Sunday, 16 October 2016

திசா சந்தி என்பது என்ன??????????

திசா சந்தி என்றால் என்ன???
திருமண பொருத்தத்தில் இன்று மிகப்பெரிய குழப்பம் தரும் சங்கதி இது ..
இன்றைய ஜோதிடர்கள் இடையே மிகப்பெரிய “சர்ச்சை”
காரணம் ஏக திசை நடப்பதில்
ஒரு ஜோதிடர் செய்யலாம் என்கிறார்..[சரியான பதில்]
இன்னொரு ஜோதிடர் ஏக திசையில் செய்யக்கூடாது என்கிறார்..[ இது தவறான பதில் ]
மக்களுக்கு இதில் மிகப்பெரிய குழப்பம்
“ஜோதிடத்தை “
நம்புவதா???
நம்பக்கூடாதா???
என்பது குழப்பம்..
உண்மையில் ஏகதிசை நடக்கும் இருவருக்கு திருமணம் செய்யலாம் …
அதில் தவறில்லை …
ஆனால் வெவ்வேறு திசை நடந்தாலும் திசா சந்தி நடந்தாலும் திசா சந்தி வரும்..
அது எப்படி ???
அது தான் இன்றைய நம் உரையாடலில் பேசப்பட வேண்டிய விஷயம்..
முக்கியமாக படித்து விட்டு “ஜோதிடம்” வளர கொஞ்சம் இதை ஷேர் செய்யுங்கள்..
உதாரணமாக ஒரு பெண்
ராகு திசை : 12-08-2018 தொடங்கி 12-08-2026 வரை நடக்கும்
ஒரு ஆண் திசை 19—10-2005 வரை 19-10-2023 வரை நடக்கும்
ஆனால் இதில் ஒரே திசை திசை இருவருக்கும் நடக்கும் “ஏக திசை “ என அர்த்தம் என அர்த்தம் கொள்ளலாம்..
எப்படி எனில் இருக்கும் ஒரே ராகு திசை 1ஆண்டு 9மாதம் 23 நாளும் ஒரே திசை ஆனாலும் அங்கே திசா சந்தி என்பது இல்லை..
ஆனால் ஒரு பெண்ணுக்கு
சனி திசை 12.-08-2020 அன்று முடிகிறது எனில்
அதே கால கட்டத்தில் 12-08-2019 முதல் 12-08-2021 வரை
பெண்ணின் திசை தொடங்கும் [12-08-2020 ]
ஒரு ஆண்டு முன்போ [12-08-2019]
அல்லது
ஒரு ஆண்டு பின்போ [ 12-08-2020 ]
திசை மாற்றம் எந்த திசையில் இருந்து எந்த திசைக்கு வந்தாலும் அது திசா சந்தி என பொருள் கொள்ள வேண்டும்..
ஆனால் இன்று போதித்த ஆசானின் தவறா ??
அல்லது போதனையை புரிந்து கொண்டோர் தவறா??
என தெரியவில்லை ..
ஒரே திசை நடந்தால் உடனே
“திசா சந்தி” வருகிறது என வேறு சில “ஜோதிடர்” சொல்வதை அடிக்கடி என் வாடிக்கையாளர்கள்
என்னிடத்தில் சொல்லி விளக்கம் கேட்கும் போது எல்லாம்
நான் அவர்களுக்கு “மிகப்பெரிய ஜோதிட வகுப்பை “ எடுக்க வேண்டிய கட்டாயத்திற்க்கு உள்ளாகிறேன் ..
“இது ஒரு ஜோதிடரின்” அறியாமையால் செய்யப்படும் “தவறுதல்” என்பதை பகிரங்கமாக சொல்கிறேன்..
என் அன்பிற்கினிய ஜோதிட நண்பர்கள்
“ஏக திசை “ என்பது வேறு
“திசா சந்தி” என்பது வேறு
என்பதை கொஞ்சம் புரிந்து கொண்டு உங்கள் இடத்தில் வரும்
வாடிக்கையாளர்களுக்கு “வழிகாட்டுதல்” செய்ய கோருகிறேன் ..
மேலும்
இந்த சம்பவம் எம் பெருந்துறை நகரை சார்ந்த இடத்திலும்
எம் ஈரோடு மாவட்டம் சார்ந்த பகுதியிலும்
“சில ஜோதிடரின்” [அறியாமையால் ]
தவறான வழிகாட்டுதல் ஆக “ஒரே திசைக்கு”
திசை சந்தி என “தன் கைப்பட” எழுதி கொடுத்த
“பொருத்த அட்டவணை” எம் கையில் உள்ளது..
[ தேவைபடும் பட்சத்தில் தன் பாணியை ஒருவர் திருத்தி கொள்ளவில்லை எனில் யார் யார் என பகிரங்கமாக வெளியிடப்படும் ]
இந்த தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்வது கூட
“பொது மக்களுக்கு “ திசா சந்தி என்றால் “என்ன?’ என ஒரு விழிப்புணர்வு கொடுக்க செய்யப்பட்ட பதிவு தான்..
உங்களுக்கு என ”பொருத்தம்” பார்க்க செல்லும்போது
ஒரு ஜோதிடர் “ஒரே திசையை”
“திசா சந்தி “ என ஒருவர் சொன்னால் “ அவரிடம்”
நீங்கள் இதை “குறித்து” சரியான விபரங்களை கேட்கவும்..
“இதைப்பற்றி”
சரியான விழிப்புணர்வு “அனைவரிடமும்” வர வேண்டும்
என்பதால் இதை அனைவரும் கொஞ்சம் ஷேர் செய்து
“ஜோதிட விழிப்புணர்வு” செய்ய வேண்டுகிறேன்…
இதைப்பற்றிய விவாதங்கள் என் இன்பாக்ஸ் மூலமாக அல்லது ஒரு குழ்வின் மூலமாகவும் நேரடியாக விவாதம் செய்யவும் தயாராக உள்ளேன்.....
பெருந்துறையில் இருந்து
Astro Senthil Kumar
Wats App:- 9843469404
EMAIL:- astrosenthilkumar@gmail.com

Thursday, 6 October 2016

அரசு வேலை அமையும் ஜாதக அமைப்பு இது [ goverment job ]

அரசு வேலை அமையும் யோகம் எப்படி இருக்கும் என்பதற்க்கு என ”ஜோதிட ஆய்வினை” செய்ய ஒரு பதிவு ..

இத்துடன்
ஈரோட்டில் 13-02-1983 மதியம் 12-07 மணிக்கு பிறந்த இவருக்கு இன்று 33வயது 8மாதம் ஆகி விட்டது ..


ரிஷப லக்னம்
2-ல் ராகு
3-ல் மாந்தி
6-ல் சனி [ வக்ரம் ]
7-ல் குரு
8-ல் கேது
9-ல் புதன்
10-ல் சூரியன் – சந்திரன் –செவ்வாய்- சுக்கிரன்
என அமையப்பட்ட ஜாதகம் இது..



யோகத்தை பற்றிய ஆய்வினை கவனிப்போம் …

 தோஷ நிவர்த்தி யோகம்:-

லக்னத்தின் கேந்திரத்தில் நான்கு ஏழு பத்து ஆகிய இடத்தில் குரு புதன் அமையப்பெற்றால் அது “தோஷநிவர்த்தி யோகம்” ஆகும் ..
 


கஜகேசரி யோகம்:-

சந்திரனுக்கு கேந்திரத்தில் குரு அமையப்பெற்றால் அங்கே கஜகேசரி யோகம் எல்லோருக்கும் முன்னுதாரணம் ஆக திகழ வேண்டும் என எண்ணத்துடன் வாழ்வார்கள்..



 சந்திர மங்கள யோகம்:-
செவ்வாயும் சந்திரனும் கேந்திரத்தில் இருக்க சந்திர மங்கள யோகம் அமைகிறது..இது எடுத்த கார்யங்களை முடிக்க வேண்டும் என முழுமுயற்சி செய்து “தலைமை பாங்கை” அடையும் தகுதியை அடைவார்கள்..


 

அனபா யோகம்:-
சந்திரனுக்கு 12-ல் புதன் அமையும் போது தலைமை ஏற்று பாங்கு அமைகிறது..உடல் ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்தி முக்கியத்துவம் கொடுப்பார்கள்..



சிவ யோகம்:-
பொதுவாக சுக்கிரன் சூரியன் புதன் போன்றவை
கேந்திரத்தில் திரிகோணத்தில் அமையும் போது “சிவயோகம்” இது அசையும் அசையா சொத்துக்களை வாங்குவதும் உறவினர்களை நட்பின் வட்டத்தில் கொண்டு செல்வார்கள்..  

உபயசர யோகம்:-
சனி ஆறில் இருந்து உச்சம் அமையும் போது இந்த உபயசர யோகம் ஆகிறது..எடுத்த கார்யங்களில் வெற்றி பெற போராடும் மனோநிலையை கொடுக்கிறது.. 



மாலா யோகம்:-
சந்திரனுக்கு பத்தில் குரு இருக்க ”கேசரி யோகத்துடன்”நிர்வாக திறமையுடன் பொருள் சேர்க்கை காணும் நோக்கில் வாழ்வார்கள்.. 


அமலா யோகம்:-
லக்னத்திற்க்கோ அல்லது சந்திரனுக்கோ பத்தில் சுபகோள் இருப்பதால் ”புத்திசாலி தனமாக” மற்றவர்களுக்கு “ஆலோசனைகள்” வழங்கும் சாமார்த்தியம் கொண்டவர்கள்..



பர்வத யோகம்:-
 லக்னாதிபதி நின்ற ராசி அதிபதி உச்சம் பெறுவதால்
”பர்வத யோகம்” இது “வீடு நிலம்” போன்றவைகளை வாங்கி போடும் எண்ணத்தை உருவாக்கி கொள்ளும் “சாமார்த்தியத்தை” கொடுக்கும் எப்போதும் பொருள்வரவை நோக்கி பயணத்தை செய்யும்..மற்றவர்களை நாகரீகமாக நடந்து வசியம் செய்யும் வித்தகர் ஆவர்…




ஹரி யோகம்:-
ஒரு லக்னத்தின் இரண்டாம் அதிபதி நின்ற ராசிக்கு 2-8-12 ஆகிய இடங்களில் சுபகிரகங்கள் அமையும் போது இந்த யோகம் அமைகிறது .. 

வசுமதி யோகம்:-
ஒரு லக்னத்திற்க்கோ அல்லது சந்திரன் நின்ற ராசிக்கோ உபசய ஸ்தானங்களில் நற்கோள் அமையும் போது இந்த யோகம் அமைகிறது ..எந்த கார்யத்தை எடுத்தாலும் அதில் “ஆதாயம்” பார்த்து பணி ஆற்றும் வல்லமையை கொண்ட “ஜாதகர் ஆக” கொண்டு செல்லும் அமைப்பு ஆகும்.”பொருள் ஆதாயம் இன்றி எதையும்” செய்ய துணியாத தன்மையை இந்த யோகம் கொடுக்கும் ..


லக்ஷ்மி யோகம்: -
ஒன்பதாம் அதிபதி ஆகிய கோள் [சனி]
கேந்திரம்
மூலத்திரிகோணம்
ஆட்சி அல்லது
உச்சம் [ ரிஷப லக்னத்தின் பாதகரும்  சனியே] ஆறில் உச்சம் அடைவதால் இந்த “லக்ஷ்மி யோகம்” இது உறவினர்கள் இடத்தில் செல்வாக்கும் பணியை எடுத்து செய்து ”நிர்வாகத்தினால்” பாராட்டு பெறுவதும் இந்த யோகத்தால் தான்….


இதிலே இன்னும் ஒரு யோகம்
உண்டு “அது”
“ஸ்ரீநாத யோகம்” என பெயர் ஆகும்..



ஸ்ரீநாத யோகம் என்பது ஏழாம் அதிபதி நின்ற வீட்டின் அதிபதி ஆகியவர் செவ்வாய் பத்தில் அமர்ந்து அந்த பத்தாம் இடத்தின் அதிபர் இன்னொரு வீட்டில் உச்சம் பெற்று அந்த பத்தாம் இடத்திற்க்கு கேந்திர திரிகோணத்தில் “உச்சம்” பெறுவதால் “ஸ்ரீநாத யோகம்” அமைந்து ”அதிகாரம் மிக்க அரசு பணியை “ அல்லது “அரசியல் பொறுப்பை “ இந்த “ஸ்ரீநாத யோகம்” மூலமாக பெற்று விடுகிறது..


சில மாதங்களுக்கு முன் இந்த “ஜாதகரின்” ஜாதகம் என் பார்வைக்கு வந்த போது [ துருவ கணிதம் இல்லாத ஜாதகம்] இந்த “ஜாதகத்தில்” பத்தாம் இடத்து செவ்வாய்க்கு இடம் கொடுத்த “சனி” உச்சம் பெற்ற நிலையை கண்டு “இவர் அரசு ஊழியராக உள்ளாரா??” என கேட்டேன்…
சந்திரனுக்கு பத்தில் குரு இருப்பதால் “ இவர் ஒரு ஆசிரியர்” ஆக “வாய்ப்பு” தேடி வந்து “பதவியை” கொடுத்து இருக்கிறது ..
மேலும் இப்பொழுது அவரை மேற்கல்வியை தொடர சொல்லி ஆலோசனை கொடுத்து அனுப்பினேன்..


கல்வித்தரம் உயரும் போது “இவருக்கு இன்னும் ஒரு உயர்நிலையை தரும் “ என்பது ஒரு காரணம் ..



புதியதாக ஜோதிடம் பயிலும் ஜோதிட நண்பர்களுக்கு என இப்பதிவு செய்யப்படுகிறது..
இனி தொடர்ந்து சில ஜாதகங்களை “ஜோதிட ஆராய்ச்சி” காண முயற்சிகளை செய்வோம்..
என்றும் ஜோதிடப்பணியில்..
பெருந்துறையில் இருந்து
Astro Senthil Kumar …
Wats App:- +919843469404


[ முக்கிய குறிப்பு வரும் 
13-10-2016 முதல் 23-10-2016 வரை பத்து நாட்கள் சிங்கப்பூரில் வாழும் தமிழ் நண்பர்கள் சந்திப்புக்கு செல்ல இருக்கிறேன் .. முன்பதிவுக்கு வாட்ஸ் அப் எண்ணில் அல்லது astrosenthilkumar@gmail.com எனும் மெயிலில் முன்னிட்டு தகவல்களை செய்யவும்..]





Saturday, 17 September 2016

பரணி நட்சத்திர பெண்ணுக்கு உகந்த ஆண் நட்சத்திர பட்டியல்

பரணி நட்சத்திர பெண்ணுக்கு
பொருந்தும் நட்சத்திர பட்டியல்
1)அசுவினி (ஏகராசி)
2)மிருகசீர்ஷம் 
3)ஆயில்யம்
4)மகம் 
5)பூரம் (ஆரோகணத்தில் ரச்சு இல்லாமல் போனாலும் செய்யலாம்)
6)உத்திரம் 1ம் பாதம் 
8)சித்திரை 3@4 பாதம் 
9)சுவாதி 
10)விசாகம் 1-2&3 பாதம்
11)மூலம்
12)உத்திராடம்
13)திருவோணம் 
14)அவிட்டம்
15) சதயம் 
16)பூரட்டாதி
17)உத்திரட்டாதி (ரச்சு இல்லாமலும் செய்யலாம்)
18)ரேவதி 
ஆகிய ஆண் நட்சத்திர ஜாதகங்கள்
பொருந்தும்
பொதுவாக
#ரச்சு இல்லாமல் திருமணம் செய்தாலும்
நல்ல தாராபலன் இருக்கும் நாட்களில்
திருமணம் செய்ய வேண்டும
பரணி நட்சத்திரம் எனும்போது
அவர்களுக்கு நல்ல தாராபலன் இருக்கும்
#முகூர்த்த_நட்சத்திரங்கள்
1)மிருகசீர்ஷம் 
2)மகம் 
3) உத்திரம் 
4)சித்திரை 
5)விசாகம் 
6)மூலம் 
7)அவிட்டம்
8)பூரட்டாதி 
9)ரேவதி
ஆகிய
முகூர்த்தம் இருக்கும் நாட்களில்
மட்டுமே திருமணம் செய்ய வேண்டும்....
பூசம் 
அனுஷம் (வேதை நாள்)
உத்திரட்டாதி
போன்ற வதை நாட்கள் என்பதால்
அந்த நட்சத்திர நாளில்
திருமணம் செய்யும்போது அவர்கள் வதை படும் வாழ்க்கை அமையும் என்பதால் இவைகள் அமைக்கவே கூடாது...
]
அனுஷம் நட்சத்திர முகூர்த்தம் (பெண்ணுக்கு சந்திராஷ்டம் என்பதாலும்)அமைக்கப்பட்ட கூடாது...
அசுவினி (ஜென்ம)
மகம் (அனுஜென்ம)
மூலம் (திரிஜென்ம)
போன்ற
நட்சத்திர நாட்கள்
இயன்றவரை தவிர்ப்பது நல்லது....
(ஆண் பெண் இருவருக்கும் தாராபலன் பார்க்கும்போது அனுஜென்ம திரிஜென்ம நட்சத்திர நாளிலும் திருமணம் செய்யலாம்)
(குறிப்பு சில ஜோதிட ஆசான்கள் எழுதிய திருமண பொருத்தம் புத்தகம்
சிவகாசியில் அச்சிட்டு
பேருந்து நிலையம் ரயில் நிலையம் போன்ற இடங்களில் ₹10க்கும் ₹20க்கும் விற்பனை ஆகி கொண்டு இருக்கிறது அதிலுள்ள நட்சத்திர பொருத்த விஷயங்களை தாண்டிய ஜோதிட ஆலோசனைகள் தான் மேலே கொடுக்கப்பட்ட விஷயம் ஆகும்)
இன்னும் கூட அதிக ஜோதிட
விஷயங்களை தான் அலசி ஆராய்ந்து பார்க்க தான்
சேலத்தில் இருநாட்கள் ஜோதிட வகுப்பு ஆகும்...
ஜோதிடத்தில் சிலரிடத்தில் 
சில குறைபாடு இருக்கவே செய்யும் ஆனாலும் நம்மை நாம் மாற்றி கொள்ள வேண்டும்..
மேலும் விளக்கம் அறிய 
சேலத்தில் 
வரும் 24-09-2016
சனிக்கிழமை 
மற்றும்
25-09-2016 
ஞாயிற்றுக்கிழமை ஆகிய 
இருநாளும்
“’ திருமண பொருத்தமும் ஜோதிடகள் பங்களிப்பும்”
எனும் எம் இடத்தில் 
“நான் அறிந்த ஜோதிட தகவல்களை மட்டுமே “ வழங்க விரும்புகிறேன் ..
காரணம் நேரத்தை நானும் வீண் அடிக்க விரும்பவில்லை ...
நான் சொல்ல வருவதை சொல்லும் போது 
கேட்டால் மட்டுமே ஒரு மாற்றம் தரும் அனுபவம் 
கிடைக்கும்..
இடம் தேதியை
முன்னிட்டு அறிவிக்கும் காரணம்
உங்களுக்கும் பல்வேறுபட்ட பணிசுமை இருக்கும்
அதையெல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு வர தான் முன்னிட்ட அழைப்பு ஆகும்...
இடம் :- J.V.R.திருமண மண்டபம் 
நாராயணசாமி பிள்ளை சாலை 
பெரமனூர் 
நால் ரோடு அருகில்.
சேலம்
திருமண பொருத்தமும் ஜோதிடர்கள் பங்களிப்பும்
எனும் தலைப்பில் பாரம்பரிய ஜோதிடத்தில் நான் அறிந்த
எவராலும் மறுக்க முடியாத பொதுபடையான ஜோதிட விஷயங்களை பற்றிய ஒரு வகுப்பு அவசியம் இரண்டு நாட்கள் சேலத்தில் தங்க விரும்புவோர்கள் மட்டுமே வரவும் ...
இரு நாளும் 
இரு வேளை தேனீர் வசதி மதிய உணவு உட்பட மொத்த செலவு தொகை ரூ 500 மட்டுமே அனுமதி கட்டணம் .....
இந்த செலவும் கூட உங்களை ஜோதிடத்துறையில் 
விழிப்புணர்வை அடைய செய்யும் முதலீடு ஆகும்...
இதையும் கூட ஒரு ஜோதிட அனுபவம் பெற செய்யப்படும் அழைப்பு ஆகும்...
முன்பதிவு செய்ய]
சேலம் ஜோதிடர் மகேந்திரன் :- 9524239934 எனும் எண்களில்
அல்லது
என் செல் மற்றும் வாட்ஸ் அப் :9843469404 ஆகிய எண்ணிலும் 
முன்பதிவு செய்ய வேண்டுகிறேன்...
வாருங்கள் இனி ஒரு விதி செய்வோம்..
என்றும் ஜோதிட பணியில்
பெருந்துறையில் இருந்து 
Astro Senthil Kumar
9843469404

Tuesday, 13 September 2016

அசுவிணி நட்சத்திர பெண்ணுக்கு பொருந்தும் நட்சத்திரம்

அசுவினி நட்சத்திர பெண்ணுக்கு
பொருந்தும் நட்சத்திர பட்டியல்

1)பரணி (ஏகராசி)

2)ரோகிணி

3)பூசம்

4)ஆயில்யம் (ரச்சு இல்லாமல் போனாலும் ஆரோகண அவரோகணத்தில்செய்யலாம்)

5)மகம் (ஆரோகணத்தில் ரச்சு இல்லாமல் போனாலும் செய்யலாம்)

6)பூரம்

7)உத்திரம் 1ம் பாதம் 

8)விசாகம் 1-2&3 பாதம்

9)அனுஷம் (அஷ்டம ராசி ஆனாலும் வசியம் இருப்பதால்
ராசி அதிபர் ஒருவரே என்பதால் செய்யலாம்)

10)மூலம் (ஆரோகணம் என்பதால் இணைக்கலாம்)

11)பூராடம் 

12)உத்திராடம்

13)திருவோணம் 

14) சதயம் 

15)பூரட்டாதி

16)உத்திரட்டாதி

ஆகிய ஆண் நட்சத்திர ஜாதகங்கள்
பொருந்தும்
பொதுவாக
#ரச்சு இல்லாமல் திருமணம் செய்தாலும்
நல்ல தாராபலன் இருக்கும் நாட்களில்
திருமணம் செய்ய வேண்டும்
.....
அசுவினி பெண் எனும்போது
அவர்களுக்கு நல்ல தாராபலன் இருக்கும்
#முகூர்த்த_நட்சத்திரங்கள்
1)ரோகிணி
2)திருவாதிரை
3) பூசம்
4)அஸ்தம்
5)சுவாதி
6)திருவோணம்
7)சதயம்
8)உத்திரட்டாதி
9)ரேவதி
ஆகிய
முகூர்த்தம் இருக்கும் நாட்களில்
மட்டுமே திருமணம் செய்ய வேண்டும்....
புனர்பூசம்
விசாகம்
பூரட்டாதி
போன்ற வதை நாட்கள் என்பதால்
அந்த நட்சத்திர நாளில்
திருமணம் செய்யும்போது அவர்கள் வதை படும் வாழ்க்கை அமையும் என்பதால் இவைகள் அமைக்கவே கூடாது...
அனுஷம் நட்சத்திர முகூர்த்தம் (பெண்ணுக்கு சந்திராஷ்டம் என்பதாலும்)அமைக்கப்பட்ட கூடாது...
அசுவினி (ஜென்ம)
மகம் (அனுஜென்ம)
மூலம் (திரிஜென்ம)
போன்ற
நட்சத்திர நாட்கள்
இயன்றவரை தவிர்ப்பது நல்லது....
(ஆண் பெண் இருவருக்கும் தாராபலன் பார்க்கும்போது அனுஜென்ம திரிஜென்ம நட்சத்திர நாளிலும் திருமணம் செய்யலாம்)
(குறிப்பு சில ஜோதிட ஆசான்கள் எழுதிய திருமண பொருத்தம் புத்தகம்
சிவகாசியில் அச்சிட்டு
பேருந்து நிலையம் ரயில் நிலையம் போன்ற இடங்களில் ₹10க்கும் ₹20க்கும் விற்பனை ஆகி கொண்டு இருக்கிறது அதிலுள்ள நட்சத்திர பொருத்த விஷயங்களை தாண்டிய ஜோதிட ஆலோசனைகள் தான் மேலே கொடுக்கப்பட்ட விஷயம் ஆகும்)
இன்னும் கூட அதிக ஜோதிட
விஷயங்களை தான் அலசி ஆராய்ந்து பார்க்க தான்
சேலத்தில் இருநாட்கள் ஜோதிட வகுப்பு ஆகும்...
ஜோதிடத்தில் சிலரிடத்தில்
சில குறைபாடு இருக்கவே செய்யும் ஆனாலும் நம்மை நாம் மாற்றி கொள்ள வேண்டும்..
மேலும் விளக்கம் அறிய
சேலத்தில்
வரும் 24-09-2016
சனிக்கிழமை
மற்றும்
25-09-2016
ஞாயிற்றுக்கிழமை ஆகிய
இருநாளும்
“’ திருமண பொருத்தமும் ஜோதிடகள் பங்களிப்பும்”
எனும் எம் இடத்தில்
“நான் அறிந்த ஜோதிட தகவல்களை மட்டுமே “ வழங்க விரும்புகிறேன் ..
காரணம் நேரத்தை நானும் வீண் அடிக்க விரும்பவில்லை ...
நான் சொல்ல வருவதை சொல்லும் போது
கேட்டால் மட்டுமே ஒரு மாற்றம் தரும் அனுபவம்
கிடைக்கும்..
இடம் தேதியை
முன்னிட்டு அறிவிக்கும் காரணம்
உங்களுக்கும் பல்வேறுபட்ட பணிசுமை இருக்கும்
அதையெல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு வர தான் முன்னிட்ட அழைப்பு ஆகும்...
இடம் :- J.V.R.திருமண மண்டபம்
நாராயணசாமி பிள்ளை சாலை
பெரமனூர்
நால் ரோடு அருகில்.
சேலம்
திருமண பொருத்தமும் ஜோதிடர்கள் பங்களிப்பும்
எனும் தலைப்பில் பாரம்பரிய ஜோதிடத்தில் நான் அறிந்த
எவராலும் மறுக்க முடியாத பொதுபடையான ஜோதிட விஷயங்களை பற்றிய ஒரு வகுப்பு அவசியம் இரண்டு நாட்கள் சேலத்தில் தங்க விரும்புவோர்கள் மட்டுமே வரவும் ...
இரு நாளும்
இரு வேளை தேனீர் வசதி மதிய உணவு உட்பட மொத்த செலவு தொகை ரூ 500 மட்டுமே அனுமதி கட்டணம் .....
இந்த செலவும் கூட உங்களை ஜோதிடத்துறையில்
விழிப்புணர்வை அடைய செய்யும் முதலீடு ஆகும்...
இதையும் கூட ஒரு ஜோதிட அனுபவம் பெற செய்யப்படும் அழைப்பு ஆகும்...
முன்பதிவு செய்ய]
சேலம் ஜோதிடர் மகேந்திரன் :- 9524239934 எனும் எண்களில்
அல்லது
என் செல் மற்றும் வாட்ஸ் அப் :9843469404 ஆகிய எண்ணிலும்
முன்பதிவு செய்ய வேண்டுகிறேன்...
வாருங்கள் இனி ஒரு விதி செய்வோம்..
என்றும் ஜோதிட பணியில்
பெருந்துறையில் இருந்து
Astro Senthil Kumar
9843469404

Wednesday, 3 August 2016

ஜோதிட பலாபலன் பாடம் -1

இதை முழுமையாக வாசிக்காமல் லைக் செய்வோர் ஜோதிடர் அல்ல....

ஜோதிடர் எனில் ஜோதிட ஆர்வலர் எனில் அதிலும் ஜோதிடம் பயிலும் மாணவர்கள் எனில் அவசியம் படிக்கவும் ..கற்போம் ஜோதிடம்
ஜோதிட ஆர்வலர்கள் மற்றும் ஜோதிட மாணவர்கள் அறிந்து கொள்ள உதாரண ஜாதகம் இது..

சில வாரங்களுக்கு முன் இந்த ஜாதகம் என்னிடம் பலாபலனை காண வந்தது..இன்று இவருக்கு 40 வயது பூர்த்தி அடைகிறது ..[ 28-07-76 காலை 6-02 நிமிடம் ..பிறந்த ஊர் கோவை ]
இன்னும் கூட திருமணம் அமையவில்லை என்ற காரணம் ஆகவே ஜோதிடம் பார்க்க வந்தார்கள் …

பல்வேறுபட்ட ஜோதிடரை சந்தித்த பின்னரே எம்மை அணுகி உள்ளார்கள்..
இத்தகைய அமைப்பில் பிறந்தால் அவர்கள் வாழ்வாதாரம் குடும்பம் குழந்தை எப்படி இருக்கும் எனும் ஆய்வை செய்வோம்..

ஆய்வுகளை தொடர்வோம் ..

கடக லக்னம் :- இதற்க்கு யோகர்கள் செவ்வாயும் குருவும் தான் ..
பாதகாதிபதி சுக்கிரன் [இயற்கையில் சுபர் ஆன சுக்கிரனும் கடகலக்னத்தில் ராசியில் பிறந்தவர்களுக்கு பாவரே] ஒரு மனிதனுக்கு தன் வம்ச விருத்திக்கு வாரிசு அமைய வேண்டும் எனில் முதல் மனைவி தேவை …

மனைவியால் கிடைக்கும் காமம் தேவை …சரி மனைவியை காமத்தை கொடுப்பது எது எனில் அது ஏழாம் பாவமே. அந்த ஏழாம் இடத்தின் அதிபர் சனி இருப்பது லக்னத்தில் [ஸ்புடம் 102-56 ல்] சனி தொலைதூரத்தில் இருந்து இந்த லக்னத்திற்க்கு தன் பலத்தை செலுத்தும் போது அதை வரும் வழியில் பலம் குன்ற வைத்தது உடன் இணைவு பெற்ற சூர்யன் [ ஸ்புடம் 101-38ல்] ஆக ஏழாம் இடத்து அதிபரால் கிடைக்கப்பெறும் பலன்கள் அனைத்தும் கிட்டாமல் போனது ..
அப்படி
இரண்டாம் (குடும்பம்)
அதிபர் சூர்யன் அம்சத்தில் நீசம்
ஏழாம் அதிபர் சனி அம்சத்தில் உச்சம் எனில் இவர் தாலி கட்டும்
மனைவிக்கு அது மறு திருமணம் ஆகவும் இருக்கும்..

ஜாதி மாறிய திருமணம் கூட அமையலாம் இது பொது ஜோதிட விதி....

விதி லக்னம் ] அற்று போனவர்க்கு மதியை [சந்திரன்] பார்த்து சொல்லு என்பார்கள் ..

ஆனால் மதி எனும் சந்திரன் நிலை?? லக்ன ராசிக்கு 3ம் மற்றும் 12ம் அதிபர் புதன் சேர்க்கை [ஸ்புடம் 114-48ல்] இயற்கை சுபர் ஆன சுக்கிரனும் இந்த ராசி லக்னத்திற்க்கு பாவர் [ சுக்கிரன் ஸ்புடம் 112-37ல்] ஆக ஸ்புடகலை ரீதியாக பார்க்க புதனுக்கும்[ 114-48] சுக்கிரனுக்கும் [112-37ல்] இடையை சிக்கிய சந்திரன் வளர்பிறை துவிதியை ஆனாலும் [ஸ்புடம் 113-51] தன் பலத்தை முழுமையாக இழக்கிறார்.. 

ஐந்தாம் அதிபர் செவ்வாய் இரண்டில் அமைந்தாலும் அவர் அமைந்த நட்சத்திரம் கடக லக்ன பாதகாதிபதி சுக்கிரனின் பூரம் நட்சத்திரம் 3ம் பாதம் [ கடக லக்னத்தை பொருத்தவரை அம்சத்தில் புத்திர ஸ்தான அதிபர் செவ்வாய் புதனின் வீட்டில் அமையும் எந்தவொரு ஜாதகருக்கும் கொள்ளி இட பிள்ளை இல்லை எனும் பொருளில் பிறக்கும் குழந்தைகள் எல்லாம் சிலருக்கு பெண் குழந்தைகள் ஆகவே இருக்கும் ]
அடுத்தபடியாக இவர் கடந்து வந்த கால கட்டம்
புதன் திசை 7 வயது 10 மாதம் வரை
கேது திசை 14 வயது 10 மாதம் வரை
சுக்கிரன் திசை 34 வயது 10 மாதம் வரை [ கடகத்தில் பிறந்தாலே சுக்கிரனால் எந்தவொரு நற்பலனும் இல்லை என்பதால் அந்த திசையில் நற்பலனும் இல்லை ]
பொதுவாக கால சர்ப்ப தோசத்தில் பிறந்தாலே 33 வயதுக்கு மேலே தான் நல்லதொரு முன்னேற்றம் ஜாதகருக்கு கிடைக்கும்
ஆக 34 வயது 10 மாதம் கழித்தும் பல இடங்களில் தேடியும் இன்னும் திருமணம் இல்லை என்பதாலும் யார் என்ன பரிகாரம் சொன்னாலும் தேடி சென்று செய்வது யார் நன்றாக ஜோதிடம் பார்க்கிறார்கள் என்றாலும் தேடி சென்று பார்ப்பதும் இவருடைய தலையாத வேலை ஆகவே அமைந்து விட்டது [ கடக சூர்யன் இரண்டாம் அதிபர் ஆக இருந்து சூர்யன் அம்சத்தில் நீசம் அடைந்தால் அந்த திசையில் அவர்கள் ஆலய பணிக்கு அதிகமான செலவுகளை செய்வார்கள் என்பதும் ஒரு காரணம் ஆகும்]
யாரோ பெருந்துறையில் Astro Senthil Kumar இடத்தில் ஒருமுறை சென்று ஜோதிடம் பார் என சொல்லி அனுப்பி உள்ளார்கள் ..

[ ஆஹா!!! நம்பளையுமா இந்த உலகம் நம்புது ??]சரி சரி
தற்போது இவருக்கு சூர்யதிசையில் சுக்கிர புக்தி நடப்பு 29-05-2016 வரை நானும் மற்ற ஜோதிடரை போல உடனே பரிகார முறைகளை சொல்லி எனக்கு தெரிந்த ஐய்யர் இருக்கிறார் என அழைக்கவில்லை ..

ஆடியில் வாடிக்கையாளர் வருகை சற்றே குறைவு என்பதால் சற்றே நேரம் இருப்பதால் இங்கு பதியப்படும் அனைத்து கருத்தும் அவர்கள் இடத்தில் பலாபலனாக சொல்லிய கருத்துக்களே தான்.. 

ஆயில்யத்தில் பிறந்தவர்களுக்கு நான்காம் திசை ஆன சூர்யதிசை யோகம் தர வேண்டும் ஆனால் சனி சேர்க்கை அம்சத்தில் நீசம் போன்ற காரணம் ஆக 40 வயது 10 மாதம் முடியும் வரை சூர்யதிசை சுக்கிர புக்தியால் இவருக்கு நற்பயனை தரும் வாய்ப்புகள் குறைவு தான் என்பதும் ..

அடுத்தபடியாக துவங்கும் ஐந்தாம் திசை ஆன சந்திர திசையில் சந்திர புக்தியில் குறிப்பாக ராகு அந்திரம் நடக்கும் போது [ 11-07-2017 முதல் 26-08-2017 வரை] அல்லது குரு அந்திரம் [ 26-08-2017 முதல் 5-10-2017 வரை ] இந்த இரு அந்திரத்தில் திருமணம் நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என ஆருடம் சொல்லி இருக்கிறேன் .. 

இதற்க்கு காரணம் ராகு யோகி என்பதும் கடக லக்னத்தின் யோகராக அமைந்த குரு தன் அந்திரத்தில் கூட விவாஹம் செய்ய வாய்ப்புகள் உள்ளது என்பதும் ஒரு காரணம் ஆகும்..

அதுவும் தவிர 3/11 ஆக இருக்கும் கிரகங்களின் பலாபலன் [ பஞ்சபூத தத்துவம் இதை தான் நான் முழுமையாக நம்புகிறேன் ] எப்போதும் நற்பலனையே தரும் ..
உடனடியாக ஜோதிடர்கள் மத்தியில் ஒரு கேள்வி எழலாம் அது ஏன் சுக்கிரனும் குருவும் 3/11 தானே சுக்கிர திசையில் குரு புக்தியில் ஏன் திருமணம் இல்லை என்ற கேள்வி எழலாம்..

இருக்கிறது விளக்கம் இயற்கையில் சுபர் ஆன சுக்கிரன் கடகத்தின் பாதகாதிபதி என்றாலும் சுக்கிரனுக்கும் குருவுக்கும் எப்போதும் பகைமை என்பதால் கடக லக்ன யோகர் ஆன குரு தன் புக்தியில் கொடுக்க நினைத்த சுபத்தை சுக்கிரன் புக்தியில் கொடுக்க முடியவில்லை [ மனைவியும் காமமும் கிடைக்காமல் போனாலும் வேறு சில நற்பயன் கிட்டி இருக்கிறது அதையும் தெளிவுபடுத்தி கொண்டேன் ]
ஆக சந்திரனும் குருவும் எப்போதும் நட்பு என்பதும் கடக யோகர் குரு என்பதும் திசா நாதன் புக்திநாதன் ஆகியோருக்கு 11ல் 3ல் அமைந்த கிரகம் நல்ல பலனையே தரும் என்பாதாலும் இதுபோன்ற ஜாதகம் காண நேரிட்டால் தில்லாக பலாபலனை சொல்லலாம்…

இது போன்ற ஜாதக அமைப்பில் பிறந்து எவருக்குமே திருமணம் இல்லை என சொல்லி விட முடியாது
மனைவி மற்றும் குழந்தை உடன் கூட ஜாதகர்கள் இருக்கலாம் [ மனைவி உடன் சதா சண்டை அல்லது பிரிவினை ..
பெண் குழந்தைகள் மட்டுமே அல்லது ஆண் வாரிசு இருந்தாலும் அவனால் பயனில்லை என வேதனை அடையும் நிலை என வாழலாம்]..
இந்த ஜாதகத்தில் யோகமே இல்லையா?? என வினா எழும்
சரி இந்த ஜாதகத்தில் இருக்கும் யோகங்கள் என்ன???
அதையும் ஆராய்ந்து தான் பார்ப்போமே???

1] அனபா யோகம் என ஒன்று இருக்கிறது..
கடக லக்னம் / கடக ராசிக்கு இரண்டில் செவ்வாய் இருப்பதால் இந்த அனபா யோகம் ஏற்படுகிறது.. இதன் பலன் செலவுகளை சமாளிக்கும் அளவுக்கு வருமானம் கிடைக்கும்…

2 ] தோச நிவர்த்தி யோகம் உள்ளது
லக்னத்தில் அல்லது கேந்திரத்தில் புதன் சுக்கிரன் இருப்பதால் இந்த யோகம் ஆனாலும் கடக லக்னத்தின் பாதகர் சுக்கிரன் 3/12 அதிபர் புதனும் லக்னத்தில் அமைந்தது தோச நிவர்த்தி என சொல்லி விடவும் இயலாது ..
இது தோச ஜாதகமே ஆகையால் தானே இன்னும் இல்லற சுகம் இல்லாத நிலையை கொடுத்து இருக்கிறார் [ லக்னாதிபதி சந்திரன் தன் திசையில் யோகம் தரட்டும் ] 

3 ] சர்ப்ப யோகம் உள்ளது
ராகு கேது கேந்திரத்தில் அமைந்தால் அது சர்ப்ப யோகம் ஊரில் பிரபலமான தன்மை கடக லக்னத்திற்க்கு எப்போதும் அரசியல் ஆசையால் எம்.எல்.ஏ. முதல் கவுன்சிலர் போன்ற தேர்தலில் போட்டி இடுவது இவரையும் விட்டு வைக்கவில்லை ..
கவுன்சிலர் தேர்தலில் சுக்கிர திசையில் தோல்வியை தழுவி உள்ளார்..சந்திர திசையில் அது கை கூடட்டும்..
[குறிப்பு:- தற்போதைய சில அமைச்சர்கள் கடக லக்னம் கடக ராசியை சேர்ந்தவர்கள் தான் ]

4 ] பர்வத யோகம் உள்ளது..
லக்னாதிபதி லக்னத்தின் கேந்திரம் 1-4-7-10ல் அமைந்தால் அது பர்வத யோகம் ஆகும் ..லக்னாதிபதி லக்னத்தில் இருப்பதால் அது நல்ல யோகம் தான் ..


5] சாமர யோகம் உள்ளது
இரு சுபர்கள் கேந்திர வலுவில் 1-4-7-10 அமைந்தால் சாமர யோகம் ஆகும்..

6] சங்க யோகம் உள்ளது
ஐந்தாம் அதிபர் செவ்வாய் க்கு கேந்திரத்தில் ஆறாம் அதிபர் குரு இருப்பதால் இந்த சங்க யோகம் ஆகும் …பொருளாதார தட்டுப்பாடு எப்போதும் அமைக்காமல் சமாளிக்க வைக்கும் ..

7] சதா சஞ்சார யோகம் உள்ளது
சரலக்னம் அல்லது லக்னாதிபதி சர ராசியில் இருப்பது போன்ற அமைப்புக்கு பெயரே சதா சஞ்சார யோகம் [ இது நல் யோகம் ஒரு இடத்தில் அமராமல் சும்மா சுற்றி கொண்டே இருக்கும் அமைப்பு ]
உதாரணம் :- இந்த ஜாதகர் ஒரு சொகுசு வாகன [ டிராவல்ஸ் டிரைவர் ] ஓட்டுநர் ..ஆக சதா சஞ்சார யோகம் நன்றாக வேலை செய்கிறது …

8] கவுள யோகம் உள்ளது
இது நல்ல யோகம் அல்ல.. லக்னத்தில் நான்கு கிரகங்களுக்கு மேலே இருப்பதன் பெயரே கவுள யோகம் ஆகும்..இதர திசா புக்தி கொடுப்பதையும் இதர கிரகங்கள் கொடுப்பதையும் கெடுப்பதே இந்த கவுள யோகம் தான்..

[குறிப்பு:-இதை உங்களுக்கு தெரிந்த ஜாதகத்தில் காணவும் ]
பொதுவாக 10 அதிபர் அமைந்த வீட்டின் [ சிம்மம் ] அதிபர் சூர்யன் [ பூசம் –சனி சாரம் சனி இணைவு இரும்பு சார்ந்த தொழில் ஆக அமையும்..
10 அதிபர் சுக்கிரன் சாரம் [ பூரம்]
10ம் இடத்தில் இருக்கும் கேது சாரம் [பரணி ] இரண்டும் சுக்கிரன் எனும் போது
டெக்ஸ்டைல்ஸ் மற்றும் நகைக்கடை அல்லது
பேன்சி கடை .. 

பொருள் வாடகைக்கு விடும் கல்யாண் ஸ்டோர்ஸ் அல்லது வாடகைக்கு வாகனங்களை விடும் டிராவல்ஸ் உரிமையாளர் ஓட்டுநர் அல்லது அதில் பணி புரியும் சூழ்நிலைகளை தான் தரும்…அது இந்த ஜாதகத்தில் நன்றாக பொருந்தி வந்தது ..

தோசத்தின் தீர்வுகளே இல்லையா ?????என கேள்வி வரலாம் இருக்கிறது ..
திருமணம் தடை சனி கொடுக்க நினைத்த [ மனைவி காமம் ] சூர்யன் கெடுக்கிறார் .அதுவும் போக அம்சத்தில் நீசம் அடைந்த சூர்ய திசை வேறு
[ ஆடுதுறை சூர்யானார் கோயிலுக்கு ஆதி வாரம் சென்று சூர்யனுக்கு ப்ரீதி கொடுப்பது ]பொதுவாக சூர்ய திசை நடப்போர் ஞாயிறு அன்று அசைவம் தவிர்ப்பது நல்லது ஆகும்..
நடப்பு சுக்கிர புக்தி [ஸ்ரீரங்கம் பெருமாளை வெள்ளிக்கிழமை அன்று காலை நடக்கும் விஸ்வரூப தரிசனம் நடக்கும் போது தரிசனம் செய்வது ..

திருமணம் எதற்காக செய்ய வேண்டும்????
ஒரு வாரிசு ஒன்று வேண்டும் என்பதற்காக வாரிசு தருவது ஆணுக்கு ஐந்தாம் பாவம் தான் [ பெண்ணுக்கு ஒன்பதாம் பாவம் மட்டுமே அதற்க்கான பதிவினை தனியே செய்யலாம் ] அந்த ஐந்தாம் அதிபர் செவ்வாய் லக்ன பாதகாதிபதி சுக்கிரன் சாரம் [ இது ஒரு தீமை தான் ]

சரி புத்திரகாரன் செவ்வாய்க்கு 10ல் குரு [ கொள்ளி இட பிள்ளை இருப்பதும் இல்லை ]
செவ்வாய் வேறு சுக்கிரன் சாரத்தில் இரண்டாம் பாதத்தில் ஆக எதிர்கால சந்திர திசையில் இரு பெண் மகவுகள் அமையும் வாய்ப்பு இருக்கிறது..

சரி ஐந்தாம் அதிபர் இப்படி தோசம் அடைவதும் இந்த ஐந்தாம் அதிபர் செவ்வாய்க்கு பத்தில் குரு இருப்பதும் தோசமே …

பரிகாரம் தான் என்ன ??
ஆடி அமாவாஸை அல்லது
புரட்டாசி அமாவாஸை அல்லது
ஐப்பசி அமாவாஸை அல்லது
தை அமாவாஸை நாளில்
நதிக்கரையில் நீராடி ஏதேனும் ஐந்து சன்னியாசிகளுக்கு [ காவி வேஷ்டி துண்டு என துணிவகை மற்றும் உணவு ]
வஸ்திர தானம் போஜன தானம் உடன் வெற்றிலை பாக்கு காணிக்கை
உடன் கொடுத்து அந்த ஐந்து சன்னியாசிகள் காலில் அஷ்டங்கமாக விழுந்து வணங்கி விட்டு வர குழந்தை கிடைக்க என்றாவது திருமணம் அமையும் என்பதை ஆலோசனை ஆக சொல்லி அனுப்பி உள்ளேன் ..

இதை பற்றிய பதிவு எதற்காக ????
பல்கலை கழகத்தில் பாடம் எடுக்கிறோம் என சிலர் கோமாளி டிரெஸ் போட்டு கொண்டு ஜோதிடத்தில் பரிகாரமே இல்லை என சாத்தான் வேதம் ஓதலாம் [ பரிகாரத்தால் கடந்த என் அனுபவத்தில் 10 ஆண்டுக்கும் மேலே பல்வேறுபட்ட புண்ணிய பலனை ஜாதகர் அடைந்து இருக்கிறார்கள் … ]
பரிகாரம் என்பதை சொல்லி அதன் மூலம் பிராமணர்களுக்கு கிடைப்பதை எப்போது ஒரு ஜோதிடர் கமிஷன் எனும் அடிப்படையில் பொறுக்கி தின்கிறார்களோ அங்கே பரிகாரம் வேலை செய்வது இல்லை என்பதே உண்மை ஆகும்..
ஆக ஜோதிட நண்பர்களே பிராமணர்கள் இடத்தில் கமிஷனும் பேசாமல் குறிப்பிட்ட கோயிலுக்கு மட்டும் வழி வகை சொல்லி அனுப்புங்கள் ..

யோகங்களை பழைய பாடல்களை தூக்கி குப்பையில் போடு சாத்தான் நான் ஓதுவதே உனக்கு வேதம் என பல்கலையில் ஜோதிட போதனை செய்யும் கோமாளியாலும்
பரிகாரத்தில் கமிஷன் வாங்கும் ஜோதிடராலும்
அந்த ஜோதிடரை அணுகி என்னிடம் பரிகாரம் செய்ய ஆட்களை அனுப்பி வை உங்களுக்கு தேவைப்படும் கமிஷனை நான் தருகிறேன் என ஆசை வார்த்தைகளை அள்ளி வீசும் பிராமண பரிகார புரோஹிதராலும் தான் இந்த ஜோதிடத்துறை பாழ்பட்டு போனது..

சிறந்த ஜோதிடர் ஆக வர வேண்டும் எனும் ஒரு நோக்கத்தை மட்டுமே வைத்து கொள்ளுங்கள் உங்கள் நாவில் சரஸ்வதி தேவி அருளால் உள்ளத்தில் [ஆன்மா ] தோன்றுவது உதட்டில் [ வாக்கு ]
அதை செவியில் கேட்டு சொல்லும் வாடிக்கையாளர் உங்களை முழுமையாக சொன்னது நடக்கும் என சென்றால் அது நிச்சயம் நடந்தே தீரும் ..அங்கே நீங்கள் வாய் திறந்து சொல்வதே ஜாதகருக்கு நடக்கும்…..

அடியேனும் கமிஷனுக்கு ஆசைப்பட்ட பரிகாரம் சொல்லவில்லை
[ ஹ்ஹ்ஹ்ஹ் சன்னியாசி இடத்தில் கமிஷன் திருவோடு தான் கிடைக்கும் ]
சரி இவ்வளவு நேரம் டைப்பிங் செவ்வன செய்து இதை உங்கள் இடத்தில் பகிர காரணம்???

பழமையும் பாரம்பரியமும் ஜோதிடமும் காக்கப்படணும்… என் சொந்த ஜோதிட அனுபவம் ஜோதிட அறிவை வளர்க்க பழமையான ஜோதிட நூல்களே எனக்கு வழி காட்டி ஆகும்..

இதை வாசிக்கும் நீங்கள் 50 ஆண்டு கால ஜோதிடரோ அல்லது
ஆரம்ப நிலை ஜோதிடரோ எம் பதிவில் ஜோதிட நுட்பம் இருப்பதாக கருதினால் இதை ஷெர் செய்து அனைத்து ஜோதிட குழுவிலும் கொண்டு செல்லுங்கள்..
அதே நேரம் உங்கள் கருத்தை அல்லது ஆலோசனையை இதில் பின்னோட்டம் [கமெண்ட்ஸ் ] மூலமாக கொடுக்கவும்..
நன்றி வணக்கம் அடுத்த பதிவில் இன்னொரு ஜோதிட ஆய்வினை தொடருவோம்..
என்றும் ஜோதிட பணியில் ..
Astro Senthil Kumar
எம்மை நேரடியாக அணுக !!
தொடர்புகொள்ள
ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம்,
புதுபஸ் நிலையம் பின்புறம்
பெருந்துறை -638 052
ஜோதிடர்A .செந்தில் குமார்
செல்: +91 98427 69404
+91 98434 69404