Thursday, 28 November 2013

வருஷ ஜாதக கணிதமுறை [[தஜகநீலகண்டீயம்]

தஜகநீலகண்டீயம் படி வருஷ ஜாதகம் கணிக்கும் முறையானது!

ஜனன சமயம் முதல் சென்ற வருஷம் வரை எத்தனை ஆண்டுகள் ஆயின என்று கணக்கிடவும், பிறகு வ்ருஷம் ஒன்றுக்கு 1 நாள் வீதம் கணக்கிடவும்,அதை இப்போது சென்ற வருஷத்துடன் கூட்டவும், இது பக்கம் இருக்கட்டும்,  
பிறகு அது வரை சென்ற வருஷங்களை 21 ஆல் பெருக்கி 60 ஆல் வகுக்க மீதிவருவது மணி நிமிஷம் முதலியது ஆகும், அத்தோடு ஜாதகன் பிறந்த நாளன்று கிழமை நாழிகை விநாழிகையை கூட்டவும்,அப்படி கிடைக்கும் மொத்தத்தை 7 ஆல் வகுக்க மீதிவருவது அந்த வருஷத்தின் ஆரம்ப தினமும் நேரமும் ஆகும், 
உதாரணம்: வருஷ ஜாதகத்தை கணிக்க பலகாலமாக செய்து வரும் முறையானது சூர்யசித்தாந்த அடிப்படையானது.
சூர்யசித்தாந்தப்படி ஒருவருஷம் என்பது:-365 நாட்களும் 15 நாழிகையும் 31 விநாழிகையும் 30 தர்பரை கொண்டது ஆகும்.
இதை ஏழால் வகுத்து ஈவு போக நின்றது 1 நாள் 15 நாழிகை 30 தர்பரை ஆகும், ஒருஜாதகன் 08/08/2012 ம் வருஷம் பிறந்ததாக வைத்து கணக்கிடுவோம், அவரது 2013 ம் வருஷத்திய பிறந்தநாளை கண்டுபிடிக்க ,மேற்படி வருஷத்துடன் 1 நாள் 15 நாழிகை 30 பரையைக்கூட்ட வேண்டும், இந்த ஜாதகரின் பிறந்த நாள் 09/08/2013 ல் வரும் , அத்தோடு அவர்பிறந்த நேரத்தை கண்டுபிடித்து  [ நாழிகைரீதியாக] அத்தோடு 15 நாழிகை 31 விநாழிகையை கூட்ட வேண்டும் 
இதை கண்டுபிடிக்க நீலகண்டர் சில சுலபமான வழிகளை எழுதி இருக்கிறார்.     
கிழமைகளுக்கு ஒவ்வொரு எண் தந்து இருக்கிறார்,
ஞாயிறு:1 
திங்கள் ;2
செவ்வாய்:3
புதன்:4
வியாழன்;5
வெள்ளி:6
சனி;7 [இதை எண்கணிதத்துடன் போட்டு குழம்ப வேண்டாம். இது நாட்களுக்கு உண்டானது மட்டுமே]
இதில் தஜக முறைப்படி ஒருபட்டியல் & நவீன விஞ்ஞான முறைப்படி ஒரு பட்டியல் நாளை மறுநாள் இணைக்கப்படும், காரணம் சூர்யசித்தாந்தப்படி 365 நாட்களும் 6 மணி 12 நிமிஷம் ஆகும், ஆனால் தற்போதைய திருக்கணிதப்படி 365 நாட்களும் 6 மணி 12 நிமிஷம் 36 செகண்டு ஆகும், அதனால் வருஷத்திற்க்கு 3 நிமிஷம் 24 செகண்ட் வித்தியாசம் ஏற்ப்படுகிறது, திருக்கணிதம் தான் சரி என தூரதிருஷ்டி கருவிகள் மூலம்  விஞ்ஞானமுறைப்படி இப்போது கண்டுபிடித்து இருக்கிறார்கள். அதனால் இருமுறையும் நாளை மறுதினம் பதியப்படும்,  
ஆனால் இதை இதன் ஆசிரியர் சுமார் 500 ஆண்டுக்கு முன்னரே கணக்கீடு செய்தது தான் நம்மை பிரமிக்க வைக்கிறது,

நான் இதை கணிக்கீடு செய்ய முதலில் மிகுந்த சிரமமாகத்தான் இருந்தது, ஆனால் கணக்கிட கணக்கிட சற்று சுலபமாக இருக்கிறது, இதை நமது ஜோதிட நண்பர்கள் சற்று நுணுக்கமாக படிக்கவும்,இதன் படி பலன் காண்பது என்பதை பற்றி கொஞ்சம் கொஞ்சமாக எழுதப்போகிறேன், இக்கணிதமுறை மிகவும் நுணுக்கமாக எனக்கு வருஷ ஜாதகம் கணித்து தாருங்கள் எனும் வாடிக்கையாளருக்கு பயன்படும்,

குறிப்பு:-நான் எனது என் குடும்பத்தார் என [ சுயநலம்] கணக்கிட்டீர்கள் எனில் கணிப்பு வராது, அடியேன் இதுவரை ஜோதிடம் பயின்ற பின்னர் எனது ஜாதகம் குழந்தைகள் ஜாதகம் எதையும் கணிப்பதும் இல்லை.மற்ற நண்பர்கள் இடம் ஆலோசனையும் கேட்பதில்லை, அப்படி ஒருமன பக்குவம் வந்தால் தான் நீங்களும் புலமை அடைய முடியும் என்பதே நிதர்சனமான உண்மை!
என்றும் ஜோதிடப்பணியில் 
ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம், பெருந்துறை

Wednesday, 27 November 2013

வருஷ ஜாதகத்தை கணித்தவர்


  “தஜக நீலகண்டீயம்” இதன் ஆசிரியர் நீலகண்டர் சமஸ்கிருத பாஷையிலும் அரபி&பார்ஸி  பாஷையிலும் நல்ல தேர்ச்சி பெற்றவர்.

இவர் கார்க்கிய கோத்திரத்தில் பிறந்த பிராமணர் , தனது 30 வயதில்   “தஜக நீலகண்டீயம்”என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார்,இவர் தந்தை மூகூர்த்த சாஸ்த்திரத்தில் மிகவும் பிரசித்தி பெற்றவர், 

விதர்ப்ப தேசத்தில் தர்மபுரி என்ற ஊரில் ஆனந்த தெய்வக்ஞர்[தந்தை] பத்மா [தாயார்] ,நீலகண்டருடன் பிறந்தவர் ஸ்ரீ ராம தெய்வக்ஞர் இவரும் ஜோதிடத்தில் தேர்ச்சி பெற்றவர், 

நீலகண்டர் பிறந்தது கி.பி 1537 ம் வருஷம் என ஆண்டு பிறந்தவர், கி.பி 1567 ல் தான் இந்நூலை எழுதி இருக்கிறார், இதை இவர் எழுதிய போது இவர்தந்தை உயிருடன் இருந்துள்ளார், இவர் “தஜக நீலகண்டீயம்”எழுதும் போது மூன்று பாகங்களாக பிரித்து எழுதி அதில் பல இடங்களில் அரபி பார்ஸி வார்த்தைகளை பயன் படுத்தி இருக்கிறார், பல அறிய தகவல் நிறைந்தது இப்புத்தகம்

குறிப்பு:- இதை 02/07/1921 ல் பிறந்த புதுக்கோட்டை சமஸ்தான திருமணஞ்சேரியில் பிறந்த P.S.ஐயர் 1993 ல் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட முயற்சி செய்து அது வெளியிடப்படாமல் போய் அவரின் காலத்திற்க்கு பின் தான் வெளிவந்தது, 1000 பிரதிகளே முதல் பதிப்பு [அதில் ஒன்று அடியேனிடம் உள்ளது] 

தொடர்ந்து நான் அதில் சொல்லப்பட்ட விஷயங்களை புத்தகமாக வெளியீடு செய்வது சட்டப்படி குற்றம் என்பதால் சிறு சிறு ஜோதிடத்திற்க்கு தேவையான பகுதிகளை பதிந்தால் அதை சமஸ்கிருதத்தில் எழுதிய “நீலகண்டருக்கும்” தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட “P.S.ஐயர்” அவர்களின் நம்மால் செலுத்தப்படும் “குருமரியாதை” ஆகும். ஜோதிடர்களுக்கு ஜோதிட ஆய்வாளர்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கும் என கருதுகிறேன் , ஜோதிட நண்பர்கள் தனது கருத்தை சொன்னால் சற்று நல்லது,

Monday, 25 November 2013

கோச்சார சூரியன் பலன் தரும் நிலை

நவகிரஹ வட்டத்திற்க்கு சூர்யனே பிரதானம் !
அவர் தன் சஞ்சார நிலையில் பலன் தருவது பின்வருமாறு;-
ஜெனன கால ஜாதகத்தில் சூர்யன் தான் இருக்கும் இடத்திற்க்கு
வரும் காலம் ஒரு வருஷம் முடிவை குறிக்கும் ,
 அக்கால கட்டத்தில் ஜாதகரின் மனநிலை உற்சாகமாக இருக்கும் ,
இக்காலகட்டத்தில் புது முயற்சி வெற்றியை தரும்,
கடன் பெற இக்காலகட்டம் உகந்தது,
வியாபாரமுயற்சி கைகொடுக்கும் நிலை வரும்,

சூரியன் ஜாதகத்தில்தான் இருந்த இடத்துக்கு மூன்றில் வரும் காலம்
நமக்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது போல சுலபமாகும்,
உழைத்து முன்னேறக்கூடிய கால கட்டம் ஆகும்,

அதே சூரியன் கோச்சாரத்தில் பிறந்த ஜாதகத்தில் தான் இருக்கும் இடத்துக்கு நான்கில் அல்லது பத்தில் வரும் காலம் கார் வைத்து டிரைவர் வைத்து இருப்பவர்கள் கூட தன் டிரைவரிடமே கடன் வாங்கும் சூழல் வந்து சேரும்,அப்படி சூழ்நிலை அமையும் மாதிரி பணக்கஷ்டமும் உண்டாக்கும்,

அதே சூரியன் ஐந்திலோ ஒன்பதிலோ சஞ்சாரம் செய்யும் காலகட்டம் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் மனைவியுடன் “உறவு” வலுப்பெறும்,
நண்பர் உதவிகள் சமயத்துக்கு கிடைக்கும் காலகட்டம் ஆகும்,

ஜென்ம சூரியனுக்கு ஏழில் சூரியன் கோச்சார ரீதியாக வரும் போது வேண்டாத “நீசஸ்திரி” தொடர்ப்பால் துன்பம் வந்து சேரும்,
சிலநேரம் விதவைகளால் கலகம் வந்து சேரும்,
வியாபாரத்தொடர்ப்புகள்  வில்லங்கம் தரும் பின்னர் சரியாகும்,

குறிப்பு;- இது பொதுவான பலனே தவிர உங்கள் தனிபலன் அல்ல!
உங்கள் தனிப்பலனுக்கு தகுந்த ஜோதிடரை அணுகவும்,காரணம் எங்களை போன்ற ஜோதிடர்களுக்கு நேரில் பலன் சொன்னால் மட்டுமே
“பலன் உண்டு”,தவிர இதுபோல் ஜோதிட குறிப்புகள் அனைத்தும் “ட்ரைலர்”
மட்டுமே- “மெயின் பிக்சர்’ இது அல்ல!
இது “ரீலும்” அல்ல! “ரியல்” தான்

என்றும் ஜோதிட சேவையில்!
ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம்,
பெருந்துறை- 638 052

செல்: 98427 69404 [ ஏர்செல்]
செல்; 98434 69404 [வோடாபோன் ]

Sunday, 24 November 2013

பிறந்த நாளை கொண்டாடுவது எப்படி?

பிறந்த நாளை கொண்டாட நாம் அனைவரும் முதலில் தேர்ந்து எடுப்பது நம் தமிழ்முறைபடி என 

Saturday, 23 November 2013

வாரசூலை என்பது என்ன ?

11-07-2013, 12:47 PM

வாரசூலை என்பதின் பொருள் என்ன ?பொதுவாக நாம் ஏதேனும் ஒருகாரியமாக புதுவிஷயமாக செல்வது என்றால் அன்று நாம் செல்லும் திசையில் வாரசூலை உள்ளதா? என்பதை பார்த்து தான் கார்யமுயற்ச்சி செய்வோம் , இது நமது ஜோதிட கலாச்சாரம், நான் புதியதாய் ஜோதிடம் பயில ஆரம்பித்த போது வாரசூலை என்பதின் பொருள் குறித்து நானும் பல அனுபவ ஜோதிடர்களை அணுகி கேட்ட போது பலரிடம் இதுபற்றி “ எதுவும் தங்களுக்கு தெரியாது” என்றும் “ பஞ்சாங்கத்திலேயே வாரசூலை எந்தநாளுக்கு எத்திசை சூலம் என்பது போட்டிருக்குமே? அதை பார்த்து பலன் சொல்லுங்க” என்றனர்,

ஆனால் எனக்கு வாரசூலம் எப்படி உருவானது என்பதை அறிய ஆவல் எற்ப்பட்ட்து!
பின்னர் பலநூல்கள் தேடி நான் அறிந்து கொண்ட விஷயம் என்னவென்றால்
“இந்த உலகை ஆளும் சிவபெருமான் தன் சூலாயுத்தை ஓய்வுக்கு கொடுக்க சற்று நேரம் தரையில் வைத்து வைப்பார்” அப்போ நாம் அதை எதிர்கொண்டு போக்க்கூடாது “எனபதால் தான் வார[ தினம் ] சூலம் வாரசூலை உருவானது! சிவனின் சூலம்



ஞாயிறு = மேற்கு

திங்கள் = கிழக்கு

செவ்வாய்= வடக்கு

புதன்= வடக்கு

வியாழன்= தெற்கு

வெள்ளி= மேற்கு

சனி= கிழக்கு


பின் திரும்ப மேலிருந்து கணக்கிடவும்’ ’சிவனின் சூலம் கூட காலையில் 5 நாழிகை தான் பூமிமீது வைப்பார் , 2 மணி நேரம் மட்டுமே காலையில் வாரசூலை கணக்கிடவும், பின் 2 மணிநேரத்திற்க்கு மேல் மேற்கொண்டு அந்த திசையில் பயணிக்கலாம்’ என்பதே பொருள்


இதை ஷேர் பண்ணிய Facebook+1 for Brahmins > Friendship-Gossip-Social > Social > Groups and Talks > News & Knowledge to Share ஆகியோருக்கு நன்றி