமை
ஆவது, கொடும் பாவச்செயல்களை துணிச்சலுடன் செய்தல், சிறை தண்டனை அடைதல், வழக்கு பிரச்சனைகளை சந்திக்கும்
துணிவு, போக சுகங்களில் அதிக நாட்டம் கொள்ளுதல், சூதாட்ட குணங்கள், அவதூறு வழக்கில்
சிக்குதல், பலராலும் வெறுத்து ஒதுக்கப்படுதல், பிரருக்கு நஷ்டத்தை ஏற்படுத்துதல்,
7-ம் பாவத்தின்
தொடர்பு:-
களத்திர உறவில்
மாற்று இனம், மதக்கலப்பில் திருமணம், திருமண உறவால் பிரமாண்ட பிரச்சனைகள், பிரிவுகள்,
திருமணத்தினால் வெளிநாட்டு தொடர்பு, பாலியல் உறவில் மாறுபட்ட சிந்தனைகள், போக சிந்தனை
, மிருகப்புணர்ச்சிக்கு எண்ணம் செல்லுதல், பலர் தொடர்பு, கூட்டு புணர்ச்சி, கலாச்சார
சீரழிவுடன் கூடிய உறவுகள், குற்றவியல் சிந்தனைகள்[லக்ன கேது], மிகப்பெரிய ஆன்மீகவாதி
ஆக காட்டி கொள்வது, கலகத்தின் மூலமாக பிரச்சனைகளை உருவாக்குதல், வதந்திகளை பரப்பும்
குறுக்கு புக்தியுடன் செயல்படுதல், சூது மற்றும் வஞ்ச குணங்கள் வழக்குகளுடன் கூடிய
பிரச்சனைகளுடன் வாழ்தல்,
8-ம் பாவத்தின்
தொடர்பு:-
சோம்பேறித்தனம்
உடன் வாழ்தல், பாவகாரியங்களை செய்யும் துணிவு, கொடூர குணங்கள், பெற்றோரை மதிக்காத தன்மை,
மாறுபட்ட பாலியல் புணர்ச்சி, மற்றவர்களால் புரிந்து கொள்ள அறிந்து கொள்ள முடியாத தன்மை, உயர்ந்த இடத்தில் இருந்து கீழே விழுந்து மரணம் அடையும்
தன்மை, அகால மரணம் ,, சாலை விபத்துக்களை சந்தித்தல், மிருகத்தினால் தாக்குதல் அடைந்து
மரணம் அடைதல், முறைகேடான உறவுகள், குடும்ப வாழ்க்கையில் குழப்பம் பிரச்சனைகள்,
மாங்கல்ய நிகழ்ச்சிகள்
[ பெண்களுக்கு ], இராசயன மருந்துக்களை பாலியல் தொடர்ப்புக்கு பயன்படுத்தும் எண்ணங்கள்...
9-ம் பாவத்தின்
தொடர்பு:-
ஆன்மீக ஈடுபாடு
இல்லாமை, நாத்திக கொள்கையை வழி நடத்துதல், பகுத்தறிவு கொள்கை பின்பற்றுதல், சமுதாயத்திற்கு
தீமையை செய்யும் செயல்களில் ஈடுபடுதல், தீவிரவாத குணங்கள் உடன் வாழ்வது தகப்பன் வழி
பயன்பாடுகள் இல்லாமை, குருட்டு தைரியத்துடன் வாழுதல், குறிக்கோள் இல்லாத வாழ்க்கை
, காதல் வயப்படுதல் [ மூன்றில் கேது] முறைதவறிய உறவுகளை அமைத்து கொள்ளூதல், சகோதர கருத்து
வேறுபாடு அதனால் சகோதரன் பகையை அடைதல், சூது குணத்துடன் வாழ்தல், குறுக்கு புத்தியுடன்
செயல்படுதல்,குற்றவியல் நடவடிக்கை செயல்களில் ஈடுபடுதல்,,
10-ம் பாவத்தின்
தொடர்பு:-
இராசயன தொழில்,
சட்டவிரோதமான தொழில், சமூக விரோத தொழில், கடத்தல் தொழில், மந்திர துஷ்பிரயோகம், ஏவல்
தொழில், மோசடி செய்யும் தொழில், சூதாட்ட விடுதிகள் நடத்துதல், பங்கு சந்தை தொழில்,
கணிப்பொறி தொழில், மதுபான விற்பனை செய்தல், விபச்சார தொழில், வெளிநாட்டு வர்த்தகம்,
உணவுத்தொழில், சுரங்க தொழில், கனிமவள தொழில், சவக்கிடங்கில் பணி புரிதல், போதைப்பொருள்
ஆசை, பீடி, சிகரெட், தீப்பெட்டி தொழில்கள், பிறரை ஏமாற்றி வாழுதல், உடல் உறுப்பு வியாபாரம்
செய்தல், பூச்சிக்கொல்லி மருத்து உர விற்பனை செய்தல்,போலி மருந்து தயாரித்தல் விற்பனை
செய்தல், வியாபாரம் , கள்ள மார்க்கெட் விற்பனை செய்தல், செருப்பு வியாபாரம், சாலைப்பணி
செய்தல், பிரசவம் பார்க்கும் செவிலியர் சேவை செய்தல், எடுபிடி வேலை பார்த்தல், சாயப்பட்டறை
தொழில் செய்தல், தங்க முலாஅம் பூசுதல், பொம்மை வியாபாரம் , மின்னணுவியல் தொழுநோய் கூடத்தில்
வேலை செய்தல், சிறைச்சாலையில் பணி புரிதல்,
11-ம் பாவத்தின்
தொடர்பு:-
முறையற்ற செயல்களில்
மறைமுக ஆதாயங்கள், பொருளாதர பேராசை, அயல்நாட்டு தொடர்பு வழி ஆதாயங்கள், பூர்வீக சொத்து
வழக்குகள், குழந்தை வழி சர்ச்சைகள் பிரச்சனைகள், சகோதர உறவுகள் சித்தப்பன் உறவுகள்
பாதிப்பு, சமூக விரோத செயல்வழி, ஆதாயங்கள், அழிவு காரியங்களில் ஆதாயங்கள்,
12-ம் பாவத்தின்
தொடர்பு:-
பல மடங்கு பொருளாதார
இழப்பு, அயல்நாட்டு தொடர்பு செயல்
[ பணி வியாபாரம்]
ஓரின சேர்க்கை இயற்கைக்கு மாறான புணர்வு விருப்பம்,
கூடுதல் போக நாட்டம், ஆன்மீக நாட்டம்
இது கட்டண சேவை பயிற்சி அல்ல..
இலவச பயிற்சி தளம் ஆகும்..
அடிப்படையில் கிரகங்களின் தன்மையை பாவத்தில் இருப்பதை குறித்து ஜோதிட கருத்துக்களை சொல்லி இருந்தாலும் கூட ராகுவுடன் சேரும் கிரகங்களின் தன்மையையும் ராகு இருக்கும் வீட்டின் தன்மையும் ராகுவை எந்த கிரகங்கள் பார்க்கிறதோ அதன் தன்மையும் வாங்கி கொண்டு ராகு தன் திசை அல்லது எந்த த்சையில் தன் புக்தி /அந்திரம்/ சூட்சுமம் வரும் காலத்தில் அதன் பலனை தரும் என்பது மிக மிக முக்கியம் ஆகும்...
என்றும் ஜோதிடப்பணியில்
பெருந்துறையில் இருந்து
ஸ்ரீவீரபத்ர ஜோதிட மையம்
ask எனும்
Astro Senthil Kumar
கட்டண அடிப்படையில்
ஜோதிட ஆலோசனைகள் பெற
Whats App :- 9843469404




