Sunday, 21 April 2019

விகாரி வருட உக்ரயோகம் [ நோய் தீர்க்க உகந்தது]


விகாரி ஆண்டில் [2019-2020]

நோயை தீர்க்கஉத்ரயோகங்கள்
அன்பு ஜோதிட நண்பர்களுக்கு வணக்கம்
இந்தியவேத ஜோதிடம் பல பிரிவுகளை கொண்ட அமைப்பு ஆகும்!!!
நான்கு வேதத்தில் உட்பிரிவாககல்பம்” [மருத்துவம்] “ஜோதிஷ்” [ஜோதிடம்] கொண்ட தளம் நம் வேதங்கள்
நோய்க்கு தீர்வு ஜோதிடத்தில் பண்டய காலத்திலேயே எழுதப்பட்டு இருக்கிறது என்பதை பற்றிய பதிவு இது!!
[இன்று பல்கலைகழகத்தில் எடுக்கும் மருத்துவ ஜோதிட படிப்பில் இவை இருக்கிறதா என்பது நான் அறியவில்லை இருந்தால் சந்தோசமே இல்லையெனில் இனி இதையும் சேர்த்து படியுங்கள் ]
கடந்த வாரத்தில்காலப்ரகாசிகை
எனும் ஜோதிடநூலில் இருந்த சில நுட்பங்களை எம்முடைய கோணத்தில்  
பதியப்பட்ட்து அதன் சாராம்சம்
நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டு சிகிச்சைகள் பல எடுத்தும் பயனில்லை என்று சொல்வோர்களை தான் இப்போதெல்லாம் அதிகமாக காண முடிகிறது !!!!!
மருந்துகள் சரியில்லையா ????*?*
மருத்துவர் சரியில்லையா ???****
நோய் தீரும் எனும் நம்பிக்கை இல்லாமல் போகும் காரணம் தான் என்ன எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று கவலையோடு இருப்போர்களுக்கு கொஞ்சம் ஆறுதல் தரும் பதிவு இது !!!!
(
நாள் செய்யாதை நல்லாரும் செய்யார் )
காலப்ரகாசிகை எனும் அற்புதமான நூலை புரட்டிய போது சிக்கிய தகவல்களை கொஞ்சம் நீங்களும் வாசியுங்கள் !!!!!




எல்லோரும் இன்புற்று இருக்க !!!!!!
எல்லாம் வல்ல "தன்வந்திரி பகவான் அருள் செய்யட்டும்”””

"உக்ர யோகங்கள் "

(தீரா நோய் தீர சிகிச்சைக்கு உகந்த நாட்கள் )திருதியை அல்லது அஷ்டமி உடன் கூடிய ரோஹிணி நட்சத்திரம் நாள் !!!!சதுர்த்தி அல்லது அஷ்டமி உடன் கூடிய உத்திர நட்சத்திரம் நாள்பஞ்சமி திதியும் திருவோணம் கூடிய நாள்சஷ்டி திதியுடன் மிருகசீரிடம் நட்சத்திரம் கூடிய நாள்சப்தமி திதியுடன் ரேவதி நட்சத்திரம் கூடிய நாள்நவமி திதியுடன் கிருத்திகை நட்சத்திரம் கூடிய நாள்தசமி திதியுடன் பூசம் நட்சத்திரம் கூடிய நாள்திருதியை அல்லது துவாதசி திதியுடன் அனுஷம் நட்சத்திரம் கூடிய நாள்ஏகாதசி திதியுடன் கிருத்திகை நட்சத்திரம் அல்லது மகம் நட்சத்திரம் கூடிய நாள்தசமி திதியுடன் ரோஹிணி நட்சத்திரம் கூடிய நாள்திரயோதசி திதியுடன் உத்திரம் நட்சத்திரம் கூடிய நாள்போன்றவை "உக்ர யோகங்கள் "என்ற பெயரில் அழைக்கப்படுகிறது !!! "உக்ர யோகங்கள் "நாளில் தீர்க்க முடியாத நாள்பட்ட வியாதிகளுக்கு சிகிச்சைகள் எடுத்தால்  "நோய் தீரும் "என்கிறது  "காலப்ரகாசிகை "ஜோதிட நூல் எதை செய்தாலும் முதலில் அதன்மேல் நம்பிக்கையை வைத்து முயற்சி செய்யுங்கள் !!!


"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் """பகவான் அருள் 

 "அருள்புரியட்டும் !!!!!!” “”திருக்கணித ஜோதிடம் எனும் முகநூல் பேஜ்ஜில் சில ஆண்டுகளில் வாசித்தோர்கள் எண்ணிக்கை 15,0000க்கும் மேலே அதை வாசித்த நண்பர்கள் தொடர்ந்து பதிவை பாராட்டியது இல்லாமல் வரும் விகாரி ஆண்டில் இந்த தீராதநோய்க்கு அறுவை சிகிச்சை போன்றவை செய்ய உகந்த நாட்களை பட்டியல் செய்யுங்கள் என தொடர்ந்து கோரியதாலும் ஜோதிடத்தை வைத்து வாழும் நம்மால் மக்களுக்கு உதவ வேண்டும் எனும் எண்ணத்துடன் வரும் ஆண்டில் மருத்துவர்கள் மிகவும் முற்றியநோய் அறுவை சிகிச்சை செய்தாலும் காப்பாற்ற இயலாது என்று கைவிடப்பட்ட நோயாளிகள் யாரேனும் இந்த உக்ரயோகநாளில்தக்கதொரு அறுவை சிகிச்சை செய்து உயிர் மீண்டார்கள்என்றால் அதை பின்னிட்டு இங்கே தகவல்கள் செய்யுங்கள் இப்பதிவின் நோக்கமே ஜோதிடத்தில் இல்லாதது ஒன்றுமே இல்லை என்பதே !!!

நடைபெறும் விகாரி ஆண்டின் [ 2019 -2020] ஆண்டு தீராத நோய்க்கு சிகிச்சைகள் எடுத்து நோய் தீர்த்து வாழ சில நாட்கள் எம்முடைய தேடலில் சிக்கியது அதன் பட்டியல் பின்வருமாறு::----


1] சித்திரை மாதம் 8 ஞாயிறு  ஆங்கில தேதி 21-04-2019 மாலை 5.02P.M.  முதல் மறுநாள் சித்திரை 9 திங்கள் ஆங்கில தேதி 22-04-2019 காலை 11.25A.M. வரை திருதியை உடன் அனுஷம் கூடிய உக்ர யோகம்


2] சித்திரை 23 திங்கள் பின் இரவு ஆங்கில தேதி 07-05-2019 அன்று 03-18A.M. முதல் சித்திரை 24 செவ்வாய் ஆங்கில தேதி 07-05-2019 மாலை 04-27P.M. வரை திருதியை திதி உடன் ரோஹிணி நட்சத்திரம் கூடிய உக்ர யோகம்

3] வைகாசி 27 திங்கள் மாலை 02-21 P.M ஆங்கில தேதி 10-06-2019 அன்று இரவு 10-24 வரை அஷ்டமி உடன் உத்திரம் நட்சத்திரம் கூடிய உக்ர யோகம்

4] ஆனி 27 வெள்ளி பின் இரவு ஆங்கில தேதி 13- 07-2019 அன்று 12-31A.M.
முதல் ஆனி 28 சனி மாலை ஆங்கில தேதி 13-07-2019 04-27P.M. வரை துவாதசி உடன் அனுஷம் கூடிய உக்ரயோகம்

5] ஆடி 7 செவ்வாய் மாலை ஆங்கில தேதி 23-07-2019 அன்று  04-16P.M.
 முதல் ஆடி 8 புதன் மாலை ஆங்கில தேதி 24-07-2019 அன்று 03-42P.M சப்தமி திதி உடன் ரேவதி கூடிய உக்ரயோகம்

6] ஆடி 10 வெள்ளி மாலை ஆங்கில தேதி 26-07-2019 06-56 P.M. முதல் 07-56P.M. [ ஒருமணி நேரம் மட்டுமே] நவமி உடன் கிருத்திகை கூடிய உக்ரயோகம்

7] ஆடி 18 சனி பின் இரவு ஆங்கில தேதி 04-08-2019 அன்று 04-05A.M. முதல்
 ஆடி 19 ஞாயிறு மாலை ஆங்கில தேதி 05-08-2019 அன்று 06-49P.M. வரை சதுர்த்தி உடன் உத்திரம் கூடிய உக்ர யோகம்
8] ஆவணி 6 வெள்ளி பின் இரவு ஆங்கில தேதி 24-08-2019 03-45A.M முதல்
  ஆவணி 7 சனி காலை ஆங்கில தேதி 24-08-2019 08-32A.M. வரை அஷ்டமி உடன் ரோஹிணி கூடிய உக்ரயோகம் [ கோகுலாஷ்டமி ]


9] புரட்டாசி 7 செவ்வாய் அன்று காலை ஆங்கில தேதி 24-09-2019 10-31A.M முதல் மாலை 04-42P.M.வரை தசமி உடன் பூசம் கூடிய உக்ரயோகம் ...

10] ஐப்பசி 2 சனி அன்று காலை ஆங்கில தேதி 19-10-2019 07-44A.M முதல் மாலை 05-40 P.M. வரை சஷ்டி உடன் மிருகசீரிடம் கூடிய உக்ரயோகம் 
11] ஐப்பசி 6 புதன் பின் இரவு ஆங்கில 


தேதி 24-10-2019 01-09A.M. முதல்
   ஐப்பசி 7 வியாழன் மதியம் 
ஆங்கில தேதி 

25-10-2019 01-18P.M.வரை

 ஏகாதசி உடன் 

மகம் கூடிய 

உக்ரயோகம் . 

12] ஐப்பசி 08 வெள்ளி இரவு ஆங்கில தேதி 25-10-2019 07-08P.M. முதல்
   ஐப்பசி 09 சனி காலை ஆங்கில தேதி 26-10-2019 08-27A.M. வரை திரயோதசி உடன் உத்திரம் கூடிய உக்ரயோகம் ..


13] ஐப்பசி 12 செவ்வாய் பின் இரவு ஆங்கில தேதி 30-10-2019 03-48A.M. முதல்
  ஐப்பசி 13 புதன் காலை ஆங்கில தேதி 30-10-2019 08-27A.M. வரை திருதியை உடன் அனுஷம் கூடிய உக்ரயோகம் ...


14] ஐப்பசி 28 வியாழன் அன்று முன் இரவு ஆங்கில தேதி 14-11-2019 07-55P.M முதல் 10-47P.M வரை திருதியை உடன் ரோஹிணி கூடிய உக்ர யோகம்

15] மார்கழி 2 புதன் பின் இரவு ஆங்கில தேதி 19-12-2019 12-01A.M. முதல் மார்கழி 3 வியாழன் இரவு  ஆங்கில தேதி 19-12-2019 09-23P.M. வரை அஷ்டமி உடன் உத்திரம் கூடிய உக்ரயோகம் ..

16] மார்கழி 21 திங்கள் மதியம் முதல் பின்னிரவு வரை  ஆங்கில தேதி 06-01-2020 02-15P.M. முதல் ஆங்கில தேதி 07-01-2020 04-02A.M வரை ஏகாதசி உடன் கிருத்திகை கூடிய உக்ரயோகம் ..


17] தை 14 ஆங்கில தேதி 27-01-2018 காலை 06-10

 முதல் 11-10 வரை தசமி உடன் ரோஹிணி

18] தை 17 வெள்ளி ஆங்கில தேதி 31-01-2020  மாலை 03-52P.M.  முதல் 06-09P.M வரை சப்தமி உடன் ரேவதி நட்சத்திரம் கூடிய உக்ரயோகம் ..

19] தை 19 ஞாயிறு அன்று இரவு ஆங்கில தேதி 20-02-2020 11-11P.M முதல்
  தை 20 திங்கள் அன்று இரவு ஆங்கில தேதி 03-02-2020 09-19P.M. வரை நவமி உடன் கிருத்திகை கூடிய உக்ட்ர யோகம் ...


20] தை 28 செவ்வாய் பின் இரவு ஆங்கில தேதி 12-02-2019 02-53A.M.
   தை 29 புதன் பகல் ஆங்கில தேதி 12-02-2019 11-46 A.M. வரை சதுர்த்தி உடன் உத்திரம் கூடிய உக்ரயோகம் ..

21] மாசி 19 திங்கள் அன்று பகல் ஆங்கில தேதி 02-03-2020 
12-53P.M. முதல்
   மாசி 20 செவ்வாய் அன்று 
காலை ஆங்கில தேதி 02-03-2020 10-31 A.M. 
வரை அஷ்டமி உடன் 
ரோஹிணி கூடிய உக்ரயோகம் ..
22] பங்குனி 17
 திங்கள் அன்று மாலை ஆங்கில தேதி 
30-03-2020 05-17 P.M. முதல் 03-15A.M. வரை 
சஷ்டி உடன் மிருகசீரிடம் 
கூடிய உக்ரயோகம்..


23]பங்குனி 20 வியாழன் பின் இரவு ஆங்கில தேதி 03-03-2020 02-43A.M. முதல்
  பங்குனி 21 வெள்ளி மாலை ஆங்கில தேதி 03-03-2020 06-40P.M. வரை தசமி உடன் பூசம் கூடிய உக்ரயோகம். 

24] பங்குனி 22 சனி அன்று மாலை ஆங்கில தேதி 04-04-2020 05-08P.M. 10-30P.M. வரை ஏகாதசி உடன் மகம் கூடிய உக்ரயோகம்..

25] பங்குனி 24 திங்கள்  அன்று மதியம் முதல் மாலை வரை ஆங்கில தேதி 06-04-2020 12-16P.M. 03-52P.M. வரை திரயோதசி  உடன் உத்திரம்  கூடிய  உக்ரயோகம்..




 இந்த நாடகள் எல்லாம் தீராத வியாதி என கருதுவதற்க்கு 
விகாரி ஆண்டில்
 சிகிச்சை எடுக்க உகந்த நாட்கள் ஆகும்..

இவையெல்லாம் சாத்தியமா என கருத 


வேண்டாம் …எல்லாம் சாத்தியமே...


மகாபாரதம் அறிவீர் அதில் கெளரவர்கள் “ 100 பேர் கருக்கலைந்தபோது 100 குடுவையில் பிடினி வரும் காலகட்டத்தில் ஒவ்வொரு மருத்துவரும் சிகிச்சை பலன் அளிக்காத நோயாளிகளுக்கு சோதித்து பார்த்துஅதில் மருத்துவ வெற்றிஅடைய அதிக நாட்கள் இல்லை !!!

செயற்க்கை மூலமாக உருவாக்கப்பட்டு 100 சகோதர்கள் உருவானார்கள் ..முதல் உடல் உறுப்பு மாற்று சிகிச்சை என்பது விநாயகப்பெருமானுக்கு நடந்த்து.. இன்று மருத்துவத்தில் அதையெல்லாம் சாத்தியம் ஆக்கி இருக்கிறது….

உத்ரயோகம்” இது உலகில் நோயை வெல்லும்

என்றும் ஜோதிட நம்ப்பிக்கை உடன் “”

மக்களின் நலன் கருதி வெளியிடுவது!!! 
என்றும் ஜோதிடப்பணியில்!!!
#Astro_Senthil_Kumar
 ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம்
புதுபஸ் நிலையம் பின்புறம்
 பெருந்துறை   -638 052
ஜோதிடர்A .செந்தில் குமார் 
செல்: +91 98427 69404
             +91 98434 69404    
ஆன்லைனில் ஜோதிட ஆலோசனைகளை பெற முன்னிட்டு வங்கியில் கட்டணம் செலுத்தி பின்னர்
astrosenthilkumar@gmail.com எனும் மெயில் வழியாக தொடர்பு கொள்ளவும்..
வங்கி விபரங்கள்
Union bank of india
a/c no:- 629102010002579
Ifsc code:- UBIN 0562912
Village:- 803534- Perundurai
Cust Id:- 241739254
Name:- Senthilkumar .A


Sunday, 20 January 2019

ஜோதிட மேதை கும்பகோணத்தாரின் பதிவுகள்

இது ஒரு ஜோதிட பதிவு ஆகும்..

இதை காலம் சென்ற நாமக்கல் மாவட்ட  சிங்களாந்த புரத்தில் வாழ்ந்த அமரர் கும்பகோணத்தார் என அழைக்கப்பட்ட அருணாசலம் அவர்கள் அவர் உயிருடன் வாழ்ந்த போது 14-03-2000 அன்று எழுதிய ஒரு கட்டுரை
இதை யாரும் காப்பி பேஸ்ட் செய்யாமல் அப்படியே ஷேர் செய்வது தான் ஒரு ஜோதிட மேதைக்கு ஜோதிடர்கள் ஆகிய நீங்கள் செய்யும் குரு வணக்கம் ஆகும்..


கட்டுரையின் சாராம்சம் இது:-

நமது மூதாதையர்களான மெய்ஞானிகள் தங்கள் தபோ பலத்தினால் தெய்வ அனுக்கிரகம் பெற்று தங்களது ஞானத்தின் மகிமையால் எழுத்தப்பட்ட நூல்களே வேதங்கள் ஆகும்..


வேதங்களை ஒரு மனிதனால் உருவாக்கப்படுவதினால் அவனுடைய கண்களே “ஜோதிட சாஸ்திரம்” ஆகும்..

வேதத்தின் ஆறு அங்கங்களில் ஒன்றாக ஜோதிட சாஸ்திரம் திகழ்கிறது ..கண்கள் இல்லாத மனிதனால் ஒன்றுமே செய்ய இயலாது
உலகம் செழித்து மக்கள் சுபிட்சம் அடைந்து நல்வாழ்க்கை அமைய வேண்டுமானால் நல்ல மழை பொழிய வேண்டும்..


நல்ல தெய்வ நம்பிக்கையோடு மக்கள் வாழ வேண்டும்..
இவைகள் நிலைத்து இருக்கவே “யாகங்களையும்” நல்ல தெய்வஸ்துதிகளையும் போதிக்கவே “வேதங்கள்” ஏற்பட்டது ..

இப்பவும் யாகங்களை தெய்வ வழிபாடுகளை நிர்ணயிக்கவே “ அயனங்களும்” “ருதுவும்” “மாதங்களையும்” “ஞாயிறு முதலான நாட்களையும்


வளர்பிறை மற்றும் தேய்பிறையும் பிரதமை முதலான “திதிகளையும்”
“அசுவினி” முதலாக 27 நட்சத்திரங்களையும் நல்ல முகூர்த்த லக்கினங்களையும் வைத்தே ஒரு செயல் நிர்ணயிக்கப்படுகிறது..

\யாகங்களை பிற தெய்வ அற செயல்களையும் செய்வதற்க்காக நல்ல காலத்தை ஜோதிட சாஸ்திரம் ஒன்றே அறிவிக்கக்கூடியதாகும் ..
இதனால் தான் ஜோதிடம் வேத அங்கம் என கூறப்பட்டது ..

ஜோதிட சாஸ்திரம் சூர்யன் முதலாக ஒன்பது நவகோள்களின் அடிப்படையில் அமைந்துள்ளது ..

இந்த ஜோதிடம் “வைதீக” கார்யங்கள் மட்டுமே இன்றி மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை எல்லா நிலைகளிலும் தொடர்பு உடையதாக இருக்கிறது..


எல்லா ஜீவராகளும்  தோன்றி வளர்ந்து பின்னர் மறைகின்றன..இந்த நியதிகள் யாவுமே கால புருஷனின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளனவாகும்..


சூர்யனின் சக்தியும் பிற கோள்களின் இடைவிடா சுழற்சியும் அவற்றின் அளவு கடந்த சக்தியும் தான் “கால புருஷனின் பிரதான ஆயுதம் ஆகும்..
மனிதன் பிறக்கும் போதும் இறக்கும் போதும் “எதையும் கொண்டு வருவதும் இல்லை” எதையும் “கொண்டு செல்வதும் இல்லை””
எடுத்து செல்வதும் இல்லை ஆனால் அவன் அவன் செய்த நல்வினை தீய்வினை பாவம் புண்ணியம் இவற்றை மட்டுமே தம்மோடு எடுத்து செல்கிறான் ..

அதற்க்கு தகுந்தவாறு தான் அவனின் மறு பிறவியை பெறுகிறான் ..
பிறப்பு இறப்பு எல்லாம் “டார்வின்” தத்துவம் போல ஒரு வட்டத்தின் சுழற்சியாகவே இருக்கின்றன ..

ஒருவன் ஜெனனம் ஆகும்போது அமைந்துள்ள கிரகங்கள் தான் அவனை
“நல்லவனா??” “கெட்டவனா??” “ஞானியா?” “அஞ்ஞானியா?” “நோயாளியா?”
“ திடகாத்திரனா??” “ அறிஞனா??”  “மூடனா?” நீண்ட ஆயுள் உள்ளவனா??? அல்லது அற்பாயுள் உள்ளவனா?? ஏழையா?? செல்வந்தனா?? என்பற்றை தெளிவாக அறிந்து கொள்ளவதற்க்கு தான் “ஜோதிட கலையே” சிறந்த கருவி ஆகும்..

பூர்வ ஜென்மத்தில் ஏற்ப்பட்ட நன்மை தீமைகளுக்கு ஏற்ப இந்த ஜென்மத்தில் அநத ஜாதகன் அனுபவிக்கும் சுக துக்க காலங்களை விளக்குவதே “திசா புக்தி” ஆகும்..

மனிதனுக்கு “பால்ய திசை” [ குழந்தை பருவம்]
“யெவன திசை [ இளைமை பருவம்] 
விருத்த திசை [ முதுமை பருவம்]
இதை வயதை குறிப்பிடுவது போல குறிப்பிடுகிறோம்..தசை என நூல் வழக்கிலும் திசை என உலக வழக்கிலும் கூறுகிறோம்..

யவனர் 12 வகை எனவும் ,
மணித்தர் முதலாகினர் 10 வகை எனவும்
பாதராயணர் 8 வகை எனவும்
சித்த சேனர் 6 வகை எனவும்
தேவலர் முதலாயினர் 4 வகை எனவும்
விஷ்ணு குப்தர் 3 வகை எனவும்
சத்தியாச்சாரியார் 2 வகை எனவும் கூறியுள்ளார்கள் ..


மேலும் விம்சோத்திரி திசை , அஷ்டோத்திரி திசை , யோகினி திசை எனவும் வடநாட்டிலும்  மும்பை போன்ற பகுதிகளில் வழங்கி வருகின்றன...


குஜராத் , பாஞ்சாலம்,செளராஷ்ட்டிரம் மற்றும் சிந்து போன்ற பகுதிகளில் ”அஷ்டோத்திரி திசையே அறியப்படுகிறது ..
பராசர முனிவர் “மஹா திசை” என வழங்கப்படும் “விம்சோத்திரி திசையே” முக்கியம் என “பிருஹத் பராசர ஹோரா சாஸ்திராவில்” அருளி செய்து உள்ளார் ..

நம் தமிழ்நாட்டில் அன்று முதல் இன்று வரை சந்திர பகவான் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறாரோ அந்த நட்சத்திரத்தை ஆதியாக கொண்டு பராசரர் கூறிய மகாதிசையை வைத்தே ஜோதிடம் பார்த்து வருகிறோம்.
மக்களுடைய வாழ்நாளில் இன்ன இன்ன காலத்தில்  இன்பம் உண்டு என்றும்
இன்ன இன்ன காலத்தில் துன்பம் உண்டு என்றும் திட்டமாய் அறிவதற்க்கு  இந்த மகாதிசை தவிர ஜோதிட சாஸ்திரத்தில் வேறு ஆதாரங்கள் கிடையாது என திண்ணமாக சொல்லலாம்..

திசைகள் பல வகைப்படும்..அவை..

1] மகா திசை
2] உர்பண்ண திசை
3] மிருத்தியு திசை
4] பிராண திசை
5] ஆதான திசை
6] வாம திசை
7] உடு திசை
8] நிராயண திசை
9] மகா பிராண திசை
10] குளிக நிராயண திசை
11] கால சக்ர திசை
12] வருஷ மகா திசை [ தஜக நீலகண்டீயம் ]
13] மாத திசை
14] நித்ய மகா திசை
15] யோகினி திசை
16] நைசர்சிக திசை

என்று பல வகையான திசைகள் இருப்பினும் நாம் எடுத்து கொள்ளும் மஹா திசையை மையமாக வைத்து தான் எல்லா காரண கார்யங்களையும் ஆராய்ச்சிக்கு எடுத்து கொள்கிறோம்..


இராசி மண்டலத்தில் சூர்யன் சந்திரனை தவிர ஏனைய கிரகங்களுக்கு இரு இரு ஆதிபத்தியமாகி இருக்கின்றன ..

அவற்றுள் ஒரு கிரகத்தின் திசா புக்தி காலத்தில் எந்த வீட்டின் ஆதிபத்தியம் முன்னும் எந்த வீட்டின் ஆதிபத்தியம் பின்னும் நடக்கும் என ஜோதிடர்கள் ஆகிய நாம் ஆராய்ச்சிக்கு எடுத்து கொள்ள வேண்டும்..


ஒற்றை ராசிகள் ஆகிய ஆண் ராசியில் மேஷம் மிதுனம் சிம்மம் துலாம் தனுசு கும்பம் இவைகளில் இருந்த கிரகங்கள் தன் திசாபுக்தி காலத்தில் முதலில் மூல திரிகோண ஆதிபத்திய பலனும்  பின்னர் ஆட்சி ஆதிபத்திய பலனும் உண்டாக்கும்..

மேலும் இரட்டித்த ராசிகள் ஆகிய பெண் ராசிகள் ஆகிய ரிஷபம் கடகம் கன்னி விருட்சிகம் மகரம் மீனம் ஆகிய ராசிகளில் நின்ற கிரகங்கள் முதலில் ஆட்சி ஆதிபத்திய பலனும் பின்னர் மூலத்திரிகோண ஆதிபத்திய பலனும் உண்டாக்கும்..


இவைகள் அனுபவத்தில் சரியாக பொருந்தி போகிறது ..
சூர்யனுக்கு மூலத்திரிகோணம் ஆட்சி இரண்டும் ஒரே வீடாக உள்ளது ..
ஆக சூர்யனுக்கு முன் பின் ஆதிபத்திய பலன் கிடையாது..
சந்திரனுக்கு கடகம் ஆட்சி வீடும் ரிஷபம் மூலத்திரிகோணமும் ஆவதால் சந்திரனுக்கு காலவிபாகம் [ இரு ஆதிபத்தியம்] உண்டு ..


செவ்வாய்க்கு மேஷம் + விருட்சிகம்
புதனுக்கு கன்னி + மிதுனம்
குருவுக்கு தனுசு+ மீனமும்
சுக்கிரனுக்கு துலாம் + ரிஷபம்
சனிக்கு கும்பம் + மகரம் முறையே முதல் வீடுகள் மூலதிரிகோணமும் அடுத்தது ஆட்சி வீடுகளும் ஆகும் ..


உதாரணதிற்க்கு

கடக லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு குரு இரட்டை ராசி ஆகிய பெண் ராசியில் இருந்தால் முதலில் 9ம் இடம் ஆகிய மீனத்திற்க்கு உரிய ஆட்சி பலனையும் பின்னர் மூலதிரிகோண இடம் ஆகிய ஆறாம் இடத்து பலனையும் நகர்த்தும் ..மேலும் செல்வம் ஆனது ஒரிடத்தில் நிலையெடுத்து செல்லும் தன்மையை உடையது எனவும் தரித்திரமும் அதேபோல ஓரிடத்தில் நிலையாக தரிக்கிறோம் நிலையாக நில்லாமல் செல்லும் தன்மையுடைது எனவும் பொருள் படும்.. ஒரு திசைக்குள் நன்மையும் தீமையும் மாறி மாறி வந்து கொண்டிருக்கும்..


ஷட் பலத்துடன் கூடியோ அல்லது தனது பரம உச்ச பாகையில் இருக்கும் கிரகத்தின் திசையை ”சம்பூர்ண திசை” என கூறப்படும்....
ஷட் பலம் எனப்படுவது :-
1] ஸ்தான பலன்
2] திருக் பலம்
3] திக் பலம்
4] நைசிர்க பலம்
5] சேஷ்டா பலம்
6], கால பலம் என ஆறு வகைப்படும்..


1 ] கிரகங்கள் தன் உச்ச வீடு மூலத்திரிகோண வீடு ஆட்சி வீடு நட்பு வீடு போன்ற இடங்களில் நிற்க்கும்  போது ஸ்தான பலம் பெருகின்றன..

2 ] புதன் குரு ஜனன லக்னமான கிழக்கு திசையிலும் ஏழாம் இடம் ஆகிய மேற்கு திசையில் சனி -ராகு -கேது வும் தெற்கு திசை ஆகிய லக்னத்திற்க்கு பதாம் இடத்தில் சூர்யனும் செவ்வாயும் வடக்கு திசை ஆகிய நான்காம் இடத்தில் சந்திரனும் சுக்கிரனும் நிற்க்கும் போது அவைகள் “திக் பலம்” பெருகின்றன ..

3] கிரக பார்வைகளினால் ஏற்படும் நன்மை தீமைகள் “திருக் பலம்” ஆகும்.

4] நைசர்சிக பலம் [ இயற்கை வலிமை] புதனை விட செவ்வாயும் செவ்வாயை விட சனியும் சனியைவிட குருவும் குருவை விட சுக்கிரனும் சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூர்யனும் சூர்யனை விட ராகு கேதுக்களும் வலிமை பெற்றவர்கள் ஆவர் ..

5] சேஷ்டா பலம் [ சஞ்சாரம்] சூர்ய சந்திரகள் மகரம் முதல் மிதுனம் வரை உள்ள ராசிகளில் வலிமையை கூடுதலாக பெறுவார்கள்.. செவ்வாய்- புதன் -குரு-சுக்கிரன்  ”வக்ர கதியில்” கூடுதலாக பலம் பெறுவார்கள் ..புதன் வீடான மிதுனம் கன்னியில் செவ்வாய் புதன் குரு சுக்கிரன் சனி ஆகிய ஐவரும் சஞ்சார பலம் பெறுவார்கள் ..

6] ”கால பலம்” சூரியன் குரு சுக்கிரன் பாவருடன் சேராத புதன் ஆகியவைகள் பகலில் பிறந்த ஜாதகத்திலும்
சந்திரன் - செவ்வாய்- சனி பாவருடன் சேராத புதன் “இரவில்” பிறந்த ஜாதகத்திலும்
சூர்யன் -குரு -சுக்கிரன் பாவருடன் சேராத புதன் “வளர்பிறையில்” பிறந்த ஜாதகத்திலும் “கால பலம்” பெறுவார்கள்..

சூர்யன் செவ்வாய் சனி தேய்பிறை சந்திரன் பாவருடன் சேராத புதன் ராகு கேது ஆகியவர்கள் “தேய்பிறையில்” பிறந்த ஜாதகத்திலும் “கால பலம்” பெறுவார்கள் ..

மேலே கூறப்பட்ட ஆறு வகை பலத்துடன் கூடியோ அல்லது தனது “பரமோச்ச பாகையில்” இருக்கும் கிரக திசையே “சம்பூர்ண திசை” ஆகும்..
பரமோச்ச பாகையில் உள்ள கிரக ஆனது “ஆறு வகையில்” பலம் இல்லாமல் இருந்தாலும் “ சம்பூர்ண திசை” என கூறலாம்..

உச்ச பாகையில் இல்லாமல் உச்ச ராசியில் இருந்து “கொஞ்சம்” ஆவது “ஷட்பலத்துடன்” கூடிய திசையை “பூரண திசை” என சொல்லலாம்..
ஷட் பலம் இல்லாத திசையை “இருத்தை திசை” என அழைக்கப்படும்..
நீசாம்சத்திலும் சத்ரு நவாம்சத்திலும் இருந்த கிரகத்தின் திசையை “அரிஷ்ட திசை” என அழைக்கலாம்..

“சம்பூர்ண திசை” புக்தி காலங்களில் சரீர ஆரோக்கியம் தன விருத்தி முதலியனகளால் “மக்கள்” அனேக நற்பலன்களை அடைவார்கள் ..
“பூர்ண திசை” புக்திகளில் சற்றே குறைவான பலன்களை அடைவார்கள்..
“இருத்தை திசையில்”அல்லது புக்திகளில்  “தன நாசம்” முதலியன துன்பங்களை அடைவார்கள்..

”அரிஷ்ட திசையில்” அல்லது புக்திகளில் வியாதி தன நாசம் மரணத்திற்க்கு ஒப்பான கண்டம் பீடைகளை அடைவார்கள்..
மேலும் தனது பரமோச்ச பாகையை விட்டு நீசாபி முகமாக தனது நீச பாகை வீட்டுக்குள் இருக்கும் கிரகம் ஆறு வீடுகளில் ஏதேனும் ஒரு ராசிகளில் இருக்கும் கிரகத்தின் திசையை “அவரோகண திசை” என அழைக்கப்படும்..

இந்த அவரோகண திசை என்பது எப்போழுதும் ஜாதகருக்கு  அதம பலனையே தரும்..

ஆனால் இந்த அவரோகண திசை அல்லது புக்தி நாதன் எந்த ராசியிலேனும் ஆட்சி அல்லது உச்சம் நட்பு ஆகிய நவாம்சங்களில் இருப்பினும் தனது அதம பலனை நீக்கி மத்திம பலனை தருவார்கள் ..
மேலும் தனது பரமோச்ச பாகையை விட்டு விலகி உச்சாபி முகமாக பரமோச்ச பாகையை வீட்டுக்குள் இருக்கும் ஆறு ராசிகளில் ஏதேனும் ஒரு இடத்தில் இருந்தால் அந்த திசையை அரோகணி திசை என அழைக்கப்படும் ..இந்த திசை அல்லது புக்தி நற்பலனையே தரும் .
.
இந்த ஆரோகணி திசை நாதன் நட்பு -ஆட்சி-உச்ச நவாம்சத்தில் இருந்தால் அதை “சம்பூர்ண திசை” பலனை கொடுப்பார்கள்..

இந்த திசை நாதன் பகை- நீச நவாம்சத்தில் இருந்தால் மத்திம பலனை கொடுப்பார்கள் ..

அதாவது “நற்பலனை” கொஞ்சமாக கிள்ளி கொடுப்பார்கள்என கூறப்படுகிறது..


ஒரு திசையை

1] சம்பூரண திசை
2] பூரண திசை
3] இருத்தை திசை
4] அரிஷ்ட திசை
5] ஆரோகண திசை
6] அவரோகண திசை என பல வகையாக இந்த “விம்சோத்திரி” திசையை பெயர் வழங்கப்படுகின்றன..

----------------------------------------------------------------------------------------------------------------------------------------இவ்வாறாக இந்த “ஜோதிட கட்டுரையை”
காலம் சென்ற நாமக்கல் மாவட்ட  சிங்களாந்த புரத்தில் வாழ்ந்த அமரர் கும்பகோணத்தார் என அழைக்கப்பட்ட அருணாசலம் அவர்கள் அவர் உயிருடன் வாழ்ந்த போது 14-03-2000 அன்று எழுதிய ஒரு ஜோதிட கட்டுரை ஆகும்..
அனைவரும் அமரர் கும்பகோணத்தாரின் இந்த கட்டுரையை அப்படியே ஷேர் செய்யுங்கள் “காப்பி பேஸ்ட்” செய்வது குருத்துரோகம் ஆகும்..

என்றும் ஜோதிட பணியில்
பெருந்துறையில்

இருந்து
Astro Senthil Kumar
ஸ்ரீவீரபத்ர ஜோதிட மையம்
பெருந்துறை
Wats App:- 9843469404..EMAIL:- 

astrosenthilkumar@gmail.com

Friday, 18 January 2019

கட்டிலில் இன்பமும் கையில் குழந்தையும்

 கட்டிலில் இன்பமும் கையில் குழந்தையும் அமைவதும் ..


பொதுவாக 10 பொருத்தங்களை அதுவும் கூட பத்து ஜோதிடரிடம்  ஆலோசனைகளை கேட்டு பின்னர் ஆண் பெண் இருவரையும் இணைத்து வைத்து கூட ஒரு சில தம்பதிகளுக்கு  பத்து வருடங்களாக கூட மகப்பேறு எனும் குழந்தை செல்வம் அமையாது போகிறது ..இதில் எங்கே குறைபாடு வருகிறது ??? என ஆய்வில் பயணிக்க வேண்டும் என ஒரு கருத்தை மனதில் நிறுத்தி கொண்டு பயணிக்க வாருங்கள் ..ஜோதிடத்தில் ஒரு தேடல் உடன் விடையை தேடி செல்வோம் 


..ஒரு கர்ப்பம் தரிப்பது ஏதோ ஒரு ஜவுளிக்கடையில் காய் மார்க்கெட்டில் பொருட்களை வாங்கி வருவது போல அல்ல ..


இயற்கை மிக அற்புதமான படைப்பை ஆணின் மூலமாக ஒரு பெண்ணின் கருவறையில் “பிரபஞ்ச உற்பத்தியை” துவக்கி வைக்கிறார்.
ஒரு சில புதியதாக ஜோதிடம் கற்று வரும் நபர்கள் கூட 10 பொருத்தம் எனும் திருமண பொருத்தத்தில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை ..ஏன் இந்த பொருத்தங்களை எல்லாம் ஆணின் நட்சத்திரம் முதல் பார்க்காமல் “பெண்ணின்” நட்சத்திரத்தில் வைத்து பொருத்தம் பார்க்கணும் ??? என விதண்டாவாதம் செய்த நபர்கள் பலரை பார்த்து விட்டேன்.. அது போல புரிந்துணர்வு இல்லாமல் இருக்கும் “ஜோதிட மாணவர்கள்” பலரும் கொஞ்சம் தங்களின் கருத்தில் தெளிவடைய வைக்கவும் கூட இந்த கட்டுரை பயன்பட்டால் மிகவும்  மனம் மகிழ்ச்சி அடைவேன்...



ஒரு கரு கர்ப்பப்பையில் உருவாகும் பொழுது

முதல் மாதத்தில் சுக்கிலம் [ விந்தணு ] உடன் சுரோணியம் [ கரு முட்டை ] இணைந்து நாம் சற்றே “பேஸ்ட்” போல கெட்டியான “உப்பு பருப்பை” தயாரிக்கும் அளவுக்கு “கெட்டியான பேஸ்ட்” வடிவம் அடைந்து மறு மாதத்தில் அது இன்னும் கெட்டியாகி கனத்து மூன்றாம் மாதத்தில் உடலில் அவையங்கள் உருவாகி பின்னர்

நான்காம் மாதத்தில் அவையங்களுக்கு உள்ளே எலும்பு வளர்ச்சி அடைகிறது
[ நான்காம் மாதம் கர்ப்பிணி பெண்கள் எலும்பு வளர்ச்சிக்கு காரண கர்த்தா எனும் சூர்யனுக்கு உகந்த கோதுமை உணவுகளை அதிகம் பயன்படுத்த வேண்டும் ]
பின்னர் ஐந்தாவது மாதத்தில் “தோல்” வளர்ச்சியை அடைகிறது
[ ஐந்தாம் மாதத்தில் கர்ப்பிணிகள் சந்திரனுக்கு என நெல் மட்டுமே அல்ல பிறக்கும் குழந்தை  தோல் அழகு அடைய குங்குமப்பூ சேர்க்க வேண்டும் ]ஆறாவது மாதத்தில் கருவில் உள்ள சிசுவுக்கு ரோமங்கள் வளரும்
[ ஆறாவது மாதத்தில் கர்ப்பிணிகள்  சனிக்கு உகந்த நல்லெண்ணை அதிகமாக பயன்படுத்த வேண்டும்]
ஏழாம் மாதத்தில் குரு மூலமாக “சைதன்யம்” என்பது உண்டாகிறது ..

இப்படி ஒரு கருவின் வளர்ச்சிக்கு பல கிரகங்கள் வேலை செய்யும் பொழுது
சில அரை குறை ஆக ஜோதிடம் கற்று விட்டு
5ல் கேது புத்திர தோஷம்
5ல் ராகு புத்திர தோஷம் என கட்டுரைகளை எழுதுவதும்
அதுவும் இந்த முகநூல் கூகுள் ப்ளஸ் வாட்ஸ் அப் இன்ஸ்டாகிராம்
என பல இணைய தளங்கள் வந்த பின்னர் போலி கணக்கில் பல மோசடிகளும் கூட நடப்பதையும் கண்கூடாக பார்க்கிறோம்..

கொஞ்சம் பொது மக்கள் விழிப்படைய வைக்கும் வண்ணம் இக்கட்டுரையை செதுக்கி இருக்கிறேன்.. வாசிக்கும் நீங்களும் கொஞ்சம் ஷேர் செய்யுங்கள்..



கூடவே உங்கள் கருத்தை சொல்லுங்கள்..
இப்பொழுது இந்த கட்டுரையின் தலைப்பு ஆகிய
தாம்பத்திய சுகமும் மகப்பேறு எனும்
 குழந்தைகள் அமைவதும் ..
எனும் தலைப்பின் உள்ளே பயணிப்போம்..


பல ரீதியாக 1000 ஜோதிட காரணங்களை கண்டு பிடித்து பல நவீன கால பாராசரர்கள் என தன்னை புகழ்ந்து கொள்ளும் ஜோதிட மேதைகள் பல சொல்லி கொண்டாலும் நாம் பயணிக்க போவது ஜோதிட ரீதியாக அல்ல குழந்தை உற்பத்தி என்பது கூட மனிதன் செய்யும் ஒரு விவசாய அபிவிருத்தி தான் இதற்கு விவசாய பொருட்கள் எவ்வாறு நமக்கு துணை வருகிறது ???? இது தான் இக்கட்டுரையின் ஆய்வு பயணம் ஆகும் .



பொதுவாக
திருமணம் முடிந்த பின்னர் இருவரையும் இணைய வைப்பது
“சாந்தி முகூர்த்தம்” இந்த ஆண் பெண் இணைவை கூட ஏன் “சாந்தி முகூர்த்தம்” என பெயர் வந்தது எனும் ஆய்வில் போனால் கட்டுரை மிக நீண்டதாக அமைந்து விடும் என்பதால் பின்னர் அதை பற்றி பேசி பயணிப்போம்..


“சாந்தி முகூர்த்தம்” என்ற இனைவை செய்யும் பொழுது நம் பெரியோர்களால் அனுபவத்தின் மூலமாக நன்கு உணர்ந்து கொண்ட விஷயங்களை எல்லாம் வைத்து “சாந்தி முகூர்த்தம்” செய்விக்கப்படும் போது “மா- பலா-வாழை” என முக்கனிகளை தம்பதியினர் அறையில் வைப்பார்கள் ...


காரணம் ??

கருவுக்கு ஏழாவது மாதத்தில் உயிர் கொடுக்கும் குருவின் உகந்த நிறம் ஆகிய “மஞ்சள் நிறத்தின் காரகத்தன்மை” கொண்டதால் ஒரு கரு உருவாக இந்த முக்கனிகள் பெரும் பங்கு வைக்கிறது என முன்னோர்கள் அறிந்து வைத்து இருந்தார்கள் ...



சிறு வயதிலே நாம் இரட்டை வாழைபழம் என்பதை உட்கொள்ளும் பொழுது பெரியோர்கள் “ஏய் இரட்டை வாழைப்பழம்” சாப்பிட்டால் இரட்டை குழந்தைகள் பிறக்கும் என சொல்வார்கள்..

அதிலே ஒரு உண்மை தன்மை இருக்கிறது..

ஒரு கரு முட்டையை உடைக்க பயணிக்கும் “சுக்கிலம்” [விந்தணு பல கோடி செல்கள் உடன் கருவறையை நோக்கி பயணிக்கிறது .

செல்லும் வழியிலேயே  சில கோடிகள் செல்கள் மரணிக்கும் சில கோடி மட்டுமே கருவறைக்கும் செல்லும் ஆகினும் செல்லும் “செல்கள்” இறுதி வரை சென்று பயணித்து சென்று ஒரு கரு முட்டையை உடைத்தால் ஒரு குழந்தையும் இரு முட்டைகளை உடைக்கும் பொழுது இரு குழந்தைகளும் என “கருவறையில்” உருவாகும் ..

இப்படி பிரபஞ்ச உற்பத்தியை சிசு உருவாவதை ஒரு பெண்ணின் “கருவறை” தீர்மானிப்பதால் மட்டும் இங்கே “பெண் நட்சத்திரம்” முதலாக “திருமண பொருத்தம்” பார்க்கப்படுகிறது ..

இப்படி ஒரு சிசுவை உருவாக்க பயணிக்கும் “சுக்கிலம்” [ விந்தணுக்கள் ] ஒரு மணி நேரத்திற்க்கு 72 KM // PH வேகத்தில் பயணிக்கும் பொழுது “ராகுவின் வீரியத்துடன்” முன்புறத்தில் செல்கள் பாம்பு போன்ற தோற்றத்துடன் சென்று கரு முட்டையை “ஒரு கை பார்க்க வேண்டும்”” ஆனால் இயற்கை விவசாயம் இல்லாமல் போனதால் இன்று இந்த செல்களின் வேகம் சற்றே மட்டுப்பட்டு போய்விட்டது என்பதையும் யாராலும் மறுக்க இயலாது ..


மண்ணையும் இங்கே பரிசோதிக்க வேண்டும்
அதே போல விதைக்கப்படும் விதைகளும் இங்கே பரிசோதிக்க வேண்டும்..
விவசாயத்துக்கு மட்டுமே அல்ல.. மனித உற்பத்திக்கும் இதே போல தான் எப்படி விவசாய விளைச்சலை அதிகப்படுத்த நமக்கு “உரங்கள்” தேவையோ அதே போல தான் “உரங்கள்” இந்த மனித உற்பத்தி எனும் விவசாயத்திற்கு தேவை ஆகிறது...


அப்படி உரங்கள் ஆக முன்னோர்கள் கண்டறிந்த சூட்சுமம் தான் “வாழைபழம்”
சிசுவை உருவாக்க பயணிக்கும் “சுக்கிலம்” [ விந்தணுக்கள் ] ஒரு மணி நேரத்திற்க்கு 72 KM // PH வேகத்தில் பயணிக்கும் பொழுது அதன் வீரியம் குறைந்து போய் விடக்கூடாது என்பதற்க்காக  “உரங்கள்” போல ஆண் பெண் இணையும் நாளில் இதை இரவு நேர சாந்தி முகூர்த்த விருந்துக்கு பயன்படுத்தினார்கள்.. நம்ம ஆளுங்க அன்றைய ஒரு இரவு உடன் உரம் எனும் “வாழைப்பழத்தை” மறுநாளும் பயன்படுத்தாமல் போய் பின்னர் ஒரு இரு ஆண்டு கழித்து “மகப்பேறு மருத்துவரை” தம்பதியினர்கள் சந்திக்க போய் விடுகிறார்கள்..


அங்கே உள்ள “மகப்பேறு மருத்துவரோ” இவர்களுக்கு முடிந்தவரை குழந்தை அமையாமல் இருப்பதற்க்கு என்றே மாத்திரை மருந்துக்களை கொடுத்து அவர்களை கொஞ்சம் நாள் அலைக்கழித்த பின்னர் சோதனை குழாய் குழந்தைக்கு என  “டெஸ்ட் டியூப் பேபி”  என்ற வார்த்தைகள் மூலமாக தம்பதியினர் வசதியை பொறுத்து ரூ 5 லட்சம் முதல் 20 லட்சம் வரை “ஆட்டையை போட்டு விடுகிறார்கள்..


தயவு செய்து திருமணம் ஆகி ஒரு சில ஆண்டுகள் குழந்தை அமையாத தம்பதிகள் முடிந்தவரை “முன்னோர்கள் வகுத்து கொடுத்த சில இயற்கை உரங்களை பயன்படுத்தி பார்த்து விட்டு வேறு முயற்சிகளுக்கு செல்லுங்கள் ..

இவைகளை எல்லாம் செய்தாலும் கொஞ்சம் ஜோதிட ரீதியான பரிகாரங்களு,ம் காலம் கடந்து குழந்தைகள் அமைய செய்ய வேண்டியும் இருக்கும் அதற்க்கு கொஞ்சம் உங்களுக்கு நன்கு அறிமுகம் ஆன ஜோதிடர்களை அல்லது உங்கள் நண்பர்கள் அறிமுகம் மூலமாக ஒரு ஜோதிடரை அணுகுங்கள் ..


இங்கே முகநூலில் வாட்ஸ் அப்பில் கூகுளில் பல ஜோதிடர்கள் Astro என போட்டு கொண்டு போலியாக நடமாடும் பலரும் வந்து விட்டார்கள் என்பதையும் சற்றே நினைவில் கொள்ள வேண்டும் ..

இத்துடன் இந்த கட்டுரையை முடிக்கிறேன் ..

அடுத்த கட்டுரையில்

“திருமணம் தாமதம்” அடைவதற்க்கும்
 “குழந்தைகள்” இல்லாமைக்கும்”” செய்யப்படும் பரிகாரங்கள் எல்லாம் பலிக்குமா??? ஆம் பலிக்கும் பலிதம் ஆகும் ..
எம் அனுபவத்தில் பரிகாரம் பல முறை வென்று உள்ளது. 

அதை அடுத்த பதிவில் பார்க்கலாம் .. இதை வாசித்த அனைவரும் இதை பகிர வேண்டுகிறேன் ..
பெருந்துறையில் இருந்து
Astro Senthil Kumar
Wats App:-+91  9843469404
Email:- astrosenthilkumar  


 Image result for கைக்குழந்தை