Saturday, 27 June 2015

மாசியில் மனை கோள் செய்யலாமா???

வாஸ்து நித்திரை விட்டு எழும் காலம் !!!!!
பொதுவாக அனைத்து ஜோதிடர்களும் வாஸ்து பூஜைக்கு நேரத்தை எப்படி கணக்கீடு பஞ்சாங்களின் எழுதி கொண்டுள்ளன என்பதை பற்றி அறிந்து இருக்கிறார்களா எனில் கொஞ்சம் சந்தேகமே ….அதை எப்படி கணக்கியல் செய்யலாம் என்பதை பற்றிய இப்பதிவு !!!!!!
“சித்திரைமா தம்பத்துத் தேதிதன்னிற் சிறந்த நாழிகையைந்திற் றெளிவதாகும் .
மத்ததொரு வைகாசி யிருபத்தொன்றில் வருமெட்டு நாழிகையில் விழிப்பதாகும்
சத்தியா யாடியைப் பசியிலுந்தான் தக்க பன்னோர் தேதியில் நாழிகையிரண்டாம் பத்தியா யாவணியி லாறாந்தேதி பகரிருபத் தொன்றின்மேல் விழிப்பான்
கார்த்திகைமா தந்தனிலே யெட்டாந்தேதி கருத்தாய் பார் நாழிகையும் பத்தாகும் சீர்த்தியுள்ள தைமாதம் பன்னிரண்டாந் தேதியதில் நாழிகையு மெட்டின்மேலாம் ஆர்த்தியுள்ள கணிதவிதி மாசிமாதம் அறிகுவா யிருபதாந் தேதி தன்னில் பார்த்திபனே பகலெட்டு நாழிகைக்கு படுக்கை விட்டெழுந்திருப்பான் வாஸ்து தானே !!
ஆகையா லந்தநா ழிக்கு மேலே அடவாக வொரு முகூர்த்த வேளை தன்னில் சோகையிலா வாஸ்துவும் நித்திரையை விட்டுச் சுகமாக வெழுந்திருப் பனந்நேரத்திற் பாகமுடனந்த க்காலத்தில் நாட்கள் பாங்குடனே தான் பார்த்து மனைகோல் செய்தால் தேகமது அழியாமல் வீடுகட்டிச் செல்வமொடு மனை மக்களுடன் வாழ்வானே “”
——சுந்தரானந்தர் அருளி செய்த “ஜோதிட முகூர்த்த சிந்தாமணி 300″ —+பாடல் எண் ;-227-229
இப்பாடல் படி
“சித்திரை 10 ம் தேதி 5 நாழிகை அளவில் (சூர்ய உதயம் பின்னிட்டு 2மணி நேரத்தை அந்தந்த ஊருக்கு தள்ளி கணக்கியல் செய்யவும் )
வைகாசியில் 21 ம் தேதி 8 நாழிகை (சூர்ய உதயம் முதல் 3-12 மணி நேரத்தை தள்ளி )
ஆடி 11ல் 2 நாழிகை தள்ளி (சூர்யோதம் பின் 0-48 நிமிடங்கள் தள்ளி )
ஆவணியில் 6ம் தேதி 21 நாழிகை (சூர்யோதம் முதல் 8-24 நிமிடங்கள் தள்ளி )
இது மாலை நேரத்தில் மட்டுமே வரும்
ஐப்பசி மாதத்தில் 11ம் தேதி 2 நாழிகை (சூர்யோதம் முதல் 0-48 நிமிடங்கள் கழித்து )
கார்த்திகை 8ம் தேதி 10 நாழிகை (சூர்யோதம் முதல் 4-00 மணி நேரம் கழித்து )
தை மாதம் 12ம் தேதி 8 நாழிகை (சூர்யோதம் முதல் 3-12 நிமிடங்கள் கழித்து )
சர்ச்சைக்குறிய
மாசியில் 22 ம் தேதி 8 நாழிகை (சூர்ய உதயம் முதல் 3-12 மணி நேரத்திற்கு பின் )
குறிப்பு ;-பாடலில் “மாசிமாதம் அறிகுவா யிருபதாந் தேதி (20மண் தேதி )தன்னில் “என்றே சொல்கிறது ….ஆனால் இப்போது பஞ்சாங்கத்தில் 22 மண் தேதியை தொடர்ந்து அச்சிட்டு வருகிறார்கள் ……
(இதைப்பற்றிய கருத்து கேட்பு பஞ்சாங்களின் கணிதர்களை கேட்க மாசியில் 22 தான் சரியான தேதி என்கிறார்கள் .. )
எம்முடைய ஆய்வில் சூர்யன் கும்பத்தில் ராகு நட்சத்திரம் சதயம் கடந்து குருவின் நட்சத்திரம் ஆன “பூரட்டாதியில்” பிரவேசிக்கும் காலத்தை தான் “சுந்தரானந்தர் “சொல்லி இருக்கிறார் என்பதும் சமயங்களில் பிரவேசம் ஒரிரு நாட்கள் முன்பின் வரும் என்பதால் பஞ்சாங்கங்கள் மாசி 22 ஐ தேர்வு செய்து இருக்கிறார்கள்…
மனதில் உறுத்தல் இல்லாமல் செய்தால் மாசியில் மனைகோள் எனும் “வாஸ்து பூஜை “செய்யலாம்..
“எப்படி மாசியில் மனை கோள் ஆகாது” என முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்களே என்று மனதில் தோன்றலாம் .. அதே முன்னோர்கள் “தையில் தலை [தலைச்சன் பிள்ளை எனும் மூத்த சகோதரத்திற்க்கு ] கல்யாணம் ஆகாது “என்கிறார்கள்..உண்மையில் “ஜேஷ்டா புத்ர-புத்ரிகளுக்கு” [குடும்பத்தில் மூத்த சகோதர -சகோதரிக்கு ] ஜேஷ்டா மாதம் எனும் “ஆனியில் தான் “ விவாஹம் செய்யக்கூடாது .அதுபோலவே தான் இந்த “மாசியில் மனைகோள் ஆகாது “என சொன்னதும் சித்தர் பாடல் படி உறுதியாக மாசியில் மனை கோள் செய்யலாம் …
இது தொடர்ந்து வருடா வருடமும் பஞ்சாங்கமும் “வாஸ்து நித்திரை விட்டு எழும் நேரத்தை கொடுத்து வருகிறது ……..
ஒரு ஜோதிடராக இருப்போர்களால் உடனடியாக ரெடிமேட் வாஸ்து அட்டவணை 50+ ஆண்டுக்கும் மேலாக இந்த பாடலை கொண்டு கணிக்கிட முடியும் ……ஜோதிட நண்பர்கள் முடிந்தளவுக்கு சிரத்தையுடன் பழைமையான ஜோதிடப்பாடலை தேடுங்கள் உங்களுக்கு எவ்வாறான கேள்விக்கும் விடைகள் உண்டு !!!!!
இதர விபரங்கள் நிஜமான வாஸ்து நாட்கள் பற்றிய தாம்பரம் பாலு சரவண சர்மா அவர்களின் இணையத்தில் காணலாம் !!
http://www.prohithar.com/images/true-sayana-vasthu-dates.jpg
என்றும் ஜோதிடப்பணியில் !!!!!
ஶ்ரீவீரபத்ர ஜோதிட மையம்
Astro Senthil Kumar ……

Saturday, 11 April 2015

புத்தாடைகள் அணிய உகந்த நாட்கள்

பொதுவாக எல்லா நாளும் தான் விடிகிறதுஎல்லா நாளும் தான்உணவு உண்கிறோம் [ உண்ண உணவு ]
எல்லா நாளும் வீடு கட்டுவது இல்லை [ இருக்கஇருப்பிடம் ]
எல்லா நாளும் புது உடை அணிவதில்லை [ உடுக்க உடை ]

இன்று எந்நாளில் புது ஆடைகளை அணிவது என்பதை பற்றி கொஞ்சம் கவனிப்போம் !!!


சாஸ்திரங்களில் வகுக்கப்பட்டதே தவிர இதில் புதுமைகளை புகுத்தி எதையும் சொல்லவில்லை என்பதை மனதில் கொண்டு தொடருங்கள் !!


புது ஆடை அணிய பொதுவான நல்ல நடசத்திரம் உள்ள நாட்கள் :-

1] அசுவினி , 2] ரோஹிணி, 3] புனர்பூசம், 4] பூசம், 5] உத்திரம், 6] ஹஸ்தம்,  7] சித்திரை, 8] சுவாதி, 9] விசாகம், 10] அனுஷம், 11] உத்திராடம்,12] அவிட்டம், 13] உத்திரட்டாதி ,14] ரேவதி

ஆகிய 14 நடசத்திரம் கொண்ட நாட்கள் ஆகும்..

கிழமையில் புதன் வியாழன் வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் மிக சிறப்பு

ஞாயிறு ,திங்கள் சுமாரான நாட்கள்
செவ்வாய் , சனி கிழமையில் புது ஆடை அணிவது மிகுந்த சிரமங்களை தரும்
ஒவ்வொரு நட்சத்திர நாளில் புது ஆடைகளை அணிவதால் வரும் பலாபலனை கொஞ்சம் இப்போது கவனிப்போம்..

1] அசுவினி :- அரசாங்க கெளரவம் கிட்டும் [ அரசு ஊழியர் கவனிக்க ]
2]   பரணி :-  மனைவிக்கு தீமை தரும்3] கிருத்திகை:- உடலில் எரிச்சல் ஏற்படும் [ கோடைகாலம் கவனிக்க ]
4] ரோஹிணி:- சகல லாபம் [ சிரமத்தில் இருப்போர் கவனிக்க ]
5] மிருகசீர்ஷம்:- எலி கடிக்கும் [ ஆடைகளை மட்டுமே ]
6] திருவாதிரை:- மரண கண்டம் ஏற்படுத்தும்7] புனர்பூசம்:- தனதான்ய விருத்தி [ வறுமையில் இருப்போர்களுக்கு நன்மை ]
8] பூசம்:- சகல சமத்து கொண்டு வாழ்வார்கள் [ சுபிட்ஷம் ]
9] ஆயில்யம்:- நோய் நொடியும் கடனும் சேரும்10] மகம்:- மரணத்திற்க்கு ஒப்பான கண்டம் வரும்11] பூரம்:- நோயும் தொல்லைகளும்12] உத்திரம்:- மேலும் மேலும் புது ஆடைகள் சேரும் [பெண்கள் கவனிக்க]
13] ஹஸ்தம்:- இனிமையான வாழ்வும் சுகமும் [ தம்பதியினர் இடையே சண்டை நடக்கும் குடும்பத்தில் இந்நாளில் இருவரும் அணியலாம் ]
[ இங்கே இன்னும் ஒரு சிறு குறிப்பு சூடாமணி உள்ளமுடையான் நூல் என நினைக்கிறேன் ..பிரிந்த தம்பதிகள் அஸ்த நட்சத்திரத்தில் மீண்டும் இணைத்து வைத்தால் பிரிவினை இல்லாமல் வாழ்வார்கள் என சொல்கிறது ]
14] சித்திரை:- பலதரப்பட்ட புத்தாடைகள் கிடைக்கும் [ தாய்மார்கள் கவனிக்க ]
15] சுவாதி:- சிறந்த உணவுகள் கிடைக்கும் [ வறுமையில் இருப்போர்கள் கவனிக்க ]
16] விசாகம்:- மனசந்தோசம் தரும் [ நிம்மதி இல்லாமல் இருப்போர் கவனிக்க]
17] அனுஷம்:- உறவினரால் நல்ல லாபம் தரும்.. [மருமகன்கள் கவனிக்க ]
18] கேட்டை:- ஆடைகள் கிழியும் [உண்மை ]
19] மூலம்:- தான்ய நாசம் அடையும் [ விவசாயிகள் இந்நாளை தவிர்க்கவும் ]
20] பூராடம்:- நோய் நொடியை தரும்..
21] உத்திராடம்:- பற்பல புது ஆடைகள் கிடைக்கும்22] திருவோணம்:- கண்நோய் அடையும்23] அவிட்டம்:- தான்ய விருத்தி அடையும் [ விவசாயிகள் இந்நாளில் புது ஆடைகள் அணியலாம்நன்மை ]
24] சதயம்:- விஷ ஜந்துக்கள் அபாயம் வரும்25] பூரட்டாதி:- அரசாங்கத்தால் பயம் வரும் [ வழக்கில் இருப்போர் கவனிக்க ]
26] உத்திரட்டாதி:- புத்ரலாபம் கிடைக்கும் [ குழந்தை இல்லாதவர்கள் கவனிக்க ]
27] ரேவதி:- உயர்ந்த பொருள் ஆதாயம் [ சகல மக்களுக்கும் உகந்தது ]

அதுபோக திதிகளை கவனிப்போம்

துவிதியை, திருதியை ,பஞ்சமி, சப்தமி ஆகிய நாட்கள் புது ஆடை அணிய நன்மை தரும்

சதுர்த்தி மற்றும் நவமி திதி, சதுர்தசி , அமாவாஸை ஆகிய திதிகள் புது ஆடை அணிவதை தவிர்க்கவும் ,

கிழமைகள் தரும் பலன்கள் பின்வருமாறு :-

ஞாயிறு :- உடல் நோய் வரலாம்..

திங்கள்:- துயரம் [புது ஆடை கண்ணீரால் நனையும்..

செவ்வாய்:- உடையில் தீயினால் சேதம் தரும்..

புதன்:- பலவகை ஆதாயங்கள் அடையலாம்..

வியாழன்:- சிறப்பான பலன்கள் தரும் அதுவும் குளிகை காலம் காலை 9 முதல் 10-30 ஆடைகள் பெருகும் [ வாகனம் எடுக்கவும் குளிகை காலம் சிறப்பு ஆகும் வாகனம் பெருகும்]


வெள்ளி: நல்ல பலாபலனை தரும்சனி:- பெரும் துயரம் வந்து சேரும்

இந்த பதிவினை செய்ய ஒரு சம்பவம் காரணம் ஆகும்..
இரு மாதம் [17-01-2015 அன்று சனிக்கிழமையும் கேட்டையும் ]  முன்பு ஒரு திருமண பெண் இரவில் வரவேற்புக்கு அணிந்த புது ஆடை மணமகள் அறை கதவில் இருந்த ஆணி கிழித்து விட்ட்துமிகுந்த வருத்தம் அந்த பெண்ணுக்கு சில நாட்கள் முன்புகால ப்ரகாசிகைநூலில் வாசித்த செய்தி கண்டு அந்த பெண்ணுக்கு

நீங்கள் அணிந்தது சனிக்கிழமை கேட்டை நட்சத்திரம் கூடிய நாள் ஆகும் . கேட்டை ஆடையை கிழித்தது..சனிக்கிழமை மனத்துயரம் தந்தது.. இனி வருந்த வேண்டாம்

என ஆறுதல் சொன்னேன் .. ஆடை கிழிந்த மனதுயரம் நம் ஆறுதல் தரும் வரை அந்த பெண்ணுக்கு கடந்த மூன்று மாத காலத்திற்க்கு சனிகிழமை கேட்டை மனதுயரம் தந்தது…..ஆகவே இதை வாசிக்கும் நண்பர்கள் கொஞ்சம் நாட்களையும் நட்சத்திரமும் திதியை அனுசரித்து புது ஆடைகளை அணியுங்கள்நன்றி
என்றும் ஜோதிட பணியில்!!
ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம்
புதுபஸ் நிலையம் பின்புறம்
 பெருந்துறை   -638 052
ஜோதிடர்A .செந்தில் குமார் 
செல்: +91 98427 69404
             +91 98434 69404