Saturday, 11 April 2015

புத்தாடைகள் அணிய உகந்த நாட்கள்

பொதுவாக எல்லா நாளும் தான் விடிகிறதுஎல்லா நாளும் தான்உணவு உண்கிறோம் [ உண்ண உணவு ]
எல்லா நாளும் வீடு கட்டுவது இல்லை [ இருக்கஇருப்பிடம் ]
எல்லா நாளும் புது உடை அணிவதில்லை [ உடுக்க உடை ]

இன்று எந்நாளில் புது ஆடைகளை அணிவது என்பதை பற்றி கொஞ்சம் கவனிப்போம் !!!


சாஸ்திரங்களில் வகுக்கப்பட்டதே தவிர இதில் புதுமைகளை புகுத்தி எதையும் சொல்லவில்லை என்பதை மனதில் கொண்டு தொடருங்கள் !!


புது ஆடை அணிய பொதுவான நல்ல நடசத்திரம் உள்ள நாட்கள் :-

1] அசுவினி , 2] ரோஹிணி, 3] புனர்பூசம், 4] பூசம், 5] உத்திரம், 6] ஹஸ்தம்,  7] சித்திரை, 8] சுவாதி, 9] விசாகம், 10] அனுஷம், 11] உத்திராடம்,12] அவிட்டம், 13] உத்திரட்டாதி ,14] ரேவதி

ஆகிய 14 நடசத்திரம் கொண்ட நாட்கள் ஆகும்..

கிழமையில் புதன் வியாழன் வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் மிக சிறப்பு

ஞாயிறு ,திங்கள் சுமாரான நாட்கள்
செவ்வாய் , சனி கிழமையில் புது ஆடை அணிவது மிகுந்த சிரமங்களை தரும்
ஒவ்வொரு நட்சத்திர நாளில் புது ஆடைகளை அணிவதால் வரும் பலாபலனை கொஞ்சம் இப்போது கவனிப்போம்..

1] அசுவினி :- அரசாங்க கெளரவம் கிட்டும் [ அரசு ஊழியர் கவனிக்க ]
2]   பரணி :-  மனைவிக்கு தீமை தரும்3] கிருத்திகை:- உடலில் எரிச்சல் ஏற்படும் [ கோடைகாலம் கவனிக்க ]
4] ரோஹிணி:- சகல லாபம் [ சிரமத்தில் இருப்போர் கவனிக்க ]
5] மிருகசீர்ஷம்:- எலி கடிக்கும் [ ஆடைகளை மட்டுமே ]
6] திருவாதிரை:- மரண கண்டம் ஏற்படுத்தும்7] புனர்பூசம்:- தனதான்ய விருத்தி [ வறுமையில் இருப்போர்களுக்கு நன்மை ]
8] பூசம்:- சகல சமத்து கொண்டு வாழ்வார்கள் [ சுபிட்ஷம் ]
9] ஆயில்யம்:- நோய் நொடியும் கடனும் சேரும்10] மகம்:- மரணத்திற்க்கு ஒப்பான கண்டம் வரும்11] பூரம்:- நோயும் தொல்லைகளும்12] உத்திரம்:- மேலும் மேலும் புது ஆடைகள் சேரும் [பெண்கள் கவனிக்க]
13] ஹஸ்தம்:- இனிமையான வாழ்வும் சுகமும் [ தம்பதியினர் இடையே சண்டை நடக்கும் குடும்பத்தில் இந்நாளில் இருவரும் அணியலாம் ]
[ இங்கே இன்னும் ஒரு சிறு குறிப்பு சூடாமணி உள்ளமுடையான் நூல் என நினைக்கிறேன் ..பிரிந்த தம்பதிகள் அஸ்த நட்சத்திரத்தில் மீண்டும் இணைத்து வைத்தால் பிரிவினை இல்லாமல் வாழ்வார்கள் என சொல்கிறது ]
14] சித்திரை:- பலதரப்பட்ட புத்தாடைகள் கிடைக்கும் [ தாய்மார்கள் கவனிக்க ]
15] சுவாதி:- சிறந்த உணவுகள் கிடைக்கும் [ வறுமையில் இருப்போர்கள் கவனிக்க ]
16] விசாகம்:- மனசந்தோசம் தரும் [ நிம்மதி இல்லாமல் இருப்போர் கவனிக்க]
17] அனுஷம்:- உறவினரால் நல்ல லாபம் தரும்.. [மருமகன்கள் கவனிக்க ]
18] கேட்டை:- ஆடைகள் கிழியும் [உண்மை ]
19] மூலம்:- தான்ய நாசம் அடையும் [ விவசாயிகள் இந்நாளை தவிர்க்கவும் ]
20] பூராடம்:- நோய் நொடியை தரும்..
21] உத்திராடம்:- பற்பல புது ஆடைகள் கிடைக்கும்22] திருவோணம்:- கண்நோய் அடையும்23] அவிட்டம்:- தான்ய விருத்தி அடையும் [ விவசாயிகள் இந்நாளில் புது ஆடைகள் அணியலாம்நன்மை ]
24] சதயம்:- விஷ ஜந்துக்கள் அபாயம் வரும்25] பூரட்டாதி:- அரசாங்கத்தால் பயம் வரும் [ வழக்கில் இருப்போர் கவனிக்க ]
26] உத்திரட்டாதி:- புத்ரலாபம் கிடைக்கும் [ குழந்தை இல்லாதவர்கள் கவனிக்க ]
27] ரேவதி:- உயர்ந்த பொருள் ஆதாயம் [ சகல மக்களுக்கும் உகந்தது ]

அதுபோக திதிகளை கவனிப்போம்

துவிதியை, திருதியை ,பஞ்சமி, சப்தமி ஆகிய நாட்கள் புது ஆடை அணிய நன்மை தரும்

சதுர்த்தி மற்றும் நவமி திதி, சதுர்தசி , அமாவாஸை ஆகிய திதிகள் புது ஆடை அணிவதை தவிர்க்கவும் ,

கிழமைகள் தரும் பலன்கள் பின்வருமாறு :-

ஞாயிறு :- உடல் நோய் வரலாம்..

திங்கள்:- துயரம் [புது ஆடை கண்ணீரால் நனையும்..

செவ்வாய்:- உடையில் தீயினால் சேதம் தரும்..

புதன்:- பலவகை ஆதாயங்கள் அடையலாம்..

வியாழன்:- சிறப்பான பலன்கள் தரும் அதுவும் குளிகை காலம் காலை 9 முதல் 10-30 ஆடைகள் பெருகும் [ வாகனம் எடுக்கவும் குளிகை காலம் சிறப்பு ஆகும் வாகனம் பெருகும்]


வெள்ளி: நல்ல பலாபலனை தரும்சனி:- பெரும் துயரம் வந்து சேரும்

இந்த பதிவினை செய்ய ஒரு சம்பவம் காரணம் ஆகும்..
இரு மாதம் [17-01-2015 அன்று சனிக்கிழமையும் கேட்டையும் ]  முன்பு ஒரு திருமண பெண் இரவில் வரவேற்புக்கு அணிந்த புது ஆடை மணமகள் அறை கதவில் இருந்த ஆணி கிழித்து விட்ட்துமிகுந்த வருத்தம் அந்த பெண்ணுக்கு சில நாட்கள் முன்புகால ப்ரகாசிகைநூலில் வாசித்த செய்தி கண்டு அந்த பெண்ணுக்கு

நீங்கள் அணிந்தது சனிக்கிழமை கேட்டை நட்சத்திரம் கூடிய நாள் ஆகும் . கேட்டை ஆடையை கிழித்தது..சனிக்கிழமை மனத்துயரம் தந்தது.. இனி வருந்த வேண்டாம்

என ஆறுதல் சொன்னேன் .. ஆடை கிழிந்த மனதுயரம் நம் ஆறுதல் தரும் வரை அந்த பெண்ணுக்கு கடந்த மூன்று மாத காலத்திற்க்கு சனிகிழமை கேட்டை மனதுயரம் தந்தது…..ஆகவே இதை வாசிக்கும் நண்பர்கள் கொஞ்சம் நாட்களையும் நட்சத்திரமும் திதியை அனுசரித்து புது ஆடைகளை அணியுங்கள்நன்றி
என்றும் ஜோதிட பணியில்!!
ஸ்ரீ வீரபத்ர ஜோதிட மையம்
புதுபஸ் நிலையம் பின்புறம்
 பெருந்துறை   -638 052
ஜோதிடர்A .செந்தில் குமார் 
செல்: +91 98427 69404
             +91 98434 69404    






Friday, 10 April 2015

தங்கம் வாங்க அடகு வைக்க ஜோதிட கருத்துக்கள்

ட்க்ஷய திருதியை
இன்னும் 10நாட்கள் இருக்கிறது ...
ஏதோ அன்றைய தினத்தில் தங்கம் வாங்கினால் மட்டுமே
"குபேர வாழ்க்கை "எனும் மாயையை கடந்த 10-15 ஆண்டுகளாக நகை வியாபாரிகளின் வியாபார ராஜதந்திரம் ஆகிப்போனது .. .
நம்மில் சிலரும் 
"கந்துவட்டி கடன் "வாங்கியாவது அன்றே தங்கத்தை சேமிக்கணும் எனும் கோணத்தில் சென்று விட்டார்கள் ...
அதுபோன்ற அன்பர்களுக்கு ஒரு ஜோதிட தகவல் இங்கே பதியப்படுகின்றன ....
ரோஹிணி
மிருகசீரிடம்
திருவாதிரை
பூசம்
உத்திரம்
அனுஷம்
திருவோணம்
அவிட்டம்
சதயம்
உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரம் அமைந்த நாளில் தங்கம் வாங்கினாலும்
"தங்கம் நம்மிடம் தங்கும் "
குரு வர்க்கோத்தமம் எப்போது இருக்கிறது
அப்போது புதனும் சுக்கிரனும் லக்னத்தின் 1-4-7-10 எனும் கேந்திரத்தில் இருக்கும் லக்னம் எதுவும் என்பதை அருகில் இருக்கும் ஜோதிடர்களை அணுகி கொஞ்சம் விபரங்களை அறிந்து அந்த நாளில்
தங்கம் வாங்கினாலும்
"தங்கம் நம்மோடு தங்கும் "
லக்னத்தில் குரு
10 ல் சந்திரன்
11ல் புதன்
போன்ற நிலைகள் இருக்கும் காலகட்டத்தில் வாங்கினாலும்
"தங்கம் தங்களிடம் தங்கும் "
குரு வாரம் எனும் வியாழக்கிழமை அன்று வாங்கினாலும்
"தங்கம் தங்கும் "
சனிக்கிழமை அன்று ரோஹிணி நட்சத்திரம் வரும் நாளில்
கும்பராசிக்கு குரு பார்வை இருக்கும் வருஷத்தில்
(அடுத்த ஆனிமாதம் முதல் 13 மாதங்கள் )
சுக்கிரன் ஆட்சி உச்ச மற்றும் நட்பு வீட்டில் இருக்கும் காலகட்டத்தில் (பகை இல்லாத மூடம் இல்லாத அஸ்தங்கம் இல்லாத சுக்கிரன் )
"தங்கம் வாங்கினாலும் தங்கும் "
நீங்கள் வாங்கும் காலகட்டத்தில் இவ்வாறாக கிரகங்களால் நன்மை தரும் காலகட்டத்தில் வாங்கலாமே தவிர
"பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் "வேணும் எனும் போக்கில் குறிப்பிட்ட
"அக்ஷ்ய திருதியை "அன்றே தங்க நகைகள் வாங்கி ஆகணும் எனும் கட்டாயத்தை ஜோதிட சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட விதியல்ல !!!
இன்னும் சொல்லப்போனால்
"அக்ஷ்ய திருதியை "தங்கம் வாங்குவது ஆதாயமா என்றால்
நம்முடைய ஜோதிட ஆசான்கள் பதில்
"ஆம் நகைக்கடை உரிமையாளர்களுக்கு ஆதாயமே "என்று தான் பதில் வரும் ....இன்னும் சொல்லப்போனால் எல்லா நகைக்கடை அன்று ஒருநாள் மட்டுமே விற்பனை மீண்டும் எங்கள் நகைக்கடை அடுத்த "அக்ஷ்ய திருதியை "அன்று தான் திறப்போம் என அறிவிக்க சொல்லுங்க பார்க்கலாம் !!!!



தங்கம் அடமானம் வைத்தால் சிலரால் திரும்ப மீட்க முடியாது அவைகள் எல்லாம் வட்டிக்கு மூழ்கிப்போய் தரித்திரம் அடைந்து விடுகிறார்கள் ....பரவலாக அவசரத்தேவை கொண்டு தங்கத்தை அடமானம் வைத்தாலும் அவைகள்கிருத்திகை நட்சத்திரம் மகம் நட்சத்திரம் ஹஸ்தம் நட்சத்திரம் அனுஷம் நட்சத்திரம் மூலம் நட்சத்திரம் சதயம் நட்சத்திரம்ஆகிய நாட்களில் தங்கத்தை அடமானம் வைத்தவர்கள் "தரித்தர நிலையை அடைகிறார்கள் "அடமானம் வாங்கியவர்கள் செல்வந்தர்கள் நிலையில் இருந்து கொஞ்சம் கூட குறையாமல் மென்மேலும் முன்னேற்றத்தை அடைகிறார்கள் ...தமிழகத்தில் இன்று வட்டிக்கு கொடுக்க நாங்க இருக்கோம் என்று பிரபலமான நடிகை நடிகர்கள் கொண்டு விளம்பரங்கள் செய்து தன்னுடைய வியாபார ஸ்தலத்தை ஸ்திரமாக வைத்து இருப்பதன் தாரக மந்திரம் அவர்கள் வட்டிக்கு கொடுப்பதால் அல்ல !!!நாள் நட்சத்திரம் தெரியாமல் அறியாமல் ஏன் "ஜோதிடத்தின் மேல் நம்பிக்கை "ஏதும் இல்லாமல் நினைத்த நேரத்தில் தங்கத்தை அடமானம் வைப்பது தான் .......இனியாவது கொஞ்சம் விழிப்புடன் நகையை அடமானம் வையுங்கள் ....