Friday, 22 November 2013

ஜோதிடத்தில் எதை பின்பற்றுவது?

நமது ஜோதிட சித்தாந்தத்தை மிகவும் நுணுக்கமாய் ஆராய்ந்து நமக்கு பல அறிய தகவலை தந்தது ஆர்யபட்டர்,பின்னிட்டு வாராகமிகிரர்,வருஷ ஜாதகமுறைய    [தஜகநீலகண்டீயம்] உலகுக்கு தந்த நீலகண்டர் , யவனர், போன்றோர்கள் மிகவும் நுணுக்கமான பல வழிமுறைகளை தந்துள்ளனர், நிலை அப்படி இருக்க நம்முன்னோர்கள் விட்டு விட்டு சென்ற அனைத்தையும் விட்டு தள்ளு புதியதாக நான் சொல்லி தருகிறேன் ஜோதிடம் என்பது சற்று வியப்பை அளிக்கிறது, முகநூலில் கூட பல ஜோதிடர்கள் நான் சொல்லி வந்த கருத்தை ஏற்று கொண்டு கெளரவிப்பது எனக்கு மகிழ்ச்சியே! 
ஆனாலும் விதிமுறைக்கு புறம்பாக சில விஷயம் சொல்வதை யாரும் ஏற்று கொள்வதில்லை,
தற்போது, ஜோதிடத்தில் முன்னரே இருக்கும் பழமையான வாக்கிய பஞ்சாங்கம் , C.G.ராஜனால் [ 1921 முதல் 1942 வரை நவீனபடுத்தப்பட்ட திருக்கணித பஞ்சாங்கம் ஆகியவை தான் தற்போது அனைத்து ஜோதிடர்களாலும் பயன்பாட்டில் உள்ளது, C.G.ராஜனால் இயற்றப்பட்ட பல ஜோதிட நூல்கள் மூலம் ஒரு ஆர்வம் உள்ள நபர் கொஞ்சமாக குருவழி காட்டுதலுடன் நிச்சயமாக நல்ல ஜோதிடராக புகழ் அடைய முடியும் என்பது நிதர்சன உண்மை!
ஆனால் நான் சற்று கருத்தை பதிவது எதனால் என்றால் ஜோதிடம் பாழ்பட்டு போய்விடக்கூடாது அதுவும் நமது ஜோதிடரால் என்பதே ஐய்யப்பாடு!

திருக்கணிதம் ,வாக்கியம்,  நாடியில் திருமணப்பொருத்தம் 
கே.பி.ஸிஸ்டம் ,ஜாமக்கோள் ஆருடம், பிரச்சன்ன சூட்சுமம் ,சந்திர நாடி கற்று கொள்ளவது சரியானது,

இதை தவிர வேறுவிதமாய்
  “கால் கட்டை விரலுக்கும், அஞ்சனா வசிய மூலிகை   தருகிறேன் ,அஸ்டதித்திக்கு தேவதா செய்து தருகிறேன் உனக்கு வாக்கு பலிதம்ஆகும் மற்றும்
தாந்திரீக பயிற்சி எனும் பெயரில்
நல்ல வருமானம் தரும் வாங்கி கொள் என ஜோதிடர்களிடம் வியாபாரம் செய்யும் முறையும் 
வாக்கு பலிதம் அடைய  வாங்கிக்கொள் என்பதும் அதை வாங்கி வைத்தால் மட்டும் சொல்லும் அனைத்தும் நடந்து விடுமா?
இந்தக்கூற்று எப்படி சாத்தியம் ஆகும்? சொல்லுங்க ? ”

இடையே ஆறுமாதத்தில் ஜோதிடம் பயின்று ஜோதிடர் ஆகலாம் என விளம்பரம் பயிற்சி கட்டணம் எனும் பெயரில் சில ஆயிரம் பின்னர் ஆஞ்சனா மை வாங்கி கொள் என சில ஆயிரம் எதேனும் ஒருபட்டம் “ ஜோதிட பூஷன் .ஜோதிடரத்னா, ஜோதிஸ்சிரோண்மணி ‘ என பெயருக்கு முன்னால்  ஒரு பட்டம் , அப்படி பட்டம் வாங்கியவரால் சரியான பலன்  சொல்ல முடியுமா? முகநூலில் கூட நான் மூலநட்சத்திர பெண்ணும் மகநட்சத்திர ஆணும் திருமணம் செய்ததை பற்றி எழுதினேன், நண்பர் தீர்த்தகிரி வெங்கடேஷன் அவர்கள் கூட அதை ஆதரித்தார், ஆனால் பெரும்பாலான ஜோதிடர்கள் அதை லைக் கூட செய்யவில்லை.காரணம் அவர்களுக்கு அதை பற்றி தெரியாது என்பதே உண்மை ஆகும், தவிர ஒரே திசை நடந்தால் அதை திசாசந்திப்பு எனவும் பழமையான ஆரோகண அவரோகணத்தை ஏற்று கொள்ள மறுப்பது, அதே போல் வேறு ஜோதிடரிடம் முன்னரே திருமணப்பொருத்தம் பார்த்து விட்டு வந்தாலும் நாடி முறையில் சரியில்லை சாரப்படி சரியில்லை , ஜாமக்கோள் படி சரியில்லை எனவும் [எண்கணிதப்படி சரியில்லை என்பதும் ] ஆள் ஆளுக்கு ஒருமுறையில் பயணம் செய்ய சொன்னால் பலன் காண வரும் நபர் பைத்தியகார ஆஸ்பத்திரிக்கு தான் போகணும், ஆசான் என கூறிக்கொண்டு இருக்கும் பலருக்கு நான் வாரசூலையை பற்றி கேட்க யாருக்கும்ட் தெரியவில்லை ஆனால் தேடிபிடித்தேன் படித்தேன் பதிந்தேன் முகந்நூலில், அதைக்கூட பிராமணர் பக்கம் ஷேர் செய்து ஆதரித்தது, 
நான் யாரையும் குற்றம் கூறவரவில்லை , ஆனால் 10 பொருத்ததை போட்டு குழப்பாதீர்கள்!
நன்றாக பலனை அறிய வேண்டும் எனில் முதலில் ஜோதிடத்தையும் கணிதத்தையும் அடிப்படையில் இருந்து பயில வேண்டும் என பதிந்து நண்பர்களிடம் பகையை தேடி வைத்து விட்டதோ என எண்ணத்தோன்றல் வருகிறது, 

வாக்கியம் கோவில் வழிபாட்டுக்கு மட்டும் தான்,  திருக்கணிதம் மனித குல ஜாதக கணிப்பிற்க்கு  என்பதை மனதில் கொள்ளவும்

பழமையான பலமூல நூல்களை பாடல்களை தேடிப்பிடித்து ஜோதிஸ் ஜாம்பவான்கள் தற்க்கால நடைமுறைக்கு ஏற்ப்ப புதுபித்தால் போதும் ஜோதிடம் நன்கு வளரும் அதை விட்டு தான் நடத்தும் ஆறுமாத ஜோதிட பயிற்சி என்பது ஜோதிடத்தை வளர்த்தாது அதை நடத்தும் நபர்களை வேண்டுமானால் வளர்த்தும் 
அப்படி ஆறுமாதத்தில் படித்து விட்டு என்னைக்காண வந்த ஒருநபருக்கு ராசிகட்டமும் அம்ஷ நிலையும் கூட கணிக்க தெரியாமல் திணறிப்போனார், 
ஜோதிடக்கலை வளரவும் இனி வருங்கால ஜோதிடர்களை வளப்படுத்தவும் பழைய மூலநூல்களை மிகசிறந்தது ,இந்த ஆறுமாத பயிற்சி அல்ல!
பலமுனை கேள்விகள் வரலாம் ஆனால் மனதில் பட்டதை சொல்லிதானே தீரணும்?

Thursday, 21 November 2013

திசாபுக்தி துரிதமாக கணிக்க எளிய முறை

இப்போது எல்லாம் ஜோதிடம் புதியதாக பயில்வோர் மட்டும் அல்ல 
அனுபவமாக ஜோதிடம் பார்ப்பவர்களும் சில நேரம் திசா புக்தியை கணிக்க தடுமாறியதை கண்டு இருக்கிறேன். எளிய முறையில் திசாபுக்தி கணிக்க கால்குலேட்டர் அவசியம் 
முதலில் சூர்ய திசையை காண்போம், 
சூர்யதிசை ஆனது 6 ஆண்டு அதன் ஆரம்பம் சூர்ய புக்தி கணக்கிடுவது 
திசாநாதன் 6 புக்தி நாதன் 6 [அதாவது திசையின் கால அளவிட] 
6x6= 36 விடை  ஆகிறதா? அதில் 3 க்கும் 6 க்கும் இடையே ஒருபுள்ளி வைக்கவும். சரி இப்போது கணக்கிடுவோம் முன்னால் இருப்பது 3 மாதம் அதாவது சூர்யதிசை சூர்யபுக்திக்கு பின்னால் இருக்கும் 6 இருக்கிறதா? அதை 6 X3 பெருக்கவும் அது 18 ஆகமாறும் சரியா ? இப்போது அந்த முன்புறம் இருக்கும் 3 மாதத்துடன் இந்த 18 நாட்களை இணைக்க இப்6 Xபோது சூர்யதிசை சூர்யபுக்தி 3 மாதம் 18 நாட்கள் ஆகும், அடுத்தது சந்திரபுக்தி வரும் அல்லவா/?
இப்போது சூர்யதிசை 6-யை சந்திரபுக்தி 10 பெருக்க வேண்டும் அதன் விடை 6 X10 = விடை 60 ஆகிறது முன்புறம் இருப்பது மாதம் பின்புறம் நாட்கள் இல்லை இப்போது சூர்யதிசை சந்திர புக்தி 6 மாதம் ,
அடுத்தது செவ்வாய் புக்தி அதற்க்கு 6 X 7 [ செவ்வாயின் 7 வருஷத்தால் பெருக்க வேண்டும் ]
6 X7 = 42 விடையாகும் 4க்கும் 2 க்கும் இடையே புள்ளி வைத்து முன்புறம் இருப்பது மாதம் பின்னால் இருக்கும் 2-யை 3ல் பெருக்க வருவது நாட்கள் ஆகும், ஆக சூர்யதிசை செவ்வாய் புக்தி 4 மாதம் 6 நாட்கள் 
சூர்யதிசை 6 ராகுபுக்தி 18  அதை  6 X 18 = 108 விடை ஆகும் முன்னால் இருப்பது10 மாதம் பின்னாலிருக்கும் 8 யை 3ல் பெருக்கி வருவது நாட்கள் = 24 ஆகும் ஆக 
சூர்யதிசை ராகுபுக்தி 10 மாதம் 24 நாட்கள் ஆகும், 
6 X6= 36
6 X10=60
6 X7=42
6 X18=108
6 X16=96
6 X19=114 
6 X17=102 
6X7=42
6X20=120 
அடுத்தது சந்திரதிசை அல்லவா?
10x10=100
10x7=70
10x18=180
10x16=160
10x19=190
10x17=170
10x7=70
10x20=200 இதில் நாட்கள் அமையாது அனைத்தும் மாதமே அடுத்தது செவ்வாய் திசை அதை திசாநாதனும் புக்திநாதனும் கொண்டு கணக்கிட
7x7=49 
7x18=126
7x16=112
7x19=133 
7x17=119
7x7=49 
7x20=140
7x6=42
7x10= 70
இதில் பின்புறம் வரும் எண்களை நாட்களாக கணக்கிட 3 ல் பெருக்கி கணக்கிடவும் ஆக 
சூர்யதிசை ஆறு வருஷம் 
சந்திரதிசை பத்து வருஷம்
செவ்வாய்திசை எழுவருஷம் என கணக்கீடு சரியாகவரும் இதைபோல இனி வரும் திசைகளை கணக்கிட்டு கொள்ளவும் 


             
  



 

ஜோதிடம் யாருக்கு அதிகமாக பலன் தந்தது?

ஜோதிடத்தில் பலன் காண நாம் அனைவரும் நவகிரஹத்தை மட்டும் வைத்து பலன் கண்டபோது இடையே ஒரு மூன்று கிரஹங்கள் வந்தது ,
அவை முறையே 

1]புளூட்டோ 2]நெப்ட்யூன்3]யுரோனஸ்

புளூட்டோ என்பது ஒருராசியில் குறைந்தது  15 ஆண்டும் அதிகளவு 32 ஆண்டும் என இருக்கும்
நெப்ட்யூன் என்பது குறைந்தது  ஒருராசியில் 14 ஆண்டுகள் இருக்கும்,
யுரோனஸ் என்பது ஒருராசியில் குறைந்தது 7 ஆண்டுகள் இருக்கும் இதை ஆங்கிலேயர்கள் நமது ஜோதிடத்தின் இடையே புகுத்தினர், நம்மில் பலருக்கும் அதில் அந்நிய மோகம் கொண்டு அதை பற்றியும் சற்று படிக்க முயற்சி செய்தனர் [ எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்பது போல] அதை பற்றி  1]புளூட்டோ &2]நெப்ட்யூன்3]யுரோனஸ் பலவிதமான ஜோதிட நூல்கள் எழுதப்பட்டு அதையும் நம்ம ஜோதிடர்களால் வாங்கி படிக்கப்பட்டு வந்தது, பின்னர் ஒருகால கட்டத்திலே நமது பஞ்சாங்க வெளியீட்டாளர்கள் & மற்றும் நமது தமிழகத்தில் மட்டும் அல்ல இந்தியாவில் இருக்கும் அனைத்து ஜோதிடர்களும் கூடி இந்த மூன்றையும் கோள்களாக கணக்கிட கூடாது என முடிவெடுத்து மேலும் விஞ்ஞானிகளும் கூடி இந்த மூன்று கோள்களையும் நீக்கி விட்டனர், அது போல தான் அடிக்கடி ஏதாவது ஒன்று புதியதாய் வரும் பின்னர் காணாமல் போகும், 

ஆனால் எப்போதும் ஜோதிடத்தில் கணக்கிட பழமையான முறையே ஒத்து போகும்,


அதுதான் தொடர்ந்து வரும் முன்னர் எப்படி இந்த புளூட்டோ +நெப்ட்யூன்&யுரோனஸ் காணாமல் போனதோ அதுபோல் புதியதாக கண்டுபிடிக்கப்பட்ட முறை எனும் பெயரில் நமது ஜோதிடர் வட்டத்தில் பலன் கூற பயிற்சி முறை எனும் பெயரில் தனக்கு தானே பட்டமும் புகழாரமும் சூட்டி கொண்டு பலகுழுமம்   இன்னமும் எந்த எந்த பெயரிலோ பட்டம் வைத்து கொண்டு  அவர்களை முகதுதி பாட தனியாக சிஷ்யர் கூட்டம் அமைத்தும் தமிழகத்தில் பயிற்சிமுகாம் அமைத்து ஜோதிடர்களை குழப்பி கொண்டு தான் இருக்கிறது, அது அவர்கள் பிழைக்க வழியாக வேண்டுமானால் சரியாக இருக்கலாம் 



புதியதாக பயில விரும்பும் ஒரு ஜோதிடர் தன் குரு நாதர்  அவர்களை நம்பி சென்று படிப்பதையும் பார்க்கிறோம், ஜோதிடத்தில் சீக்கிரம் பணம் பார்க்க வேண்டும் எனும் வேகம் இப்படி சொல்லி கொடுப்பவரிடமும் இருக்கிறது, கற்று கொள்ள செல்பவர்களிடமும் இருக்கிறது, ஆனால் நமது பாரம்பரியமான ஜோதிட அணுகுமுறை பற்றி கற்று கொடுப்பவருக்கும் தெரியாது, கற்று கொள்ள சென்றவரிடமும் இருக்காது, அதனால் முறையான ஜோதிடம் புதியதாக படிப்பவருக்கு தெரியாமல் போய்விடுகிறது, இவர்களுக்கு தேவை சீக்கிரமாக “ஜோதிடராக” பணம் சம்பாதிக்கணும் அவ்வளவே எண்ணம் .. இது எல்லாமே மூன்று வாரத்தில் கருவா பொண்ணு சிகப்பழகி ஆக்குகிறேன் எனும் விளம்பரம் செய்யும் “முகசாயம் வியாபாரிகளே!! எப்படியோ கொஞ்சம் காலத்தில் இவர்களை நம்பி போகும் சிஷ்யர்களுக்கும் “முகத்தில் பூசுவார்கள் “””

பின்னர் இந்தமுறையும் ஒருகாலத்தில் புறக்கணிக்கப்படும்,ஆனால் வாக்கியமோ திருக்கணிதமோ அதை பின் பற்றி கணிதம் போட்டு பயிற்சி முறையாக படிபடியாக அனுபவம் வர குறைந்தது 1 முதல் 3 ஆண்டுகள் வரை கற்று கொள்பவரின் ஆர்வம் பொருத்து காலதாமதம் ஆகலாம், தாமதம் ஆனால் தான் என்ன முறையே கற்று கொள்ளலாமே?பின்னால் பலன் தரும்  இல்லை எனில் புதியாதாய் புதுமுறையை கற்று தருகிறேன்  என்பவர்களுக்கு மட்டுமே ஜோதிடம் அதிக லாபம் தரும் என்பதே மறுக்க முடியாத உண்மை இதை நான் எப்போதோ சொல்லியது திரும்ப சொல்ல வேண்டிய சூழல்கள் இன்றும் இருக்கிறது 

Sunday, 10 November 2013

ஜோதிடத்தில் பிரச்சனம் கணிக்கலாம்

 

பலன்காணஅன்பர்கள்  வரும்போது அப்பப்போது நடக்கும் பிரசன்ன விஷயம் மற்றும் நிமித்த சாஸ்திரம் போன்றதே ஜோதிடர்களால் சில விஷயம் அனுமானிக்க முடியும்,என்பால் மிகுந்த அன்பு வைத்து ஜோதிடம் பார்க்க வந்த அன்பர் ஒருவர் [ வெள்ளோடு பக்கம்] அவரின் பெண்ணுக்கு அமைந்த வரன் சுமார் 6 மாதம் இழுத்து அடித்து பின் ஒருநாள் ஏற்பாடு ஆனது, பொருத்தம் பார்க்கவே 50 முறை வந்த மனிதர் ,அவர் தன்மகளுக்கு அமைந்த மாப்பிள்ளை பையன் வீட்டாரோடு வந்து அமர்ந்த போது [ என்னை ஒருநண்பர்  தனது சித்தப்பா இறந்து போனதை சவம் எடுக்க எந்த நேரம் என செல்போனில் நேரம் கேட்டார், இது எதிரில் அமர்ந்து இருந்தவர்களுக்கு தெரியாது, நானும் குளிகை காலம் தவிர்த்து நேரம் சொன்னேன், பின் முன்னால் அமர்ந்து இருப்பவர்களை கவனிக்க அவர்கள் இரு ஜாதகத்தையும் [ முன்னமே பொருத்தம் பார்த்தது தான் அதை கொடுத்தனர், நான் பஞ்சாங்க கணிதம் இட்டு 7 மாதம் தள்ளி [ சென்ற கார்த்திகையில் ] ஆனிமாதம் நாள் குறித்தேன், ஆனால் மாப்பிள்ளை பையனோ மாசிக்கு முகூர்த்தம் கணிக்க சொன்னார், நான் அது பெண்ணின் ஜென்ம மாதம் அதை நான் கணிக்க மாட்டேன் என சொல்லி விட்டு ஆனிதான் தாராபலம் சிறப்பு எனச்சொல்ல அந்த மாப்பிள்ளை பையன் தனக்கு தெரிந்த ஜோதிடருக்கு போன் போட்டுஎன்னிடம் நீட்டி அவரிடம் பேசுங்க” என சொன்னார், நான் மறுத்து விட்டேன், நீங்க வேறுபக்கம் வேண்டும் என்றாலும் நாள் கணித்து கொள்ளுங்க ஆனால் நான் பெண்ணின் ஜென்மமாதத்தில் கணிக்க மாட்டேன் என சொல்ல அந்த மாப்பிள்ளை பையனோ மாசிதான் திருமணம் அமைக்கணும் வாங்க எங்க ஜோதிடரிடம் போகலாம் என்றார், பெண்ணின் அப்பாவுக்கோ தர்மசங்கடம் ஆகிப்போனது, “ அவர் ஜோதிடரே நீங்க தான் மாசியில் முகூர்த்தம் கணித்து தாருங்க நாங்க முதலில் இருந்தே உம்மிடம் தானே பொருத்தம் பார்த்தேன்,முகூர்த்தமும் நீங்களேகணியுங்க என சொல்லியும் நான் ம்றுத்து விட்டேன், பின் வேறு ஜோதிடரிடம் சென்று முகூர்த்தம் கணித்து “மாசித்திருமணத்திற்க்கு நானும் சென்றேன் , நாட்களும் ஓடியது , ஆனால் திருமணம் முடிந்து வைகாசியில் பெண்ணின் தகப்பனார் ”ஹார்ட் அட்டாக்” வந்து போய் விட்டார், இதுபோல அசம்பாவிதம் ஏதேனும் தோன்றும் என மனதில் எனக்கு ஈசன் அருளால் அந்த நேரத்தில் சவம் எடுக்க ஒருத்தர் போன் செய்தார் அல்லவா? அந்த இறந்து போனவருக்கு காலாஷ்டமி 6 மாதம் இருந்தது, அதை கொண்டே நானும் திருமண தேதி கேட்க வந்தவர்களை 6 மாதம் காலாஷ்டமி கணக்கிட்டு தள்ளி இடையே பல சுபமூர்த்தம் இருந்தும் ஆனிமாதத்தை சொன்னேன், ஆனால் விதி என் வாடிக்கையாளர் வெள்ளோடு கவுண்டிச்சிபாளையம் சுப்ரமணி [நாடார்] அவர்களை விட்டு வைக்கவில்லையே? என்ன செய்ய ? அதனால் புதியதாய் ஜோதிடம் பழகிவருவோர்கள் ‘ஜோதிடம் பார்க்க அன்பர் வந்தபோதும் சற்று முன்னரும் என்ன நடந்தது என்பதை கொண்டே அனுமானிக்கலாம் என்பதால் இப்பதிவு

Thursday, 7 November 2013

அஷ்டவித விவாஹங்கள் [8 விதம்]

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கையில் பண்பும் பயனும் அது

அவ்வாறு இல்வாழ்க்கையை சிறக்க இல்லாளின் பங்கு மிக அவசியமாகிறது, 

1) ப்ராஹ்மம், 2) தைவம்,3)ஆர்ஷம்,4) ப்ராஜாபத்யம், 5) ஆஸுரம்

6) காந்தர்வம் 7) ராக்ஷஸம் 8) பைசாசம் அதன் விபரம் :-

1)ப்ராஹ்மம் என்பது ஒழுக்கமும் கல்வியும் நற்க்குடிபிறப்பும் இளமையு அழகும் கொண்ட மணமக்களை முறைப்படி கன்யாதானம் செய்து மணம் முடிப்பது ப்ராஹ்மம் ஆகும், 

2) தைவம் என்பது யாகங்களில் இளமையும் அழகும் கொண்ட மணமகனை தேர்வு செய்து தன் பெண்ணை கொடுப்பது தைவம்ஆகும் 

3)ஆர்ஷம் என்பது மணமகன் தனக்கு பெண் தர மணமகளின் தகப்பனுக்கு பசுவும் கன்றும் அல்லது இரண்டுகாளை மாடு கொடுத்து பெண்ணை திருமணம் செய்வது 

 4) ப்ராஜாபத்யம் என்பது நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு வேதத்தற்க்கு கட்டுபட்டு தர்மபடி வாழச்சொல்லி கன்னிகையை தானம் செய்வது  ப்ராஜாபத்யம் ஆகும்,

5) ஆஸுரம் என்பதுதன்வீட்டுக்கு தெரியாமல் மணமகன் பெண்ணின் தந்தை அல்லது அவள் உறவுக்கு பணம் அதிகம் தந்து மணம்முடிப்பது ஆஸுரம் ஆகும்

6) காந்தர்வம் ஒரு ஆணும் பெண்ணும் ஒருவர்மேல் ஒருவர் காதல் கொண்டு காமத்தில் தாலிகட்டாமல் உறவு கொள்வது என்பது காந்தர்வம் ஆகும்

7) ராக்ஷஸம் என்பது ஒரு பெண்ணின் மேல் ஒருதலைக்காதல் கொண்டு அவளை உறவினர்கள் தடுத்தும் உறவினர்களை  துன்புறுத்தி பெண்ணையும் துன்புறுத்தி தூக்கி சென்று “பலாத்காரம் “ செய்ய அது ராக்ஷஸம் ஆகும் 

கடைசியாக வருவதுதான்

8) பைசாசம் என்பது உறங்கி கொண்டு இருப்பவளையோ அல்லது மயக்கத்தில் இருப்பவளையோ  இயல்பாக மனநிலை சரியில்லாத பெண்ணையோ அல்லது ஒழுக்கம் இல்லாத பெண்ணை பலவந்தமாக உறவு கொள்வது ,அவ்வாறு செய்பவன் பாவிகளுக்குள்ளும் மஹாபாவியாகி விடுகிறான் என மனுதர்ம சாஸ்திரம் சொல்கிறது 

[ நன்றி :- அம்மன் தரிசனம் 2011 தீபாவளி மலர் ]