Friday, 6 December 2013

புத்ரம் [குழந்தை] கிடைக்க என்ன வழி?

குரு சிலருக்கு யோகமும் தருவார்! 
குரு சிலருக்கு பாதகமும் தருவார்! 
அது அவர்கள் ஜாதகத்தை பொருத்தே அமையும்!
சிலருக்கு குருவால் குருதிசையால் பாதமான சூழ்நிலையும் ஏற்படும் குரு லக்னத்தின் பாதகரின் பாதக்காலில் செல்ல பாதகமும், யோகரின் காலில் செல்ல யோகமும் தருவார்!
திசையின் நாதனும் புக்தியின் நாதனும் செல்லும் நட்சத்திர அதிபதி ஜீவனாகவும், அவருக்கு பாதம் தந்த நட்ச்சத்திர அதிபதி சரீரமாகவும் பாவித்தே பலனும் உண்டாக்கும்!
அதனால் குருதிசையே நடந்தாலும் அவர் நின்ற பாதம்
[ ஜீவன் ] அவருக்கு பாதம் தந்தவர் [சரீரம்] ஆகும், ஜீவன் கெட்டாலும் சரீரம் கெட்டாலும் பாதிப்பு என்னவோ திசை நடப்பருக்கே தான் ஏற்ப்படுகிறது!

[ குழந்தை பேறு அமைய குரு ஜாதகத்தில் வழுத்தும் 5-ம் அதிபதி வழுத்தும் இருக்க புத்ரபிராப்தி சீக்கிரம் அமையும், கணவன் - மனைவி வாழைப்பழம் இரவில் உண்ண சொல்லி பெரியவர்கள் சொல்வதன் காரணம்:- குரு மணடலத்தில் பரவியிருக்கும் ‘மீத்தேன் அமிலம்” [புத்திரபேறுக்கு இது உடலில் முக்கியம்] வாழைப்பழத்தில் அதிகம் இருப்பதே அதன் அர்த்தம், அதேபோல் நீண்டநாள் குழந்தை பேறு அமையாத தம்பதிகள் வாரம் ஆன வியாழன் அன்று மட்டும் தாம்பத்தியம் கொள்வது ”சீக்கிரமே புத்ரபிராப்தி” அமையும் 

பிரதோஷ வழிபாட்டின் ரகசியம் [ எல்லோரும் சொல்லுங்க ]

சோமசூத்ரப்பிரதஷ்ணம் வழிபாடு என்பது என்ன? 
சோமசூத்ரப்பிரதஷ்ணம் எனபது ஆலகாலவிஷம் தேவர்களை துரத்திய போது அவர்கள் இடமும் வலமும் ஓடியதே ஆகும்! 
நாமும் அதேபோல் ஓடவேண்டும் எப்படி தெரியுமா? 
முதலில் நந்தியில் இருந்து எதிர்மறையாக [ அபதஷ்ண வலம்] சண்டிகேஸ்வரர் வரை இடபுறமும் சென்று சண்டிகேஸ்வரை வணங்க வேண்டும், [ அங்கு அபிஷேகத்தீர்த்தம் விழும் நிர்மால்ய தொட்டியை தாண்டாமல் பார்த்து கொள்ளுங்கள் ] போனவழியேதிரும்பி வந்து நந்தியையும் சிவதரிசனம் செய்து வலம் வந்து சண்டிகேஸ்வரர் சன்னதிவரை வரவும்! [ அங்கு அபிஷேகத்தீர்த்தம் விழும் நிர்மால்ய தொட்டியை தாண்டாமல் பார்த்து கொள்ளுங்கள் ] போனவழியே
திரும்பி [ அபதஷ்ண வலம்] சண்டிகேஸ்வரர் வரை இடபுறமும் சென்று சண்டிகேஸ்வரை வணங்க வேண்டும்,
[ அங்கு அபிஷேகத்தீர்த்தம் விழும் நிர்மால்ய தொட்டியை தாண்டாமல் பார்த்து கொள்ளுங்கள் ]
இப்படி மூன்று முறை சுற்று வந்து சிவாலய தரிசனம் செய்தால் அனேக அஷ்வயாகம் செய்தபலன்
[ குதிரையை வைத்து பூஜித்த பலன் ] கிட்டும் என அனேக ஞானநூல்கள் சோல்லியுள்ளது! இதுவே சோமசூத்ரப்பிரதஷ்ணம் வழிபாடு எனப்பொருள் ஆகும்!

வருஷ ஜாதகத்தை கணிக்கும் விதம்

நீலகண்டர் வருஷ ஜாதகத்தை கணிக்க திருக்கணிதமுறையில் தந்துள்ள கணிதம் . 
இது படிப்படியாக உங்களுக்கு கணகிட்டு பயில உதவும்

1 வயது -----  1 நாள்              6 மணி      9 நிமிஷம்  12 செகண்ட்

2 வயது-------2 நாள்               12 மணி     18நிமிஷம்       18 செகண்ட் 

3 வயது--------3 நாள்               18 மணி     27 நிமிஷம்     30 செகண்ட் 

4 வயது-------5 நாள்                0 மணி       36 நிமிஷம்    36 செகண்ட்

5 வயது----  6 நாள்                 6 மணி       45 நிமிஷம்    48 செகண்ட் 

6 வயது----- 0 நாள்                 12 மணி       55 நிமிஷம்  55 செகண்ட் 

7 வயது-----1 நாள்                  19 மணி       04 நிமிஷம் 06 செகண்ட் 

8 வயது---- 3 நாள்                  1 மணி         13 நிமிஷம்  18 செகண்ட் 

9 வயது ----4 நாள்                  7 மணி         22 நிமிஷம்  30 செகண்ட் 

10 வயது----5 நாள்                 13 மணி        3 நிமிஷம்  12 செகண்ட் 

20 வயது ----4 நாள்                3 மணி          3 நிமிஷம்   36 செகண்ட் 

30 வயது-----2 நாள்                 16 மணி        34 நிமிஷம்  54 செகண்ட் 

40 வயது ----1 நாள்                  6 மணி          6 நிமிஷம்  30 செகண்ட் 

50 வயது----6 நாள்                   19 மணி         38 நிமிஷம்  6 செகண்ட் 

60வயது-----5 நாள்                   9 மணி           9 நிமிஷம்  42 செகண்ட் 

இப்படி வயதை கணக்கிட ஜாதகர் பிறந்த கிழமை யுடன் நாழிகை மற்றும் விநாழிகையுடன் கூட்டி 

கணக்கிட வருவது ஜாதகரின் தற்போதைய வயதுக்கு ஏற்ப்ப கணக்கிட்டு கொள்ளவும் ,இப்படி மேற்கண்ட கணிதப்படி வருஷ ஜாதகம் கணிக்கலாம், அத்துடன் வருஷ ஜாதகத்திற்க்கு திசா புக்தியும் அந்தரமும் கணக்கிட்டு பலன் காணலாம், 

 என்றும் ஜோதிடப்பணியில் 

ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம் பெருந்துறை   

Tuesday, 3 December 2013

தாரம் தங்காத ஜாதகம் [ தாரதோஷ ஜாதகம் ]

இதுபோன்ற ஜாதகம் அமையப்பெற்ற ஜாதக ஜாதகிகள் எத்தனை முறை திருமணம் செய்தாலும் தாரம் தங்குவதில்லை , லக்னம் எது ஆனாலும் ஜாதகத்தில் 7 க்குடையவன் 8 க்குடையவன் மற்றும் பாதகாதிபதி ஆகியோர் ஒரே பாதக்காலில் செல்வது [கிரஹயுத்தம் ] ஜாதகர்களின் திருமண வாழ்வை மிகவும் பாதிக்கிறது, இதுபோன்ற ஜாதகம் அமையப்பெற்றவர்கள் முடிந்தளவு இரண்டாம் தாரமாக வாழ்க்கையை அமைப்பது நல்லது. இந்தஜாதகத்தில் 4 ல் கேது [சுகஸ்தானம்]நான்காம் அதிபதி அஷ்டமாதிபதி செவ்வாய் சாரம் , 7 [சுக்கிரன்] 8 [செவ்வாய்] பாதகாபதி [சனி] ஆகியோர் ஒரேபாதக்கால் எடுத்து அதில் சுக்கிரனும் சனியும் கிரஹ யுத்தம் செய்வதை பாருங்கள் . இதுதான் தாரதோஷம் என்பது, இச்சாதகனுக்கு இருமுறை திருமணம் செய்தும் மனைவி இவருடன் பிழைக்காமல் ஓடிவிட்டனர், மூன்றாவதாக மனைவியை தேடி வருகிறார் [ ஆனால் இனி “திருமணம் நடக்கும்” என்று என் மனதுக்கு படவில்லை ]

Sunday, 1 December 2013

சோமவார அமாவாஸை சிறப்பு & அதன் வழிபாடு

இம்மாதத்தில் இன்று கார்த்திகை 16 ம்தேதி உதிக்கின்ற அமாவாஸை ஆனது, மிகவும் சிறப்பானது, இன்று குழந்தை இல்லாத தம்பதிகள் மற்றும் திருமணம் ஆகாத இளைஞர்கள் & கன்னியர்கள் ஆகியோர்
 திங்கள் கிழமையாக [ சந்திரனுடைய நாளாக அமைவதால் ]
இன்று காலை 8.50 க்கு மேல் அமாவாஸை திதியில் அரசமரத்தில் கீழ் அமைய பெற்ற விநாயகரை 108 முறை அரசமரத்தை சுற்றி வலம் வந்து பிராத்திப்பவர்களுக்கு “சகலதோஷ நிவர்த்தி” அடைவர் என்பது காலம் தொட்டு வரும் மரபு,
அதனால் தோஷம் பீடிக்கப்பட்டவர்கள் இன்று அரசமர விநாயகரை நம்பிக்கையுடன் 108 முறை வலம் வந்து பயன் அடைவீர்களாக!

என்றும் ஜோதிட பணியில்
ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம் பெருந்துறை