Monday, 17 November 2014
Saturday, 8 November 2014
சாமுத்திரிகா லக்ஷ்ணம் பகுதி 4
சாமுத்திரிகா லக்ஷ்ணம்
பகுதி 4வாயின் சுழி ல்க்ஷ்ணம்வாயில் வலம்புரிசுழி
இருக்கப்பெற்றவர் தைரியவார்த்தை உடையவர் ஆவர்.இடம்புரியாக சுழிய
இருக்கப்பெற்றவர் வறுமையுடனே வாழ்க்கை அமையும்.பற்கள் லக்ஷ்ணம்பற்கள் சிவந்து
இருக்கப்பெற்றவர் அழகுடையவர்
பற்கள் விலகி இருக்கும்
அமைப்பை பெற்றவர் காமம் நிறைந்தவர்
பற்கள் பருத்திருக்க
பெற்றவர் தரித்திரவான்
தெத்துபற்க்கள்
அமையப்பெற்றவர் முன்னே சொத்துக்களை உண்டாக்கி பின்னர் உடனே அழிக்கும் வித்தைவான்மேற்பல் கீழ்பல்
நடுப்பல் ஆகியவைகளோடு சிறுபல் அமையப்பெற்றவர் செல்வந்தர் ஆகினும் சுயபுக்தியை இல்லாதவர்
ஆக இருப்பார்கள்உதடு சிறுத்திருக்க
பெற்றவர் செல்வந்தர்
கன்னம் நெடுகி
இருக்க பெற்றவர் சகல சகல சம்பத்து நிறைந்தவர்
கன்னம் தாழ்வாய்
பருத்தாற்போல இரண்டாக இருக்கப்பெற்றவர் கபட
நாடகதாரி.கன்னம் ஒன்றி இருக்கப்பெற்றவர்
செல்வமுடையவர்.கன்னத்தின் தாழ்வாயில்
வலசுழி இருக்கப்பெற்றவர் நல்ல உணவை உண்டுவாழ்வார்கன்னம் இடசுழி
இருக்கப்பெற்றவர் எந்நாளும் வறுமை உடையவர்
காது லக்ஷ்ணம்
காதின் மேல் செவி
இடமாக இருக்கப்பெற்றவர் முன்கோபம் கொண்டவர்
காது குறுகி இருக்கப்பெற்றவர்
செல்வமுடையவர்காது உள்ளே மேல்செவி
மடங்கி இருக்கப்பெற்றவர் கபடுநாடகதாரி.நடுவில் காது பறுத்து
இருக்கப்பெற்றவர் வறுமை உடையவர்
காது உள்செவி வலம்புரிசுழியாக
இருக்கப்பெற்றவர் சகலசம்பத்து உடையவர்காது உள்செவி இடம்புரிசுழியாக
இருக்கப்பெற்றவர் வறுமை உடையோர்காதில் முடி பருத்து
கறுத்து மேல் நோக்கி இருக்கப்பெற்றவர் செளக்கர்யம் உடையவர்காதில் முடி பருத்து
கறுத்து கீழ் நோக்கி இருக்கப்பெற்றவர் பஞ்சம் உடையவர்கழுத்தின் லக்ஷ்ணம்
கழுத்தில் தன்கையால்
நான்கு அங்குலமும் பாடும்போது நரம்புகள் எழாமல் பிறழாமல் இருக்கப்பெற்றவர் அழகும் ஆயுளும் உடையவர்
நரம்புகள் காணப்பெற்றவர்
நோய்நொடி உடையவர்கழுத்து ஒடுங்கி
இருக்கப்பெற்றவர் வறுமையும் கபடும் உடையவர்
கழுத்தில் நான்குபிறை
கீரல் இருக்கப்பெற்றவர் தீர்க்க ஆயுள்வான்
கழுத்தில் இருபிறை
கீரல் இருக்கப்பெற்றவர் கபடதாரி.கழுத்தில் ஒருபிறை
கீரல் இருக்கப்பெற்றவர் நினைத்த கார்யத்தை முடிக்கும் வல்லவன் ஆவர்ஒருபிறை கீரல்கூட
இல்லாதவர் மனோவியாதி உடையோன் பிடரி லக்ஷ்ணம்
பிடரியில் இரண்டு
கீரல் இருக்கப்பெற்றவர் சுகபோசனம் உடையவர்
பிடரி உயர்ந்து
இருக்கப்பெற்றவர் செல்வமுடையவர்
பிடரி எந்நாளும்
உலர்ந்து இருக்கப்பெற்றவர் சதாவறுமை உடையவர்தோள்கள் லக்ஷ்ணம்
தோள்கள் இரண்டும்
உயர்ந்து இருக்கப்பெற்றவர் செல்வமுடையவர்தோள்கள் தாழ்ந்து
இருக்கப்பெற்றவர் தீர்க்க ஆயுள்வான்தோள்கள் சரிவாக
இருக்கப்பெற்றவர் மிகுந்த அறிவாளி
இருதோள்களில் அதிகமான
மயிர் இருக்கப்பெற்றவர் நினைத்த கார்யத்தை முடிப்பதில் வல்லவன்அக்குகள் லக்ஷ்ணம்
அக்குகள் உயர்ந்து
மயிர் சிறுத்து கருத்து இருக்கப்பெற்றவர் தூக்கம் இழந்தவர் நல்ல செல்வநிலை உடையவர்அக்குகள் கற்றாழை
நாற்றத்துடன் இருப்பவர் அதிகமான காமவிகாரி ஆக இருப்பார்கள்
அக்குகள் சுண்ணாம்பு
நாற்றம் உடையவர் நோய்நொடியுடன் இருப்பார்கள்
அக்குகள் யானைமூத்திர
நாற்றத்துடன் இருப்பவர்களுக்கு குறிபிட்ட நேரத்தில் உண்ண முடியாத அற்பபோகி ஆவர்அக்குகள் இளநீரை
போன்ற வாசனை உடையவர் தீர்க்கபோகி ஆவர்அக்குகள் தாமரைமலரின்
வாசனை கொண்டவர் அனேக பெண்களை அணைவார்அக்குகள் ஒருமயிர்
இல்லாது இருக்கப்பெற்றவர் கோழிபோக உடையவர்
அக்குகள் மயிர்
நெருங்கி தாழ்வாக இருக்கப்பெற்றவர் வறுமைநிலை உடையவர்
கைகள் லக்ஷ்ணம்
கைகள் முழங்கையின்
கீழ்வரை நீண்டு இருக்கப்பெற்றவர் லக்ஷ்மி கடாஷம் கொண்டு அதிக செல்வமும் தீர்க்க ஆயுளும்
இருப்பவர்.
முழங்க்கால் மட்டும்
இருக்கப்பெற்றவர் செல்வம் மட்டுமே உடையவர். முழங்காலுக்கு ஒரு விரல் அளவு மேலே இருக்கப்பெற்றவர்
நல்ல போஜனம் உடையவர்.முழங்காலுக்கு
இருவிரல் மேலே இருக்கப்பெற்றவர் சொல்வாக்கு காப்பாற்றும் எண்ணம் உள்ளவர்.மூன்றுவிரல் மேலே
இருக்கப்பெற்றவர் அழகும் ஐஸ்வர்யம் உடையவர்.முழங்காலுக்கு
மேலே நான்குவிரல் அளவு இருக்கப்பெற்றவர் அற்பசெல்வம் உடையவர்.முழங்காலுக்கு
மேலே ஐந்து விரல் அளவுக்கு இருக்கப்பெற்றவர் சதா வறுமையும் கஷ்டமும் நிறைந்தவர்.கைகள் திரண்டு
மிருதுவாக இருக்கப்பெற்றவர் அழகும் ஆயுளும் உடையவர்,கைகள் கரடியை போல
இருக்கப்பெற்றவர் சூது நிறைந்தவர்.கைகள் மிகப்பருத்து
இருக்கப்பெற்றவர் கிலேசமுடையவர்.மூக்கு சிறுத்து
இருக்கப்பெற்றவர் வறுமை உடையவர்.கை விரல் அமைப்பு
கையின் சிறுவிரல்
[சுண்டுவிரல்] மோதிர விரல் அளவு இருக்கப்பெற்றவர் 100 ஆண்டு வாழும் ஆயுள் தீர்க்கம்
உள்ளவர்.மோதிரவிரல் நடுவிரல்
அளவுக்கு இருக்கப்பெற்றவர் ஆயுள் 60 ஆகும்
சுண்டுவிரல் மோதிரவிரலின்
மேல் இறைக்கு சரியாக இருக்கப்பெற்றவர் ஆயுள் 80 ஆகும்.சுண்டுவிரல் மோதிரவிரலின்
மேல் இறைக்கு சற்றே குறைவாக இருக்கப்பெற்றவர்
ஆயுள் 75 ஆகும்.சுண்டுவிரல் மோதிரவிரலின்
மேல் இறைக்கும் கீழிறைக்கும் நடுவில் சற்று
மேலே இருக்கப்பெற்றவர் ஆயுள் 70 ஆகும்.சுண்டுவிரல் மோதிரவிரலின்
மேல் இறைக்கும் கீழிறைக்கும் சரியாக நடுவில்
இருக்கப்பெற்றவர் ஆயுள் 60 ஆகும்.சுண்டுவிரல் மோதிரவிரலின்
மேல் இறைக்கும் கீழிறைக்கும் சரியாக நடுவில்
கொஞ்சம் கீழாக இருக்கப்பெற்றவர் ஆயுள் 40 ஆகும்.இதற்கும் கீழாக
அமைப்பில் இருப்போர்கள் எல்லாம் அற்பாயுள் என அறிக.
Wednesday, 22 October 2014
சாமுத்திகா லக்ஷ்ணம் பகுதி 3
சாமுத்திரிகா லக்ஷ்ணம்
பகுதி 3
நெற்றியில் ஐந்து கீறல் ஐந்து இருக்கப்பெற்றவர் 100 வயது வாழ்வார்கள்.
நெற்றியில் நான்கு
கீறல் இருக்கப்பெற்றவர் 80 வயது வாழ்வார்கள்
நெற்றியில் மூன்று
கீறல் ஐந்து இருக்கப்பெற்றவர் 90 வயது வாழ்வார்கள்.
நெற்றியில் இரு
கீறல் ஐந்து இருக்கப்பெற்றவர் 40 வயது வாழ்வார்கள்.
நெற்றியில் ஒரு
கீறல் ஐந்து இருக்கப்பெற்றவர் 20 வயது வாழ்வார்கள்.
நெற்றியின் நடுவே
ஒருநரம்பு குறுக்காக எழும்பி இருக்கப்பெற்றவர் நல்ல குணவானாகவும் செல்வ அதிபதியாகவும்
இருப்பார்கள்
நெற்றியில் வெகுநரம்புகள்
புடைக்க இருக்கப்பெற்றவர்கள் சதா வறுமையும் வியாதியும் கூடியவராக இருப்பார்கள்.நெற்றியில்
மயிரே இல்லாத அமைப்பில் இருக்கப்பெற்றவர் தற்பெருமை நிறைந்த ஆசாமியாக இருப்பார்கள்
புருவத்தின் லக்ஷ்ணம்
புருவத்தின் கடைமயிர்
சாய்த்து கறுத்து மிருதுவாக இருக்கப்பெற்றவர் சகலசம்பத்து நிறைந்தவர்
புருவத்தின் மயிர்
பருத்து இருக்கப்பெற்றவர் பலவான்
கீழ்நோக்கிய அமைப்பில்
இருக்கப்பெற்றவர் வறுமைநிலையில் இருப்பார்
இருபுருவமும் கூடி
இருக்க பெற்றவர் தன் தாய் தந்தையை விரைவில் இழக்கும் நிலையை ஏற்படுத்தும்
கண்கள் லக்ஷ்ணம்
கண் இடமாய் சரியாக
செதுக்கியதுபோல கடைகண் சிவந்து இருக்கப்பெற்றவர் அதிக செல்வம் உடையவர் ஆவர்
இமை மயிர்கள் அதிகமாக
அடர்த்தியாக இருக்கப்பெற்றவர் செல்வநிலையில் இருப்பார்கள்
கண்கள் ஒன்று சிறுத்தும்
ஒன்று பெறுத்தும் இருக்கப்பெற்றவர் வியாதியுடையர் ஆக இருப்பர்
சிமிட்டும் கண்
இருக்கப்பெற்றவர் கபடியாக இருப்பார்
மறுகண் இருக்கப்பெற்றவர்
கபடியாக பொய்யனும் வறுமையுடையனும் ஆக இருப்பார்கள்
சிறுவிழியாக இருக்கப்பெற்றவர்கள்
ஆயுள் விருத்தி அதிகமாக கொண்டவராக இருப்பார்கள்
விழிகள் கறுத்து
இருக்கப்பெற்றவர்கள் வெகு பெண்களை சேர்ந்து இன்புறும் போகியாக இருப்பார்கள்
விழிகள் தேன்நிறமாக
இருக்கப்பெற்றவர்கள் காமியாகவும் கபடியாகவும் இருப்பார்கள்
வெண்மையாக இருக்கப்பெற்றவர்கள்
கபடியாக இருப்பார்கள்
கண்களின் மச்ச லக்ஷ்ணம்
வலதுகண்ணில் வெள்ளை
விழியில் மச்சம் இருக்கப்பெற்றவர்கள் புக்திகூர்மை இருக்கப்பெற்றவர்கள்
இடதுகண்ணில் வெள்ளைவிழியில்
மச்சம் இருக்கப்பெற்றவர்கள் காமவிகாரியாக இருப்பார்கள்
பிறவிக்குருடனாக
இருக்கப்பெற்றவர் பரவிய மனக்குறை இருக்கப்பெற்றவர்
விழிக்குருடன்
ஆனால் மிச்சிய புக்திசாலியாக இருப்பார்கள்
மூக்கு லக்ஷ்ணம்
மூக்கு தன் கையால்
மூன்று அளவு இருக்கப்பெற்றவர் ஆயுளும் செல்வநிலையும் இருக்கப்பெற்றவர் .அதற்க்கும்
மேலே இருக்கப்பெற்றவர்கள் கடின போகம் உடையவர் .அளவு குறைய இருக்கப்பெற்றவர் அற்ப போகி
உடையவர்.
மூக்கு பறுத்து
இருக்கப்பெற்றவர்கள் செல்வந்தனாக இருப்பார்கள்
மூக்கு ஒருபுறம்
சிறுத்து இருக்கப்பெற்றவர்கள் சதா வியாதியுடன் இருப்பவர்
மூக்கு நடுத்தரமாக
இருக்கப்பெற்றவர்கள் கபடமும் வறுமையும் கூடியவரும் ஆக இருப்பார்கள்
மூக்கின் மச்ச லக்ஷ்ணம்
மூக்கின் நுனியில்
மச்சம் இருக்கப்பெற்றவர் சொற்ப செலவுகள் உடையவர்
மூக்கின் வலபுறம்
மச்சம் இருக்கப்பெற்றவர் செல்வநிலையை உடையவர்கள்
மூக்கின் இடபுறம்
மச்சம் இருக்கபெற்றவர் வறுமைநிலையை உடையவர்கள்
வாய் லக்ஷ்ணம்
வாய் சிறுத்து
இருக்கப்பெற்றவர் செல்வநிலை உடையவர்
வாய் சிவந்து இருக்கப்பெற்றவர்
அழகு உடையவர்
வாய் கறுத்து இருக்கப்பெற்றவர்
மிடுக்கானவர் வார்த்தையில் வலுஇருப்பவர்
முன்கோபமும் கபடில்லாத
தன்மையும் உடையவர்
வாய் மிருதுவாக
இருக்கப்பெற்றவர் கபடும் நற்குணமும் உடையவனாக இருப்பார்
பிறவி முதல் ஊமையாக
இருக்கப்பெற்றவர் வெகுபாவியாகவும் கபடியாகவும் இருப்பார்
வாயில் ரேகை லக்ஷ்ணம்
வாய்க்குள்ளே சங்கு
சக்ரம் போலிருக்க பெற்றவர் அதிகமான சம்பத்து உள்ளவர்
வேலாயுதம் போல்
இருக்க பெற்றவர் நல்ல ஞானம் இருக்க பெற்றவர்
கமலம் (தாமரை)
போல இருக்க பெற்றவர் வித்தை உடையவர்
சாமரம் போல் இருக்க
பெற்றவர் நீண்ட ஆயுளும் செல்வமும் இருக்க பெற்றவர்
அங்குசம் போல இருக்க
பெற்றவர் வெற்றியை அடைபவராக இருப்பார்கள்
குடைபோல இருக்க
பெற்றவர் செல்வநிலையை உடையவர்
பாம்பு போல இருக்க
பெற்றவர் கபடும் உடையவர்
Wednesday, 15 October 2014
சாமுத்திரிகா லக்ஷ்ணம் [பகுதி 2]
சாமுத்திரிகா லக்ஷ்ணம்
பகுதி 2
தலையின் லக்ஷ்ணம்
1] வட்டமாக பருத்தமான தலை அமைப்பை கொண்டவர் செல்வந்தராக இருப்பார்2] வட்டமாக சிறுத்த தலை அமைப்பை கொண்டவர் அழகும் செல்வமும் சேரப்பெற்றவர்3] நீண்ட தலையை கொண்டவர் சதா எந்நாளும் வறுமை நிலையை கொண்டவர்
தலைமயிர் லக்ஷ்ணம்
1]பிளவுபட்ட தலைமயிர்
கொண்டவர் மிகுந்த செலவுகள் கொண்டு சுகமான போஜனம் [சாப்பாட்டிற்க்கு வழியற்ற நிலை]
2] பருத்த கருத்த
மயிருள்ளவர் செல்வநிலையை கொண்டவர்.3] பருத்த ஆனால்
கொஞ்சம் சிவந்தநிலை மயிர் உள்ளவர் வறுமைநிலையிலேயே இருப்பார்.4]யானைமுடியை போன்ற
அமைப்புள்ளவருக்கு வியாபார விருத்தி நன்றாக அமையும்5]மிகுந்த அடர்த்தியாகவும்
நெருக்கமான மயிர் அமைப்பு கொண்டவர் தீர்க்க ஆயுள் உள்ளவர்
6] சிறுத்த சிவந்த
நிறமுள்ள மயிர் அமைப்பை கொண்டவர் “அதிக காமம் கொண்டவர்”7] சுருண்ட சொற்ப
மயிர் உள்ளவர் விகாரமும் சொற்ப செலவுகளை கொண்டவர்
8] மிகுந்த நீண்ட
மயிர் உள்ளவர் அதிக பழிசொல்லுக்கு ஆளாவார்.
தலையில் இருக்கும் சுழியின் லக்ஷ்ணம்
1] தலையில் ஒரே ஒரு சுழி வலமாக பெற்றவர் அதிகமான சொந்தபந்தங்கள்
அமைந்தவராக இருப்பார்.
2] தலையில் ஒரே ஒரு சுழி இடப்புறமாக அமையப்பெற்றவர் வாழ்க்கை வறுமை நிலையில் இருக்கும்
3] இரண்டு சுழியும் இடம்புரியாக [இடமாக] அமையப்பெற்றவர் அற்பாயுளும் வறுமை நிலையும் கொண்டவர்.
4] இடப்புறத்தில் வலமாக சுழி இருக்க பெற்றவர் பூர்ண ஆயுளும் மிகுந்த செல்வம் உடையவராக இருப்பார்.
5] மூன்று சுழி இடப்புறத்தில் இடம்புரியாக இருக்கப்பெற்றவர் விரைவில் தன் தாய்-தந்தையை இழப்பார்.
6] மூன்று சுழியும் தொங்கினாற்ப்போல் கூடி இருக்கப்பெற்றவர் வெட்டுப்பட்டு இறக்கும் நிலையை தரும்.
7] இரண்டு சுழியில் ஒரு சுழி வலம்புரியாகவும் ஒரு சுழி இடம்புரியாகவும் இருக்கப்பெற்றோர் கொஞ்சம் காலம் வறுமையும் பின்நாளில் செல்வநிலையும் அடைவார்கள்
முகத்தின் லக்ஷ்ணம்
1] சிறுத்தமுகம் உடையவர் அழகுள்ளவர்
2] சிங்கம்போல பருத்தமுகம் உடையவர் யாருக்கும் யோக்கியனானாக நாணயஸ்தனாராக இருப்பார்.
3]பருத்து முகமும் கருத்து முகத்தில் மிகுந்த மயிர் உள்ளவர் யாரையும் வசீகரிக்கும் தன்மையும் செல்வமும் உள்ளவராக இருப்பார்
4] சிவந்த மயிர் உள்ள முகம் உள்ளவர் கபட நாடகதாரியாக இருப்பார்.
5] மிருதுவான முகத்தில் மயிர் உள்ளவர் அழகனாக இருப்பார்
முகத்தில் அமையும் சுழியின் லக்ஷ்ணம்
1] முகத்தில் வலதுபக்கத்தில் ஒரு சுழி வலம்புரியாக இருக்கப்பெற்றவர் சுகமான போஜனம் அமையப்பெற்றவர்.2] முகத்தில் இடதுபக்கத்தில் ஒருசுழி இடம்புரியாக இருக்கப்பெற்றவர் சிலநாள் வறுமையும் சில நாள் செல்வநிலையும் மாறி மாறி அமையப்பெற்றவர்.
3] முகத்தில் இடதுபக்கம் ஒருசுழி வலம்புரியாக அமையப்பெற்றவர் நல்ல நினைவாற்றல் கொண்டு நினைத்ததை முடிக்கும் வல்லவன்.
4] தாடையின் கீழே இரண்டு சுழி வலம்புரியாக இருக்கப்பெற்றவர் அதிக செல்வந்தர் ஆக இருப்பார்கள்.
5] தாடையின் இடம்புரியாக இருக்கப்பெற்றவர் வறுமையும் வியாதியும் உடையவர் உள்ளவர்கள்.
நெற்றி சாமுத்திரிக்கா லக்ஷ்ணம்
1]நெற்றியின் நான்குவிரல் அளவு அகலம் இருக்கப்பெற்றவர் நல்ல ஞானியாக இருப்பார்கள்2] நெற்றி மூன்றுவிரல் அகலம் இருக்கப்பெற்றவர் நல்லஞானமும் செல்வமும் அமையப்பெற்றவர் ஆவர்.3] நெற்றியில் இரண்டுவிரல் அகலம் இருக்கப்பெற்றவர் மிகுந்த செல்வம் உடையவர் ஆவர்.4] நெற்றியில் ஒருவிரல் அகலம் மட்டுமே இருக்கப்பெற்ற நபர் மிகுந்த மூடத்தன்மை உடையவர் ஆக இருப்பார்கள்
நெற்றியில் இருக்கும் சுழியின் லக்ஷ்ணம்
1] நடு நெற்றியில் ஒருசுழி வலம்புரியாக இருக்கப்பெற்றவர் செல்வநிலை உடையவர்.
2]நடு நெற்றியில் ஒருசுழி இடம்புரியாக இருக்கப்பெற்றவர்
சதா எந்நாளும் வறுமைப்பிடியில் வாழ்வார்கள்.
3] முன்நெற்றியில் இடமாக ஒருசுழி இருக்கப்பெற்றவர் விரைவில் தாய்தந்தை இழக்கும் நிலையில் ஏற்ப்படுத்தும்.
4] முன்நெற்றியில் இருசுழி வலம்புரியாக இருக்கப் பெற்றவர் காமவெறியால் தவறு செய்வதும் பாவசெயல்களை செய்வராகவும் இருப்பார்கள்.
5] நெற்றியிலும் அதிகமான மயிர் மிகுந்து இருப்பவர்கள் அதிகமான
கபட நாடகதாரியாக இருப்பார்கள்..
இன்னமும் சாமுத்திரிகா லக்ஷ்ணம் தொடரும்
Sunday, 12 October 2014
சாமுத்திரிகா லக்ஷ்ணம் [ 32 அமைப்புகள் ] பகுதி 1
சாமுத்திரிகா லக்ஷ்ணம் [ 32 அமைப்புகள் ]சாமுத்திரிகா லக்ஷ்ண அமைப்புகள் இன்றியமையாது ..அவைகள்ஐந்து இடம் நீண்டு இருக்க வேண்டும்ஐந்து இடம் மிருதுவாக இருக்க வேண்டும்ஆறு இடம் மனிதர்களுக்கு பலவாறாக அமைப்புகள் இருந்தாலும் மொத்தம் 32 உயர்ந்து இருக்க வேண்டும்ஏழு இடம் சிவந்து இருக்க வேண்டும்மூன்று இடம் விசாலமாக இருக்க வேண்டும்மூன்று இடம் குறுகி இருக்க வேண்டும்மூன்று இடம் தாழ்ந்து இருக்க வேண்டும்நீண்டு இருக்க வேண்டிய ஐந்து இடங்கள்1.கண்2.கை3.கதுப்பு4.முழுங்கால்5.மூக்குஇவைகள் ஆகும்மிருதுவாக இருக்க வேண்டிய ஐந்து இடங்கள்1.மயிர்2.விரல்3.நகம்4.தோல்5.பல்இவர்கள் ஆகும்உயர்ந்து இருக்க வேண்டிய ஆறு இடங்கள்1.நெற்றி2.தோள்கள்3.வயிறு4.அக்குள்5.மார்பு6.புறங்கைஇவைகள் ஆகும்சிவந்து இருக்க வேண்டிய ஏழு இடங்கள்1.கடைக்கண்2.உள்ளங்கை3.நகம்4.வாய்5.ஆண்குறி [ அல்லது ]பெண்குறி6.உள்ளங்கால்7.உதடுஇவைகள் ஆகும்விசாலமாக இருக்க வேண்டிய மூன்று இடங்கள்1.மார்பு. 2. இரு பீஜங்கள் ஆகும் குறுகி இருக்க வேண்டிய மூன்று இடங்கள்1.கழுத்து2.முழங்காலின் கீழ்3. ஆண் குறிதாழ்ந்து இருக்க வேண்டிய மூன்று இடங்கள்1.நடுமார்பு2.நெற்றியின் கீழ் பகுதி3.தொந்திஇவைகள் ஆகும்இந்த தன்மைகள் குறையாது இருப்போர்கள் அரசனுக்கு இணையாக கிரீடம் அணியும் அளவிற்க்கு வாழ்வான்.இன்னமும் சில சாமுத்திரிகா லக்ஷ்ணம் பற்றிய பதிவுகள் தொடரும் ……
Subscribe to:
Posts (Atom)